சுவிஷேச ஒளி காத்த சாயர்துரை*
ஆரம்ப திருச்சபை வளர்ச்சியில் சுவிசேஷ ஒளியை அனையாமல் காத்துக் கொள்வதிலும் , பிரகாசிக்கச் செய்தவர்களிலும் , குரு கற்பகம் சத்தியநாதனுக்கும் , சாமுவேல் சாயர் என்பவரும் குறிப்பிடத்தக்கவர் களாவார்கள்.
சாயர் என்பவர் அக்காலத்தில் ( 1810 ) நிலம் வாங்கிக் கிறிஸ்துவர்களுக்கு வழங்கியிராவிடில் இப்பகுதியில் ( சாயர்புரம் ) சுவிசேஷ ஒளி அனைந்து போயிருக்கும்.
என கனம் போப் ஐயர் திருநெல்வேலித் திருச்சபை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.
சாயர் துரையின் தியாகம் , பக்தி , தொண்டு , ஈகை , ஒத்துழைப்பு , முதலிய இவரது நற்குணங்களை பெரிதும் பாராட்டி மகிழ்ந்து எழுதியுள்ளார்.
*அத்தியட்சாதீனம் என்னும் இளம் பயிருக்கு பாத்திக்கட்டி , நீர்ப்பாய்ச்சி , எருப்போட்டு வளர்த்தவர்களில் சாயர்துரையும் ஒருவராயினார்.*
போர்ச்சுக்கல் நாட்டில் பிறந்த இவர் செல்வம் மிக்க வியாபாரியும் , நற்குணம் படைத்தவராக , பாளையங்கோட்டையில் வாழ்ந்தார்.
ஆங்கில அரசுக்கும் , மலையாள மன்னருக்கும் , இடையே தூது செல்லும் நம்பிக்கைக்கு உரியவராக புகழுடன் வாழ்ந்து வந்த ஒர் கிறிஸ்துவர்.
அக்காலத்தில் பாளையங்கோட்டையிருந்த திருச்சபைக்கு கெளரவப் பொருளாளராக பணியாற்றியவர்.
திருச்சபை சேவையில் தன்னை அர்ப்பணிந்து ஆங்கிலம் , தமிழில் ஆராதனைகளும் நடத்தி உதவினார்.
பணம் தேவைப்படும் போது தனது சொந்தப் பணத்தையும் செலவிட்டு வந்தவர்.
அக்காலத்தில் கிறிஸ்துவர்களுக்கு சகிக்க முடியாத துன்பங்கள் ஏற்படவே சிலர் மறுதலிக்க முன் வந்தனர்.
இடங்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல்லும் நிலையும் ஏற்பட்டது , சாயர்புரம் பகுதியிலுள்ள மக்களுக்கு விடுதலை அளித்து சபை வளர்ச்சியில் புதிய எழுப்புதலைக் கொண்டு வர எண்ணிய அவர் சுமார் 150 ஏக்கர் பூமியை விலைக்கு வாங்கி ( 1810 ) இன்னல் அடைந்த கிறிஸ்துவர்களை இப்பகுதியில் குடியேற்றி அப்பகுதியை தனிக் கிறிஸ்துவ ஊராக அமைத்துக் கொடுத்துவிட்டார்.
அவர் பெயராலே சாயர்புரம் என்னும் அழைக்கப்பட்ட சிற்றூர் பின்னர் வந்த கனம் போப் போன்ற மிஷனெரிகளால் நகரமாக அழகியக் காட்சியுடன் ( ஆலயம் , கல்விக்கூடங்கள் , மருத்துவமனை அளிக்கின்றதெனின் இந்த சாயர்துரைய யார் மறக்க முடியும்.
குரு கற்பகம் சத்தியநாதன் மரித்த அதே ஆண்டில் ( 1815 ) இவர் மறைந்தார்.
பாளையங்கோட்டை பழைய ராணுவவீரர் கல்லறை வளைவில் சமாதி உள்ளது. தமது மரணத்திற்குமுன் தனது சொத்தின் பெரும்பகுதியை திருச்சபை ஊழியத்திற்கென்றே விட்டுச் சென்றார் . மரித்தும் பேசப்படும் பக்தன் சாயர் அவர்களைப் போல் ஒளிவீச , ஒளி மங்கிடாமல், காத்துக் கொள்ளத் தீர்மானம் செய்வோம்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
No comments:
Post a Comment