தலைமேல் சுழன்ற கத்தி தலைப்பாகையையும் தொடாமல் கழன்றது*
சிங்களவரில் பலர் தீவிர பௌத்தர்கள் . ஒரு சமயம் ஒரு சிங்களப் பெண் கிறிஸ்தேசுவை ஏற்றுக்கொண்ட பொழுது , மூர்க்கவெறி கொண்ட ஒரு சிங்களவன் அம்மை யாரும் ஜெஸி , ஆலிஸ் என்ற இரு மிஷனெரி நண்பர்களு மிருந்த சிற்றிலுக்குள் புகுந்து விட்டான் . அவன் கையிலோ கசாப்புக் கடைக்காரன் கத்தி ! ஜெஸி , ஆலிஸ் , ஏமியும் முழந்தாளிட்டு ஜெபிக்க ஆரம்பித்தனர்.
ஜெபித்தனர் ஜெபித்தனர் , ஜெபித்துக்கொண்டேயிருந்தனர்.
இறுதியில் அம்மையார் கண் திறந்து பார்த்தபொழுது அந்த மனிதன் இவர்கள் தலைக்குமேல் கத்தியைச் சுழற்றிக்கொண்டிருந் . தான்.
மூவருமாக அவனை ஏறிட்டுப் பார்த்த பொழுது அவன் தான் தேவதூதர்கள் முன்னிலையில் நிற்பதாக உணர்ந் தானோ ? அவனுடைய மூர்க்கம் கழன்று கொண்டுவிட்டது.
சுழற்றிக்கொண்டிருந்த கத்தியுடன் வெளியேறினான்.
அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும் மூர்க்க னுடைய கத்திக்கும் தப்புவிப்பார்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
No comments:
Post a Comment