புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சிவன்குடியேற்று

வேர்களைத்தேடி*
*அறிந்து கொள்வோம் நம் முன்னோர்களின் மனமாற்றங்களை*
திருச்செந்தூருக்கும் உடன்குடிக்கும் இடையிலான சாலையில் உள்ள தேரியோர கிராமம் சிவன்குடியேற்று
மிஷனரிகளின் நற்செய்திப்பணியால் அநேகர் இக்கிராமத்தில் கிறிஸ்தவத்தை ஏற்றனர் கிறிஸ்தவத்தை ஏற்றவர்களுக்கு உறவினர்களான அதே கிராம இந்துக்களால் நெருக்கடி ஏற்பட்டது அதைக்கண்ட மிஷனரிகள் சிவன்குடியேற்று கிராமத்தையொட்டி மிஷனுக்கென பெரிதானதோர் நிலத்தை வாங்கி சுகநகரம் என அதற்குப் பெயரிட்டு இந்துக்களால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களை அந்த புதியகுடியேற்ற கிராமத்தில் குடியேறச் செய்தனர்.
சுகநகரம் என்ற அந்த கிறிஸ்தவக்கிராமத்தில் நற்செய்தி அறிவிக்கும் ஆர்வம் மிக்க வயதான உதாரகுணம் மிக்க தைரியசாலியான உபதேசியார் சபைஊழியராகப் பணிசெய்துவந்தார் அவர் சிவன்குடியேற்று கிராமத்தாருக்கு நற்செய்தி அறிவித்து வந்தார்.
சிவன்குடியேற்று கிராமத்தில் வீரசூரப்பெருமாள்நாடார் எனும் பெரியவரது குடும்பம் இருந்தது அவருகௌகு அநேகபிள்ளைகள் அவர் தம் பிள்ளைகளுடன் தம் கிராமத்தில் 11 தேவதைகளுக்கு பலிசெலுத்தி அவற்றை வழிபட்டு வந்தார். அவரது மகன்களில் ஒருவரான பெருமாள் நாடார் கிறிஸ்தவத்தை ஏற்க ஆவலாக இருந்தார் அவர் தம் ஊரையொட்டி இருந்த சுகநகரம் உபதேசியாரை அணுகினார் உபதேசியாருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. பெருமாள்நாடார் கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்யவிரும்பினார் அவரது வீட்டார் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை சுகநகரத்திலிருந்து சில கிலோமிட்டர் தொலைவில் இருந்த தெற்கு பிச்சிவிளை கிராமம் ஆபிரகாம்நாடார் - ஞானவடிவு ம்மாள் தம்பதியரின் மகள் முத்தம்மாளுக்கும் பெருமாள்நாடாருக்கும் திருமணம் ஒழுங்குசெய்யப்பட்டது. பெருமாள்நாடார் பேரின்பம் என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவரானார் மூன்று திருமணஅறிக்கைகள் வாசிக்கப்பட்டது.
திருமணநாள் வந்தது திருமணம் செய்து வைக்க குருவானவரும் வந்துவிட்டார். குருவானவரிடத்தில் "பெருமாள் நாடார் பெண்ணுக்காகத் தான் கிறிஸ்தவராகியுள்ளார் திருமணம் முடிந்தவுடன் இந்துமதத்துக்குச் சென்றுவிடுவார் என தவறானதகவலைத் தந்து விடுகின்றனர்
இதைக்கேட்ட குருவானவர் திருமணஆராதனையை நடத்த மறுப்பு தெரிவித்து வெளியேற முயற்சிக்க பெருமாள்நாடாரின் கிறிஸ்தவத் திருமணத்திற்கு உறுதுணையாக இருந்த உபதேசியார் வெகுண்டெழுந்தார் குருவானவரிடம் மன்றாடிப்பார்த்தார் அவரோ அதை ஏற்காமல் வெளியேறுவதிலேயே குறியாய் இருக்க உபதேசியார் வளைவான தம் கைப்பிடி கோலால் குருவானவரை தடுத்து நிறுத்தினார்.
குருவானவரோ திருமணத்தை நடத்தாமல் வெளியேறிச்செல்வதிலேயே நோக்கமாக இருக்க ஊர்பெரியவர்கள் தலையிட்டு பேசிப்பார்த்தனர் குருவானவர் ஏற்காமல் வெளியேறினார் பின் ஊர்பெரியோர்ள் உபதேசியார் முன்னிலையில் பேரின்பம்பெருமாள்நாடார் - முத்தம்மாள் திருமணம் பொதுமுறைப்படி நடத்தப்பட்டது இந்த கசப்பான சம்பவத்தால் கிறிஸ்தவத்தின்மேல் வெறுப்பு கொண்டு தம் பழைய தெய்வவழிபாட்டிற்கு பெருமாள்நாடார் சென்றுவிட்டார். ஆனால் அவரது மனைவி முத்தம்மாள் கிறிஸ்தவ பக்தியை விட்டுவிடாமல் அநுதினமும் வேதம் வாசித்து ஜெபித்ததோடு சுகநகரம் தேவாலயத்திற்கு தவறாது சென்றுவந்தார். இந்நிலையில்
ஆண்குழந்தை பிறந்தது பொன்பாண்டி என்ற பொதுவான பெயர் வைக்கப்பட்டது.
மூன்றாண்டுகள் நிறைவடைந்தன.
தம் மனைவி முத்தம்மாள் அநுதினமும் வேதம் வாசிப்பதைக் கண்ட பேரின்பம்பெருமாள்நாடாருக்கு வேதம் வாசிக்க ஆவல் ஏற்பட்டது வேதம் வாசித்தார் இயேசுவே மெய்யான ஆண்டவர் என்பதை ஏற்றார் சுகநகரம் தேவாலயம் செல்ல ஆரம்பித்தார் உபதேசியாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. தம் மூத்தமகனுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவும் தம் குடும்பத்தை முழுமையாகச் சபையில் சேர்க்கவும் விருப்பம் தெரிவித்தார் குருவானவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவரும் அதை ஏற்றார் மூத்தமகனுக்கு அப்பாத்துரை தேவஇரக்கம் என்ற பெயரில் ஞானஸ்நானம் மற்றும் பேரின்பம்பெருமாள்நாடார் குடும்பத்தை சபையில் சேர்க்கும் நிகழ்வும் நடைபெற்றது. சுகநகரம் என்ற கிறிஸ்தவக் கிராமத்தில் வீட்டுமனைக்கான இடம் வழங்கப்பட்டது முன்னோரின் மனமாற்றத்தில் தடைகளும் தடைளைத்தாண்ட விசுவாசஜெபமும் வேதவாசிப்பும் முக்கிய ஏதுகரமாக இருந்ததை நினைக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஆக உள்ளது இந்த மனமாற்ற நிகழ்வு என் நெஞ்சைத் தொட்டது ஆதலால் உங்களின் விசுவாசஜெபம் வேதவாசிப்பு வளர இதை பகிர்ந்து கொள்கிறேன்
Forward. Message

1 comment:

  1. வணக்கம் அண்ணா, இது என் தாயாரின் ஊர், அப்படியே என் தந்தையின் ஊரான செக்கடிவிளை பரிசுத்த அந்திரேயாவின் ஆலயம் பற்றிய வரலாறு பதிவிட்டால் மகிழ்ச்சி

    ReplyDelete

INSTAGRAM FEED

@tdtahistory