மாமனிதர் "பென்னிகுக்" அவர்களின் 106 வது நினைவு நாள்!!!
( எங்கள் நெஞ்சில்
நீர் இருக்கும்வரை
நீர் இருக்கும் அய்யா )
நீர் இருக்கும்வரை
நீர் இருக்கும் அய்யா )
நீர்நிலை வற்றிப்போன 18-ஆம் நூற்றாண்டில் மதுரை, ராமநாதபுர மாவட்டங்களில் சீர்குலைந்து போன வேளாண் தொழிலை மீண்டும் உருவாக்க முயன்று அப்போதைய ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்திருந்தனர்.
அந்தநேரத்தில், அரபிக்கடலில் கலந்த தண்ணீரை, தென்தமிழகம் நோக்கி திருப்பி கொண்டுவந்து, முல்லைப்பெரியாறு அணை கட்டி தேக்கி வைத்து, அதனால் தென்தமிழகத்தில் விவசாயம் செழிக்கவைத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் கர்னல் ஜான் பென்னிகுக்.
அவர் கட்டிய முல்லைப்பெரியாறு அணைதான் தென் தமிழகத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அவர் கடந்த 1911-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி உயிரிழந்தார். தென்தமிழக மக்களால் போற்றப்படும் கர்னல் ஜான் பென்னிகுக்கின் 106 வது நினைவுநாள் இன்று.
( நன்றி :- இன்று ஒரு தகல் )
No comments:
Post a Comment