கனம் மிஷனரி ராக்லாந்து பிறந்த தினம்*
இயேசுவிற்காக . . . அது ஓர் கிராமம்.
இயேசுவைப் பற்றி அறியாதவர்கள்.
அறி ய வு ம் வி ரு ம் பாத வர் க ள் . மூ டப் பழக்க வழக்கங்களுக்குள் மூழ்கி கிடந்தவர்கள்.
இந் தி ய ரி ன் இ ழி வு நி லை ைய ம ா ற் ற இங்கிலாந்திலிருந்து வந்தார் ராக்லாண்ட்.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் , ஆயராகவும் , கேம்ப்ரிட்ஜ் கல்லூரியின் மேற்பார்வையாளராகவும் பணியாற்றியவர்.
வ ட தி ரு நெல் வே லி யி ல் அமைந்திருந்த கிராமங்களுக்கு நற்செய்தியைப் பறைசாற்ற உள்ளே நுழைந்தார்.
நுழைந்தது தான் தாமதம் . கற்களும் , தூசிகளும் அவரை நோக்கி வீசப்பட்டன.
பிராமணன் ஒருவன் தடியால் தலையில் அடித்தான் , இடம் விட்டு நகரும் முன்னே சரமாரியாக அடிகள் விழுந்தன.
நடக்கக் கூட தெரியாத சிறு பையனும் கூடகல்லைத் தூக்கி எறிந்ததுதான் பரிதாபம்.
எதிர்ப்புகளைக் கண்டு பழகிப்போன ராக்லாண்ட் , அவர்களையும் கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார். பல ஆலயங்கள் சிவகாசி மற்றும் சுற்றுப்புறங்களில் கட்டப்பட்டன. மழை , வெயில் , பசி , அவமானப் பேச்சுக்கள் , சரீர துன்பங்கள் எதையும் பொருட்படுத்தாது தன் ஊழியப் பணியைத் தொடர்ந்தார்.
*அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் பழக்கமுடையவர்.* அதிகாலை 4 மணிக்கே ஊழியத்திற்கு சென்று விடுவார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுவிசேஷத்தை அறிவித்த சுவிசேஷச் செம்மல்.
பசியின் களைப்பினால் *தொப்பியில் கூழ் வாங்கிக் குடித்து விட்டு* மீண்டும் அலைந்து நற்செய்தி அறிவித்தவர்.
ஓயாத அலைச்சலினால் அவர் உடல் நலிந்தது . காச நோய் அவரைத் தாக்கியது. இரத்த வாந்தி எடுத்தார் . விக்கிரக வணக்கத்தாரை இயேசுவின் பாதையில் நடத்தியராக்லாண்ட் தமது 44வது வயதில் மரணத்தைத் தழுவினார்.
நற்செய்தி செம்மலாக வாழ்ந்து காட்டியராக்லாந்தின் பிறந்தநாள் இன்று
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
No comments:
Post a Comment