புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கால்டுவெல்

சென்னை மாநகரில்மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ளதிருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார்.*
நடந்து செல்லும்போதுமக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறியலாம் எனநினைத்தார்.
*சிதம்பரத்தில்* இருந்த நடராசர் கோயிலைக் கண்டு மகிழ்ந்தார்.
*மயிலாடுதுறை* வழியாகச் சென்று *தரங்கம்பாடியில்* சில நாள் தங்கினார். டேனிஷ்மி­ன் செய்யும் பணிகளை அறிந்தார். பின்பு *குடந்தை* வழியாகத் *தஞ்சாவூர்* சென்றார். பெரியகோயிலையும் மாராட்டிய மன்னர் அரண்மனையையும் கண்டுமகிழ்ந்தார்.அங்கு வாழ்ந்த *வேதநாயகரைக்* கண்டு உரையாடினார். *திருச்சிராப்பள்ளி* மலைக்கோட்டை அழகையும் திருவரங்கச் சிறப்பையும் கண்டுமகிழ்ந்தார். பின்பு *நீலமலை* சென்றார். அங்கு ஸ்பென்சர் எனும் தந்தையாரைக்கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி இளைப்பாறினார்.
நீலமலையிலிருந்துஇறங்கி, *கோவை* வழியாக *மதுரை* வந்தார். வரும் வழியில் மக்கள் அவரைப் பலவாறுஇழித்தும், பழித்தும் பேசினர். ஒருநாள் நடந்து செல்லும்போது மழைவரத்தொடங்கியது. இரவுப் பொழுதில் தங்கிச்செல்ல நினைத்தார். சத்திரம், சாவடிஉண்டா என வினவிய போது அரசின் சத்திரம் உள்ளது எனவும் அது ஆங்கிலேயர்க்குஇல்லை எனவும் கூறினர். மழையில் நனைந்து துன்பப்பட்ட கால்டுவெல்லைக் கண்டுமாட்டுத் தொழுவத்தில் தங்கும்படி சொன்னார்கள். சத்திரத்தில் இடம்கிடைக்காததாலும் மாட்டுத் தொழுவத்தில் தங்க மனம் விருபாததாலும் ஒருவீட்டின் திண்ணையில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார்.
மதுரை வந்தடைந்தபின்பு *திருமங்கலத்தில்* சமயத்தொண்டு புரிந்த திரேசியர் அவர்களைக் கண்டுஉரையாடினார். பின்பு *நெல்லை* வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார் (நவம்பர் 1841). பின்பு *நாசரேத்தில்* (நவம்பர் 28) தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒருவிரிவுரையும் செய்தார்.பின்பு *முதலூரில்* ஞாயிற்றுக்கிழமை விரிவுரையயான்றுநிகழ்த்தினார். அருகில் இருந்த *இடையன்குடியைப்* பாதை தெரியாமல் நெடுந்தூரம்சுற்றி அடைந்தார். அந்த ஊரே அவர் பணிபுரியும் இடமாகவும், கடைசிக் காலத்தில்நிலைகொள்ளும் இடமாகவும் அமைந்தது. *இடையன்குடி* என்பது பெரும்பாலும்பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். கூரைவீடுகளே மிகுதி. கள்ளியும் முள்ளியும்நிறைந்த பகுதி. அங்குக் கால்டுவெல் குடியிருப்புகளையும் கோயிலையும்உருவாக்கினார். ```எழுதவும் படிக்கவும்``` மக்களுக்குக் கற்றுத் தந்தார்.
கால்டுவெல் வரலாற்றிலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory