புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அனாதைச் சாலை

அனாதைச் சாலை”*
1876ஆம் ஆண்டு முதல் 1908ஆம் ஆண்டு வரை மர்காஷிஸ் நாசரேத்தில் , ஊழியம் செய்தார் . மர்காஷிஸ் நாசரேத்தில் ஊழியம் செய்ய வந்தபோழுது பெரும் மழை , பஞ்சம் , காலராவினால் மக்கள் மடிந்தார்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர்.
அநேகர் அனாதைகளாயினர்.
இவர்களைத் தங்க வைக்க மர்காஷிஸ் ஒரு இல்லத்தைத் திறந்தார்.
அந்த இல்லம் *“அனாதைச் சாலை”* என அழைக்கப்பட்டது.
1877 இல் இது ஆரம்பிக்கப்பட்டது.
1878 இல் கைத்தொழிற் பள்ளியாக மாறியது.
மர்காஷிஸ் அனாதை சாலையில் தங்கிப் படித்தப் பெண்களுக்கு ஏற்றத் துணையைத் தேடி திருமணமும் செய்து வைத்தார்.
1870 இல் Rev . Dr . J . M . ஸ்ட்ராஹன் ஐயரால் நாசரேத்தில் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.
1882 இல் மருத்துவமனைக்கு வருவாய் இல்லாததினால் மர்காஷிஸ் ஐயர் சிகிச்சை பெற வருகிற ஒவ்வொரு நோயாளியும் *ஒரு அணா*, கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அந்த ஆண்டு சிகிச்சை பெற்ற வியாதியஸ்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. ஆதலால் , மர்காஷிஸ் ஐயர் அடுத்த ஆண்டு கட்டணத்தை விலக்கிக் கொண்டார் .
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory