மிஷனெரிப் பணி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது எல்லாம் காடு , மலைகளில் ஊழியம் செய்வது மட்டுமே . இன்னும் சிலருக்கு காட்டுமிராண்டிகள் மத்தி யில் ஊழியம் செய்வது என்பது நினைவிற்கு வரும்.
இது ஒரு வகையில் உண்மை தான் என்றாலும் , இருந்த இடத்திலிருந்தே மிஷனெரிப் பணியை நம்மால் செய்ய முடியுமா ? முடியும் என்று அனி ஆம்ஸ்ட்ராங் வாழ்ந்து காட்டியுள்ளார்.

தேவன் தன்னைக் கொண்டு செய்யப்போகும் மாபெரும் திட்டத்தை மனதில் கொண்டு திறம்பட செயலாற்றினார்.
தன் முழு இருதயத்துடன் இயேசுவை நேசித்த இவர் , மிஷனெரிகளுக்கு உதவிட வேண்டுமென்றவாஞ்சையினால் கடிதங்கள் எழுதுவதின் மூலம் தன்பணியை ஆரம்பித்தார் .
விரல்கள் அத்தனையும் மூலதனங்களாயின.
அவைகளே தேவ ஊழியர்கள் மீது கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் சிறந்த கருவிகளாயின.
தட்டச்சு மூலமாகவும் , தன் கைப்படவும் மிஷனெரிகளின் பணிகளைக் குறித்ததான ஏராளமான கடிதங்களை தன் நண்பர்களுக்கு எழுதி அனுப்பினார்.
அவைகளில் மிஷனெரி ஊழியத்தின் தேவைகள் , எப்படி பணியாற்ற வேண்டுமெ என்ற முறைகளைக் குறித்தும் , அவற்றிற்கு எப்படியெல்லாம் உதவ முடியும் என்பதைக் குறித்து திட்டமும் தெளிவுமாக எழுதினார்.
அவருடைய கடிதங்கள் மிகவும் நீண்டவைகளாய் இருந்தன.
1893ம் ஆண்டு மட்டும் இவர் எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை17 , 719 ஆகும்.
மிஷனெரிப் பணியில் இவருக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட மக்கள் பலர் தங்களால் இயன்ற அளவிற்கு மிஷனெரிப் பணிக்காக கொடுத்தும் , தாங்கியும் ஆதரித்தனர் . இன்றும் உங்கள் திறமைகள் எதுவாயினும் அதை மிஷனெரிப் பணிக்கென பயன்படுத்துங்கள்.
அதன் மூலம் அநேகர் தேவ இராஜ்ய பணியில் இணைய உதவிடுங்கள்.
ஜெபியுங்கள் ! ஆயத்தப்படுங்கள் !
*மிஷன் இந்தியா இயக்கம்*
This month Seeshan
This month Seeshan
No comments:
Post a Comment