மிஷனரி வெல்லஸ்லி பெய்லி பிறந்த தினம்
ஏப்ரல் 28 (நேற்று)
தொழு நோயியாளிகளைக் குறித்த கரிசனை உங்களுக்கு உண்டா ?
நம்மைச் சுற்றி இவர்கள் சாதாரணமாக நடமாடுவதைக் காண்கின்றோம். ஆனால் ஒரு கால கட்டத்தில் இவர்களைக் காண முடியாது.
ஏனெனில் சமுதாயம் இவர்களை ஊருக்கு வெளியே தள்ளி வைத்திருந்தது.
ஆனால் இன்று அன்புள்ளம் கொண்ட நல்லுள்ளங்கள் இவர்களை ஊருக்குள் வரவும் , மக்களோடு சரிசமமாகப் பேசவும் , வாழவும் , அவர்களை அன்பர்களாகவும் , நண்பர்களாகவும் ஏற்றுக் கொண்டுள்ளது.
உண்மையாகவே நமது சமுதாயம் நல்ல மாற்றம் பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை.
இம்மாற்றத்திற்கு காரணம் யார் ? இயேசுவின் அன்பால் ஈர்க்கப்பட்ட மிஷனெரிகளே காரணம் என்றால் மிகையாகாது.
அயர்லாந்தில் பிறந்த வெல்லஸ்லிபெய்லி உலகப்பிரகாரமாகவும் , உல்லாசமாகவும் வாழ ஆவல் கொண்டவராக வாழ்ந்து வந்தார்.
ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுபயணம் செய்தார்.
வாழ்க்கையை முன்னேற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்தன.
அப்பொழுது ஆண்டவர் பெய்லியை நோக்கிப் பார்த்தார் . அவரின் வாழ்வுக்கான திட்டத்தை உணர்த்தினார் . செயல்படத் தூண்டினார் . ஆத்தும்பாரம் உள்ளத்தில் பாய ஆரம்பித்தது . இந்தியாவை நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்தார்.
தன்னைச் சுற்றி வாழ்ந்த ஏழ்மையான மக்களை பார்த்து வேதனையடைந்தார்.
தொழுநோய் தொற்றிக் கொண்ட மனிதர்களின் வாழ்வை சீர்படுத்த ஆண்டவர் தன்னைத் தெரிந்தெடுத்ததை எண்ணி ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்.
1873ம் ஆண்டு அயர்லாந்து சென்று பண உதவிகளைப் பெற்று மீண்டும் 1875ம் ஆண்டு இந்தியா வந்தார்.
*லெப்ரஸி மிஷனை* ஆரம்பித்து தொழுநோயாளிகளின் வேதனைகளை நீக்கி மனமகிழ்வைக் கொடுத்தார்.
ஜப்பான் , பர்மா , தென்ஆப்பிரிக்கா , தென் அமெரிக்கா , சுமத்ரா தீவுகள் மற்றும் கொரியா நாடுகளில் இவர் பணி விரிவடைந்து , இறை நாமம் மகிமையடைந்தது.
இவர் இதே நாள் 1846இல் பிறந்தார்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
------------------------------------------------------------
No comments:
Post a Comment