புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

புங்கம்பாடி

சி.எஸ்.ஐ நல்ல சமாரியன் ஆலயம், புங்கம்பாடி.
Rev W.T.M. Clewes M.A அவர்களுக்கு 35வது ஆண்டு நினைவஞ்சலி
Rev Willam Thomas Morris Clewes 1891ஆண்டுஅக்டோபர் 17 தேதி இங்கிலாந்து நாட்டில்
ஈரோடு மாநகர் பகுதியில் ‘குளுஸ்துரை’ அழைக்கபெறும் இவர் பிரப் துரை (Rev A.W Brough) பாப்லி துரை (Rev H.A.Popley) ஆகியோர் ஈரோடு பகுதியில் பணிசெய்த காலத்தில் 1923 ஆண்டுஈரோடு வந்தார் இவருடன் மனைவி எடனா ஜோன்பேக்கர் (Edna Jane Baker) வந்தார்கள். 
அன்றைய காலகட்டத்தில் (1923) பிரப் மற்றும் பாப்லி அவர்களும் நிறுவிய பள்ளிக்கூடங்கள் 94ஆகும். இனிமேல் புதிய பள்ளிகளை திறப்பதை விட ஏற்கனவே துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற பள்ளிகளை பலப்படுத்தி ஒருங்கிணைக்க முடிவெடுத்தார்கள். இதன் பயன்னாக பள்ளிகளின் எண்ணிக்கை உயரவில்லை.
இலண்டன் மிஷன் மூலம் 1923 ஆண்டு குளுஸ் துரை அவர்கள் ஈரோடு பணித்தளத்திற்கு வந்தவுடன் கல்வி முன்னேற்த்திற்கு தனது முழுகவனத்தையும் செலுத்தினார். இவரே கல்வி முன்னேற்றத்திற்கும் முழுக்காரணமாக இருந்தார். கல்வியில் திறமை மேம்பாடு அடையவும் கிறிஸ்துவ மார்க்கத்தின் தாக்கம் பள்ளிகளில் ஏற்படவும் பெரும் காரணமாக இருந்தவர் இவரே. இன்றும் கூட நமது சி.எஸ்.ஐ ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஒரு பகுதி ‘Clewes Block’ என்று உள்ளது. இதுவே இவரின் கல்விப் பணிக்கு சான்று.
குளுஸ் துரை மனைவி எடனா அவர்கள் இவருடன் வந்த போது பிரப்துரையால் தொடங்கப்பட்ட ஈரோடு சி.எஸ்.ஐ மருத்துவமனை 1923 ஆண்டு மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டு மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு முதல் S.R.N யாக Edna Jane Baker அவர்கள் மருத்துவ பணிகளை தொடங்கினார். இவர் மருத்துவ பணிகளை ஈரோடு பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நடைபயணமாகவே சென்று செய்துள்ளார்.
குளுஸ் துரை அவர்கள் 26 ஆண்டுகள் (1923-1949) ஈரோடு பணித்தளத்தில் பணியாற்றி உள்ளார். 1946 ஆண்டு புங்கம்பாடிகிராமத்தில் ஆலயம் இவருடைய பங்களிப்பால் கட்டப்பட்டு 25.12.1946 ஆண்டு ஆலயம் மங்கலப்படைப்பு செய்யப்பட்டது. இன்றைய நிலையில் ஏறத்தால 70 ஆண்டுகள் ஆன நிலையில் ஆலயம் சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக புதிய ஆலயம் (CSI Good Samartian Church ,Pungambadi) தற்போது கட்டப்பட்டு இரண்டு வருடம் ஆகின்றன.
இவர் நினைவு நாளில் இவர் செய்த பணிகளை நினைவு கூறுவோமாக. சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர் நலிவடைந்தோர் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றி சிறூமைப்பட்டவர்கள் மேல் சிந்தையுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்ற சத்தியத்திற்கு சான்றாக விளங்கிவர்கள் மிஷனரிகள்.


லைய்யி என்ற இடத்தில்பிறந்தார். இந்த நன்நாளில் இவரது நினைவுகளை நினைவுகூற இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்துள்ளார்.
நன்றி ஆல்பட் ரமேஷ்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory