மிஷனரி ஜோன் ஆப் ஆர்க் நினைவு தினம்
மே 31
மே 31
1431ம் ஆண்டு இதே நாள் மே 31 . பத்தொன்பது வயது இளம்பெண் . மரத்தில் கட்டப்பட்டவளாய் தீயில் உயிருடன் கொளுத்தப்பட்டாள்.
கொடுங்கோலர்கள் வேடிக்கை பார்க்க , அத்தீயின் நடுவே அவள் உதடுகள் இயேசுவே . . . இயேசுவே என்று முணுமுணுக்க உடல் எரிந்தது . உயிர் பிரிந்தது .
16 வயதில் ஆண்டவரிடமிருந்து இறைச் செய்தியை பெற ஆரம்பித்தாள் ஜோன் ஆப் ஆர்க் .
அசரீரியான தொனிகளைக் கேட்டு மக்களிடம் கூறுவது அவள் வழக்கம் .
அன்று “ உடனே போய் , பிரான்ஸ் நாட்டு மன்னருக்கு உதவி செய் , அவர் தம் நாட்டை திரும்பப் பெறத் துணை புரிவாயாக " ! கட்டளை வந்ததும் வீரமுடன் எழும்பினாள் ஜோன் . தன் தலை முடியைக் கத்தரித்தாள் . போர் வீரர் போன்று உடையணிந்தாள்.
மன்னரைச் சந்தித்து நடந்ததை விளக்கினாள் . திருச்சபைத் தலைவர்கள் கூட்டம் ஜோனைப் பரிகாசம் செய்தது.
இப்பெண்ணால் என்ன செய்ய முடியும் ? என்று ஏளனம் செய்தனர் . மன்னர் யோசித்தார் . சிறு படை ஒன்றைக் கொடுத்தார் .
அதன் உதவியால் ஆர்லியன்ஸ் என்ற நகரைக் கைப்பற்றினாள் .
நான்கு வெற்றிகளைக் குவித்தாள் ஜோன் . மதவாதிகள் ஜோனை சந்தேகித்தனர் . கடவுள் தங்களிடம் பேசாது சிறு பெண்ணிடம் பேசியதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவள் புரட்டுக்காரி என்று தீர்ப்பிட்டனர் .
திருச்சபைக்குப் புறம்பாக்கப்பட்டாள்.
தனக்கு எதிராகக் கூறப்பட்ட அத்தனை அவதூறுக்கும் சரியான பதிலை ஆணித்தரமாகக் கூறினாள் .
இது மதவாதிகளை நடுங்கச் செய்தது .
எனினும் ஜோனுக்கு மதவாதிகள் மரண தண்டனை விதித்தனர் .
ஜோன் தன் வாழ்வைப் பரிபூரணப்படுத்தினாள்.
கடவுள் தனக்கு இட்ட பணியை நிறைவேற்றி முடித்தாள் .
புனிதர் என்ற பட்டமும் பெற்றாள்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment