மிஷனரி டேவிட் லிவிங்ஸ்ட ன் நினைவு தினம்
மே 01
ஆப்பிரிக்கா. ஆம் , நீங்கள் நினைப்பது போல் ஒரு காலத்தில் அது இருண்டகண்டம்.
ஆனால் இப்போது . . .
டேவிட் லிவிங்ஸ்டன் அங்கே நுழைந்து விட்டார்.
டேவிட் லிவிங்ஸ்டன் அங்கே நுழைந்து விட்டார்.
இருண்ட கண்டத்தை வெளிச்சமாக்கிவிட்டார்.
ஆப்பிரிக்காவில் பணியாற்றிய மிகச்சிறந்த முன்னோடி மிஷனெரி இவர். *33 வருடங்கள் அயராது உழைத்தார்.* அடிமை வாணிபத்தில் பெயர் பெற்று விளங்கியது ஆப்பிரிக்கா. அதை அடியோடு ஒழித்தார் லிவிங்ஸ்டன்.
அட்டூழியங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தினார். ஆப்பிரிக்காவை வாழ்வித்தார் . *உயிர் கொடுத்தார்.* டேவிட் லிவிங்ஸ்டன் ஒரு டாக்டர் மக்களின் உபகாரி , ஆராய்ச்சியாளர் , அனைத்திற்கும் மேலாக கிறிஸ்துவைப் போன்று வாழ்ந்து காட்டியவர்.
29 , 000 மைல்கள் நடந்து திரிந்தே பல பேருண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தினார்.
ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டவையே.
ஆப்பிரிக்காவின் மூலை முடுக்கெல்லாம் சென்று விலங்கினங்களையும் , தாவர இனங்களையும் ஆராய்ச்சி செய்தவர்.
எளிமையும் , உறுதியும் வாய்ந்த இவர் , எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றவர். ஆபத்துக்களும் , தடைகளும் இவரின் வேகப்பயணத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் தவித்தன.
என்ன செய்வதென்முழித்தன. ஆப்பிரிக்காவின் பழங்குடியினர் *டேவிட் லிவிங்ஸ்டனை நடமாடும் இயேசுவாகவே கண்டனர்.* வெள்ளையர் , கருப்பர் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவருடனும் பாசத்துடன் பழகியவர்.
சமத்துவத்தைப் புகுத்தியவர் . உலகில் எந்தப் பகுதியிலும் இல்லாத அளவு ஆப்பிரிக்காவில்தான் தற்பொழுது மிஷனெரி ஸ்தலங்கள் உருவாகி வருகின்றன.
இதற்கு முன்னோடி , டேவிட் லிவிங்ஸ்டன் என்ற அர்ப்பணிப்புள்ள அருட்பணியாளரே ! அவர்
இதே தினத்தில் இறைவனில் இணைந்தார்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
------------------------------------------------------------
No comments:
Post a Comment