புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ரேனியஸின் முதல் நற்செய்திப் பயணமும்

காஞ்சிபுரம் திருவிழாக் காட்சியும் - ரேனியஸின் முதல் நற்செய்திப் பயணமும்*
கிராமங்களிலும் , சுற்றுப்புறங்களிலுமிருந்து காஞ்சிபுரத்துக்கு - விழாவுக்கு வந்த மக்கள் , இதுவரை கிறிஸ்துவைக் குறித்துக் கேள்விப்படாதவர்களாதலால் , வாஞ்சையுடன் ரேனியஸின் நற்செய்தியைக் கேட்டனர்.
அத்திருவிழாவைக் காண வந்திருந்த திருவாங்கூர் இளவரசரையும் சந்தித்து , இரட்சிப்பின் செய்தியை அறிவித்துள்ளார் எனின் ரேனியஸின் ஆர்வத்தை நாம் என்னவென்று கூறுவது !
இது மகிழ்ச்சியை அளிப்பினும் இவரைக் கண்கலங்க வைத்த சில சம்பவங்களையும் ரேனியஸ் வேதனையுடன் கூறுகிறார்.
தங்கள் தெய்வத்தைப் பிரியப்படுத்த - மக்கள் தங்கள் சரீரத்தை ! வளைத்து - சரீர வேதனையை அனுபவித்தல் - சரீரங்களில் நீண்ட ஊசிகளை ஏற்றிக் கொள்ளுதல் - ஒற்றைக் காலில் நிற்றல் - எண்ணெயில் எரிந்து தோய்ந்த திரிகளை எடுத்து வாயில் போடுதல் - பல விதங்களில் தங்களை சித்திரவதைக்குள்ளாக்கி - தரையில் உருண்டு புரண்டு எழும்பிய மக்களைப் பார்த்து மனம் வருந்தி அம்மக்களுக்கு கிறிஸ்துவின் மூலமாக வரும் மீட்ட விடுதலைப்பற்றிக் கூறியதாகக் கூறுகிறார்.
மட்டுமல்ல , அக்கால கிழக்கிந்திய கம்பெனி கிறிஸ்துவ அதிகாரிக்கும் இங்கு வந்து , மற்ற மக்களுடன் சேர்ந்து , விக்கிரகங்களுக்கு மரியாதை செலுத்தி காணிக்கை படைத்தைக் கண்டு கண் கலங்கினார்.
*சுவிசேஷத்தின் வல்லமை ( The power of the Gospel ) இங்கு கிரியை செய்தது . உயர்குல மக்கள் ரேனியஸின் நற்செய்தியைக் கேட்டது . "* மட்டுமின்றி , தங்கள் பகுதியிலும் இரு தமிழ் பள்ளிகளும் , ஒரு ஆங்கிலப்பள்ளியும் நிறுவ கேட்டனர் ( 1817ல் நிறுவப்பட்டன )
திருவிழாவில் ரேனியஸின் நற்செய்தியைக் கேட்ட கிராமத்தார் சென்னை வந்தும் நற்செய்தி கேட்க விரும்பினர்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory