அருள்பெருந்திரு எட்வர்ட் சார்ஜெண்ட்
( C . M . S . ) 1861 - 1989
இங்கிலாந்து இளைஞரான எட்வர்ட் சார்ஜென்ட்டை சென்னை கிறிஸ்தவக் கமிட்டியினர் பாளையங்கோட்டைக்கு அனுப்பினர் , 07 . 07 . 1835 ஆம் நாளில் பாளையங்கோட்டை வந்து சேர்ந்தார்.
அன்று முதல் அகண்ட திருநெல்வேலியில் ஓர் ஒப்பற்ற அருட்தொண்டராகவும் , அரும்பெரும் பேராய ராகவும் , சபைகளைக் கட்டிய சிற்பியாகவும் 54 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
*சி . எம் . எஸ் . மிஷனெரியின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் சார்ஜென்ட்.*
அப்பொழுதுதான் நெப்போலிய யுத்தங்கள் நடந்து முடிவுக்கு வந்து கொண்டிருந்தன ( 1815 ) .
ஆனாலும் பிரான்ஸ்க்கும் , இங்கிலாந்துக்கும் இடையேயான பகை தீரவில்லை.
சார்ஜென்ட்டும் அவரது துணைவியாரும் பாரிஸ் நகரில் இருக்கும்போது , அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
பிள்ளையின் பெயர் *எட்வர்ட்*. பின்பு சார்ஜென்ட் தம்பதியர் கிழக்கு இந்தியக் கம்பெனியின் பணிக்கு மாற்றப்பட்டு சென்னை நகர் வந்து சேர்ந்தனர்.
எட்வர்ட் பிறந்த எட்டே மாதங்களுக்குள் தந்தையான சார்ஜென்ட் இறந்துபோனார்.
எட்வர்ட்டின் தாயார் மகனை இந்தியக் குருவான வில்லியம் சாயர் வசம் இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டார்.
வில்லியம் சாயர் எட்வர்டை தம் பிள்ளைகளில் ஓன்றாக அன்புடன் நேசித்தார்.
எட்வர்ட் சார்ஜென்ட் என்றே அழைத்தார்கள் . ஆயினும் *சார்ஜென்ட் என்ற பெயரே நிலைத்துவிட்டது.*
சார்ஜென்டிற்கு பள்ளிப்பருவம் வந்தது . இராணுவ சேவையினரின் அநாதைப் பிள்ளைகளுக்கென்று ஒரு சிறந்த பள்ளி சென்னையில் இருந்தது . அதில் சேர்ந்து ஆரம்பக் கல்வியைக் கற்றார்.
அதன்பின்பு சென்னையில் இருந்த இலக்கியப் பள்ளியில் கற்றுத் தேர்ந்தார்.
அவர் பயின்ற பள்ளிகளிலும் , சாயர் இல்லத்திலும் வேத அறிவை நன்கு வளர்த்துக் கொண்டார்.
அக்காலங்களில் இராணுவத்தில் பணிபுரிந்து இறந்துபோன தகப்பன் இல்லாத பிள்ளைகளுக்கு அரசுப் பணி எளிதில் கிட்டும்.
அதன்படி எட்வர்ட்டிற்கும் அரசுப்பணி கிடைத்தது.
ஆனால் அவர் திருமறையில் அதிக வாஞ்சை கொண்டு திருச்சபையில் சாதாரண ஊழியம் செய்வதையே விரும்பினார்.
எனவே , 1831 ஆம் ஆண்டு ஊழியர்களைப் பயிற்றுவிக்கும் இறையியல் கல்விக்கூடத்தில் பயின்றார் .
*அப்பொழுது அவர் வயது 15 . பதினாறாம் வயதில் சி . எம் . எஸ் . இயக்கத்தில் சேர்ந்தார்.*
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment