புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இரத்தினம் என்னும் உபதேசியாரும் மாம்பழச்சங்கமும்

டோனாவூர் உபதேசியாரும் மாம்பழச்சங்கமும்
1833 ஆம் ஆண்டு காலரா நோயினால் மக்கள் பலர் இறந்தனர் , குடும்பங்கள் பல் முற்றிலும் அழிந்தது . அநேகக் குடும்பங்களில் மனைவி , கணவன் , பிள்ளைகள் அநாதைகளாயினர் , டோனாவூரிலும் இச்சம்பவம் நடந்தது . அவ்வாண்டு டோனாவூரின் தலைமை உபதேசியாராக இருந்தவர் இரத்தினம் என்னும் உபதேசியார்.
இவர் சபை வளர்ச்சிக்கான செயல்களை மிகவும் தீர்க்கமாகச் செயல்படுத்துபவர் ; மக்கள் மீது அதிகக்கரினையுடையவர் , இவர் காலராவால் உறவினர்களை இழந்தவர்களுக்கு ஏதாகிலும் உதவ வேண்டுமென்று எண்ணினார். *சமய சகாய நிதி ( Friend in Inced Sangam ) என்ற ஒரு சங்கம் அமைத்து அதன் மூலம் ஏழை விதவைகளின் பராமரிப்புக்காக ஒரு நிதி சேர்த்து உதவ வேண்டும் என்ற தனது எண்ணத்தை ரேனியசிடம் தெரிவித்தார்.*
இது 1833ம் ஆண்டிலேயே ரேனியசின் ஒப்புதலோடு போனாவூர் சேகரத்திலுள்ள அனைத்துச் சபைகளிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டது , பின்னர் இதன் முக்கியத்துவம் பிற சேகரங்களிலும் அறியப்பட்டு 9 . 7 . 1834 . முதல் திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலுமுள்ள அனைத்துச் சபைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் 1838 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை மாதம் திருநெல்வேலி திருச்சபை *“ மாம்பழச்சங்கம் ”* என்ற பெயரில் வருடாந்திர பண்டிகையாக இதை நடத்துகிறது.
இவ்விழாவில் சேகரிக்கப்படும் திருச்சபையின் நிதி ஏழை விதவைகளின் பராமரிப்பிற்காகச் செலவிடப்படுகிறது , இந்தப்பண்டிகை நடை பெறும் காலம் மாம்பழம் அதிகமாக விற்கப்படும் காலமானதால் இப்பண்டிகையில் மாம்பழங்கள் அதிகளவில் விற்பனைக்காக வைக்கப்படும்.
இதனால் இப்பண்டிகை மாம்பழச்சங்கம் என்று பெயர் வந்தது என்ற புதிய வரலாறும் உண்டு.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory