புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

காடன்குளம் - கழுதூர் திருச்சபை வரலாறு

காடன்குளம் - கழுதூர் திருச்சபை வரலாறு
200 ஆண்டுகளுக்கு முன்பு . . . காடன் , கழுவன் என்ற இரு சகோதரர்கள் குறும்பூர் என்ற ஊரில் வசித்தார்கள் . பனை ஏற்றுத் தொழிலை திறம்படச் செய்து வந்தார்கள்.
பதநீர் , கருப்புக்கட்டி , நுங்கு , பனங்கிழங்கு என்ற பண்டங்கள் தாராளமாகக் கிடைத்தன. அவர்களுள் கிளி என்ற இளம்பெண் மகா அழகு வாய்ந்தவனாய் இருந்தாள்.
மேல் சாதி இளைஞர்கள் பலருக்கு அவள் மீது கண் காதலாக இல்லாமல் வெறியாக மாறியது பனை ஏறி மகன்தானே என் அற்பமாக எண்ணி சரசமாடினர் அவள் பதனீர் காச்சும் கொள்ளிக் கம்பை காட்டி எச்சரித்தாள்.
இன்னொரு நாள் அவள் தனியாக இருக்கும்போது அவளைத் தூக்கிச் சென்று மோசம் செய்தனர்.
இதையறிந்த கார்டனும் கழுவனும் கொதித்தெழுந்தனர் பெரிய அரிவாளால் பையன்கள் இருவரையும் கொலை செய்தனர் கிளியையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு இருவருமாக மேற்கே சென்று ஒளிந்தனர்.
ஆழ்வானேரிப் பக்கம் பனைகள் அடர்ந்து வளர்ந்திருந்த வனப்பகுதியில் வந்து தங்கினர் பனைத் தொழிலை அங்கு திறம்பட செய்தனர்.
இருவருமாகச் சேர்ந்து இரு ஊர்களை உண்டாக்கினார்.
காடன் குடியிருந்த இடம் காடன்குளம் என்றும் , கழுவன் குடியிருந்த இடம் கழுதூர் என்றும் அழைக்கப்படலாயிற்று.
இரு ஊர் மக்களும் பனைத் தொழிலையும் விவசாயத் தொழிலையும் செய்து இவர்களையும் செழிப்பான கிராமங்களாக்கினர்.
இவர்கள் வாழ்ந்த ஊர்களில் பதநீர் கருப்பட்டி போன்றப் பொருட்கனைப் பொது உடைமை ஆக்கினார்.
இதன்மூலம் மக்களின் அன்பையும் பெற்றனர்.
மேல சாதியினரின் சுரண்டல்களும் கொடுமைகளும் அதிகமாக இருந்தன காய்ச்சிய கருப்பட்டிகளை வாயில் போட்டுப் பார்க்குமுன் பாய்ந்துவந்து பாவிகள் பிடுங்கிச் செல்வர்.
இவ்வேளையில் கிறிஸ்தவம் அறிமுகமானது எங்கள் தலை தப்பியது கல்விக்கண் திறந்தது கிறிஸ்தவர்களான பிறகு கல்வி கிடைத்தது மனிதர்கள் என்ற உரிமை கிடைத்தது.
நாகரீகம் தலை நீட்டியது எங்கள் உழைப்பு எங்களுக்கே சொந்தமானது.
நாளடைவில் பனையேற்றுத் தொழிலை தங்கள் சொந்த சாதி மக்களே இழிவாகஎண்ணினர் பனைத் தொழில் அருகியது விவசாயம் பெருகியது.
இரட்டைக்கிராமங்களும் உழைப்பினால் உயர்ந்தன.
------------------------------------------------------------
👉🏻 ஊரும் பேரும் வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது.
------------------------------------------------------------
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory