இந்தியர்களில் முதல் குரு ' என்ற பெருமையைப் பெற்ற இவர்*
Rev . ஞானமுத்து நினைவு மாதம்
நற்செய்திப் பணியில் நாட்டம் தேவை
இ ந் தி யா விற் கு கூ வி சே ஷ ம் அறிவிக்க வெளிநாட்டிலிருந்து மிஷனெரிகள் வந்து கொண்டிருந்த காலம் அது.
இந்தியர்களுக்கு இந்தியரின் முறையில் நற்செய்தி அறிவிக்க ஆட்களோ குறைவு.
அதிலும் குருத்துவ பட்டம் பெற்றவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் . 1816ஆம் ஆண்டில் பிறந்த *ஞானமுத்துவுக்கோ* உள்ளத்தில் வாஞ்சை ; பத்து வயதிலே எழுப்புதல் தீ அவர் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.
பதினொன்றாம் 1815 - 1808 வயதில் ரேனியஸ் ஐயர் நடத்திய செமினரியில் சேர்ந்தார். கற்றவர்களையும் மிஞ்சிய கல்வியறிவை அங்கே பெற்றார் .
ரேனியஸ் ஐயர் அவர்களால் 1833ம் ஆண்டு ஞானஸ்நானம் பெற்ற இவர் , இறையியல் கல்வியை இனிதே முடித்தார் . சென்னையில் பத்து ஆண்டுகள் பணி செய்த பின்னர் , *திருநெல்வேலியில்* தன் பணியைத் தொடர்ந்தார் . டோனாவூர் , நல்லூர் , கோவிலூத்து போன்ற இடங்களில் இவர் செய்த பணிகளை இன்றும் காணலாம் . அயராத உழைப்போ அவர் உடலை மிகவும் பாதித்தது . ஆஸ்துமா மற்றும் பக்கவாத நோய்கள் அவரைத் தொற்றிக் கொண்டாலும் , நற்செய்திப் பணியே அவரின் முழு மூச்சாகக் காணப்பட்டது.
ஆங்கிலம் , கிரேக்கம் , லத்தீன் , எபிரேயம் , தெலுங்கு போன்ற மொழிகளில் புலமையடைந்த இவர் ' கடவுளின் பங்கு ' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார் . பேராயர் சர்ஜென்ட்ஐயரால் சிறப்பான பாராட்டையும் பெற்றார் . ' ........ இந்தியர்களில் முதல் குரு ' என்ற பெருமையைப் பெற்ற இவர் இதே மாதம் , 1888ஆம் ஆண்டு ஆயிரமாயிரம் மக்கள் சூழ மண்ணில் விதைக்கப்பட்டார் ; விண்ணில் முளைத்தார்.
அருட்பணியாளர்களின் தகவல் களஞ்சியத்திலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment