புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

நாற்பது நாள் ராப்பகல்

பாமாலை 90 - நாற்பது நாள்
பாமாலை 90 – நாற்பது நாள் ராப்பகல்
(Forty days and forty nights)
இப்பாடலை எழுதிய ஜார்ஜ் ஸ்மிட்டன் (George Hunt Smyttan) 1825ம் ஆண்டு பிறந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1845ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தபின்னர் 1849ம் ஆண்டு ஆயர் பட்டம் பெற்றார். சிறு கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுடைய இவர், லெந்து காலத்தைக் குறித்து மூன்று வெவ்வேறு கவிதைகளை எழுதினார். அதில் ஒரு கவிதைதான் ‘நாற்பது நாள் ராப்பகல்’ என்று உலகம் முழுவதும் பாடப்படும் பாடலாக இசை வடிவம் பெற்றது. இப்பாடலுக்கான ராகத்தை எழுதியவர் யார் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் நீடிக்கின்றன. இருப்பினும், மார்ட்டின் (Martin Herbst) என்பவரது பெயரே ‘இப்பாடலுக்கு இசையமைத்தவர்’ என்று பல்வேறு பாடல் புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
‘நாற்பது நாள் ராப்பகல்’ 1856ம் ஆண்டு முதன்முதலில் அச்சிடப்பட்டு இன்றளவும் உலகமெங்கும் தபசு காலங்களில், குறிப்பாக ‘சாம்பல் புதன்’ அன்று பாடப்பட்டு வருகிறது. ஜியார்ஜ் ஸ்மிட்டன் 1870 ஆண்டு ஜெர்மன் தேசத்தில் காலமானார்.
நாற்பது நாள் ராப் பகல்
வனவாசம் பண்ணினீர்
நாற்பது நாள் ராப் பகல்
சோதிக்கப்பட்டும் வென்றீர்.
2. ஏற்றீர் வெயில் குளிரை
காட்டு மிருகந் துணை
மஞ்சம் உமக்குத் தரை,
கல் உமக்குப் பஞ்சணை.
3. உம்மைப் போல நாங்களும்
லோகத்தை வெறுக்கவும்
உபவாசம் பண்ணவும்
ஜெபிக்கவும் கற்பியும்.
4. சாத்தான் சீறி எதிர்க்கும்
போதெம் தேகம் ஆவியை
சோர்ந்திடாமல் காத்திடும்
வென்றீரே நீர் அவனை
5. அப்போதெங்கள் ஆவிக்கும்
மா சமாதானம் உண்டாம்
தூதர் கூட்டம் சேவிக்கும்
பாக்கியவான்கள் ஆகுவோம்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory