*மிஷனரி அதோனிராம் ஜட்சன் நினைவு தினம்* ஏப்ரல் 12
வயது 20 . வாழ்க்கையை ரசிக்கவும் , ருசிக்கவும் நினைக்கும் பருவம் . அதோனிராம் ஜட்சன் வாழ்வை அனுபவிக்க புறப்பட்டார்.
இரவு நேரம் சத்திரம் ஒன்றில் இடம் கேட்க , காலியாயிருந்த ஒரே அறை கிடைத்தது.
நிம்மதியாய் தூங்க நினைத்தவரின் நிம்மதியை பக்கத்து அறையில் தங்கியிருந்த நோயாளி கலைத்துப் போட்டான் . நோயாளியின் மரண ஓலங்கள் தூக்கத்தை வர விடாமல் தடுத்தது.
மறுநாள் காலையிலேயே ஒருதுக்க செய்தி . நோயாளி மரித்துவிட்டான் என்பதே அது . ஜட்சன் தன் பயணத்தை துவங்கும் முன் அந்நோயாளியைப் பற்றி அறிய மிகுந்த ஆவல் கொண்டார் .
அந்தோ ! அதோனிராமுக்கு உலகமே ஒரு நிமிடம் தாறுமாறாக சுற்றியது.
தன் உயிர் நண்பனே அவன் என்பதை அறிந்ததும் அதிர்ந்து போனார் . *" கடவுள் இல்லை "* என்ற கொள்கையுடைய அவனின் கதை முடிந்து போனதை எண்ணிகண்ணீர் விட்டார்.
1808ல் ஜட்சன் தன்னை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தார்.
மேரி ஹசில்டைன் என்பவரை மணந்தார் . இருவருமாக இறைப்பணி செய்ய இந்தியாவந்தனர்.
இந்தியாவின் இருண்ட காலம் அது . ஒளியை ஏற்றுக் கொள்ள முடியாததால் ஜட்சன் பர்மா நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார்.
பர்மிய மொழியை கற்கலானார் . பர்மாவில் நடைபெற்ற கொடுங்கோல் ஆட்சியால் இரண்டு வருட கடுங்காவல் தண்டனை பெற்றார் ஜட்சன் . மீண்டும் விடுதலையடைந்து பர்மிய மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்து பர்மா மக்களின் வாழ்வில் ஒளியேற்றினார் .
*தன் குழந்தைகளையும் , மனைவியையும் மண்ணில் விதைத்த ஜட்சன்* , கடல் யாத்திரையின் போது மரித்து கடலில் அடக்கம்பண்ணப்பட்டார்.
ஜட்சன் ஏற்றிய தீபம் இன்றும் பர்மாவில் சுடர்விட்டு பிரகாசிக்கின்றது .
வாய்ப்பு கிடைத்தால் அவருடைய முழு சரித்திரத்தையும் வாசித்து பாருங்கள் மறுபடி பிறக்க வாய்ப்பு உண்டு
------------------------------------------------------------
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
No comments:
Post a Comment