புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டல ஆராதனை முறைமைகளின் (Liturgy) வரலாறு

திருநெல்வேலி திருமண்டல ஆராதனை முறைமைகளின் (Liturgy) வரலாறு
நமது CSI liturgy என்பது மிக ஆழமான கருத்துடையது. இதன் ஒவ்வொரு எழுத்தும், நடையும் வேதத்தின்படியேயும், இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரியும் வடிவமைத்து உள்ளனர். நான் ஏற்கனவே சொன்னபடி நமது liturgy ல் நம் முன்னோர்கள் சில மாறுதல்களை ஏற்படுத்தினர். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட CSI என்னும் சபை ஒன்றியத்திற்கு பல தரப்பட்ட மக்கள் அங்கத்தினராக இருந்தனர். அதில் ஒன்று நமது திருநெல்வேலி திருமண்டலம்.
பல சபையினர் அங்கத்தினராக இருந்ததால் அனைத்து சபைகளையும் ஒன்றிணைக்கும் விதமாக ஒரு பாரம்பரியத்தை விட்டுவிட்டத படியும், அதே நேரத்தில் அனைத்து சபையினருக்கும் பொதுவாகவும் ஒரு சபை Liturgy ஐ உருவாக்கினர்.
CSI 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்த வருடம் 1948 ஆம் ஆண்டு CSI சினாட் ஒரு liturgy கமிட்டி ஐ உருவாக்கியது. இதில் சில உலக புகள் பெற்ற வேத அறிஜர்கள் ஒன்றிணைந்து சபை கிரமங்களை ஒழுங்குபடுத்தினர். Rev. லெஸ்லி பிரவுன் (உகாண்டா பிஷப்), Rev. Macphail,T.S Garrett, G.S. Azariah, E.L. Anantarao, E.Tychicus and Cannon Thomas Sitther இவர்கள் அனைவரும் அந்த கமிட்டி அங்கத்தினரே.
இவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து ஒழுங்குபடுத்திய திருவிருந்து ஆராதனை முறைமை 8th Jan, 1950 ஆம் ஆண்டு முதன் முதலாக நடைமுறைபடுத்தப்பட்டது. 1950 to 1960 வரையான ஆண்டுகளில் சினாட் அனைத்து சபைகளுக்கும் இந்த முறையை பழக்கப்படுத்தியது.
*ஒன்றினைக்கப்பட்ட CSI Liturgyன் திருத்தப்பட்ட விவரங்கள்*
1.முதன் முதலாக 1950 ஆம் ஆண்டு திருவிருந்து ஆராதனை முறையை நடைமுறைபடுத்த பட்டது. அதன் பின்பு இருமுறை அதாவது 1954, 1962 ஆம் ஆண்டுகளில் சினாடால் திருத்தப்பட்டது.
2.திடப்படுத்துதல் ஆராதனை முறைமை 1950 ஆண்டு கொண்டுவரப்பட்டு 1960 ஆம் ஆண்டு மறுதிருத்தம் செய்யப்பட்டது.
3.ஆராதனையின் தொடக்கத்தில்வாசிக்கும் வேத வசனங்கள் மற்றும் சில வாசிப்புகள் 1954 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 1956 ஆம் ஆண்டு மறுதிருத்தம் செய்யப்பட்டது.
4.ஞானஸ்தான ஆராதனை முறைமை 1950 ஆம் ஆண்டு முறைபடுத்த்பட்டு, 1960 ஆம் ஆண்டு மறுதிருத்தம் செய்யப்பட்டது.
5.காலை, மாலை ஆராதனை 1958 ஆம் ஆண்டு முறைபடுத்தப்பட்டது. எனவே 1962 ஆம் ஆண்டு இதற்கான முறைமை சேர்க்கப்பட்டது.
6.திருமண ஆராதனை முறைமை 1960 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 1962 ஆம் ஆண்டு மறு திருத்தம் செய்யப்பட்டது.
7.இறுதி சடங்கிற்கான ஆராதனை முறைமை 1960 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 1962 ஆம் ஆண்டு மறு திருத்தம் செய்யப்பட்டது.
8.சுருக்கமான பரமண்டல ஜெபம் 1962 ல் சேர்க்கபட்டது.
இவை அனைத்தும் CSI சினாட் Executive committee ஆல் ஒப்புதல் செய்யப்பட்டு 1963 ஆம் ஆண்டு உள்ள பாடல் புத்தகத்திலும், ஜெப புஸ்தகத்திலும் வெளிடப்பட்டது.அதன் பின்பாக சில சிறிய திருத்தங்கள் செய்யப்பட்டு oct 1985 ஆம் ஆண்டு வெளிடப்பட்டது.. 1985 பிறகும் பல திருத்தங்களை மேற்கொண்டது அதை அனைத்தும் மற்றொரு பதிவில் காணலாம்.
*ஆதாரங்கள்*
CSI Common worship book, Some CSI official Sites, Some Theological Theses.
*Translated and collected by Sujith*
TDTA பாரம்பரிய மீட்பு குழு

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory