மிஷனரி டைட்ரிச் போன்ஹோபர் நினைவு தினம்* ஏப்ரல் 09
தீய சக்திகளை தகர்த்தெறியுங்கள் ஹிட்லரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?
வரலாற்றுப் பாட புத்தகத்தில் படித்திருக்கக் கூடும்.
கொடுங்கோலன் இவன் . ஒரே சமயத்தில் , 6 , 00 , 000 யூதர்களை ஈவு , இரக்கமின்றி கொன்று குவித்தவன் , நாசிச கொள்கைகளை வலியுறுத்தி , மக்களை நாசம் செய்தவன் . டைட்ரிச் போன்ஹோபர் , ஹிட்லர் அரசாண்ட ஜெர்மனி தேசத்தில் , பிரஸ்லூ என்னும் நகரில் பிறந்தவர்.
சிறு வயதிலேயே போதகராக வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்தது . ஆயினும் , ஆண் ட வர் அழைத்தாலன்றி இப்பணிக்கு செல்லக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தார் .
ஆண்டவரின் அழைப்பை உணர்ந்த இவர் , பெற்றோரின் உதவியால் , இறையியல் படிப்பை தொடர்ந்தார் . பின்னர் , முதுநிலைப் பட்டமும் பெற்றார் . தாம் படித்த கல்லூரியிலேயே ஆசிரியரானார்.
அப்பொழுது பரவி வந்த நாசிச கொள்கைகளைக் குறித்து , ஆழமாக சிந்தித்தார் . மக்களை தவறாக வழிநடத்தும் இப்போதனைகளை முறியடிக்க வீரம் கொண்டார்.
நியோமுல்லர் , மார்க்ஸ் என்பவர்களுடன் இணைந்து அக்கொள்கைகளை எதிர்த்தார்.
1933ம் வருடத்திலிருந்து 1935ம் வருடம் வரை இலண்டனில் ஜெர்மன் மொழி சபைகளின் போதகராக செயல்பட்ட இவர் , தன் தாய் நாடாகிய ஜெர்மனி திரும்பினார்.
பல புத்தகங்களை எழுதி , மக்களை விழிப்புணர்வின் பாதையிலே வழி நடத்தினார் . இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது . ஹிட்லரின் சதிகளை முறியடிக்க , மக்களை திரட்டினார் .
இதனால் , இவர் பெருந்துன்பத்துக்கு உள்ளானார் . மறைவாக தங்கியிருந்து கிறிஸ்துவின் தொண்டர்களை பெலப்படுத்தினார்.
எனினும் , இவர் தங்கியிருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது .
1943ம் ஆண்டு கைது செய்யப்பட்டார் , கிறிஸ்துவுக்குள் தன் கொள்கைகளை வலியுறுத்தியதை விரும்பாத அதிகாரிகள் 1945ம் ஆண்டு *இதே நாளில் இவரைத் தூக்கிலிட்டனர்.*
எனினும் , இவர் பற்ற வைத்த சிந்தனைகள் இன்றும் எரிந்து கொண்டிருக்கின்றன.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment