மிஷனரி மோனிகா நினைவு தினம்*
மே 04
அவள் ஒரு தாய் . கணவர் மிகவும் கோபகாரர் மகனோ ஊதாரி .
இறை பக்தி இல்லாதவன் , விருப்பம் போல் வாழ ஆசை கொண்டவன் , தலைகால் புரியாமல் நடந்த மகனுக்காக வேதனைப்பட்டார் அத்தாய் , மோனிகா என்பது அவர் பெயர்.
தினம் தினம் கணவரின் தொந்தரவுகளினாலும் , மகனின் பொறுப்பற்ற தன்மையினாலும் உள்ளம் உடைந்தார்.
காலை மாலை ஆராதனைகளில் தன் மகன் அகஸ்டினுக்காக கருத்தாய் ஜெபம் செய்தார் மோனிகா.
அவனுக்கு வயது 29 வீட்டை விட்டு புறப்பட்டு விட்டான்.
ரோமாபுரியை சுற்றிப்பார்க்க அவனுக்கு ஆசை . ஆனால் தாய்க்கோ தன் மகன் உபயோகமற்றவனாகி விடுவானோ என்ற கலக்கம் , மகனின் மேல் அத்தனை பாசம் . மகனுடன் புறப்பட்டு விட்டார் தாய் , எங்கு சென்றாலும் உடன் வருவதாக மகனிடம் கூறினார்.
அகஸ்டினோ சிறிது சுதாரித்துக் கொண்டான்.
தாயை ஏமாற்றிவிட்டு ரோமை நோக்கி சென்றுவிட்டான்.
அங்கே அடிமேல் அடி விழுந்தது போல் வியாதிகள் அகஸ்டினை தொற்றிக் கொண்டன.
செய்வதறியாது திகைத்தான் அகஸ்டின். அம்புரோஸ் என்பவரின் போதனையால் மனம் மாறினான். தாயின் ஜெபத்திற்கு விடை கிடைத்தது.
மோனிகா பெற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . மோனிகா ஒரு சிறந்த ஜெபவீரர்.
பரிசுத்தவான்களின் வாழ்க்கையை வாசிப்பது அவருக்கு மிகப் பிரியம்.
அவரது சாந்தமும் , தூய வாழ்வும் அனைவருக்கும் மாதிரியாக மோனிகாவை மாற்றியது.
தன் மகன் இரட்சிக்கப்பட்ட ஆண்டவரிடம் விடாமல் வேண்டுதல் செய்த மோனிகா.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment