
ஜி.யு. போப் கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.
இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார். 1886-ம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.
தனது கல்லறையில் ஒரு தமிழ் மாணவர் என்று பொறிக்கப்பட வேண்டும் என்று எழுதிய இந்தப் பெருமகன் தன் 88-ம் வயதில் மரணம் அடைந்தார்
தனது கல்லறையில் ஒரு தமிழ் மாணவர் என்று பொறிக்கப்பட வேண்டும் என்று எழுதிய இந்தப் பெருமகன் தன் 88-ம் வயதில் மரணம் அடைந்தார்
No comments:
Post a Comment