மிஷனரி மைல்ட்ரெட் கேபிள் நினைவு தினம்*
ஏப்ரல் 30
குழு முயற்சி பல வெற்றிகளைத் தரும்.
இதை நம் வாழ்க்கையில் கண்கூடாக பார்க்க முடிகின்றது.
முப்புரி நூல் சீக்கிரமாக அறாது என்று வேதாகமம் கூறுகின்றது.
இதற்கு எடுத்துக் காட்டாக பணி செய்தவர்களே மைல்ட்ரெட் கேபிள் , ஈவா பிரெஞ்ச் மற்றும் பிரான்ஸெஸ்கா பிரெஞ்ச் . இம்மூன்று பெண்மணிகளும் வீரப் பெண்மணிகள்.
கிறிஸ்துவின் அன்பினால் தொடப்பட்டு தங்களை ஊழியத்திற்கு அர்ப்பணித்தவர்கள்.
அழிந்து போகும் ஆன்மாக்களை நினைத்து அனுதினமும் அவர்களின் இரட்சிப்பிற்காக ஜெபித்தவர்கள்.
தங்கள் வாழ்வையே தியாகம் செய்தவர்கள்.
மைல்ட்ரட் கேபிள் 1878ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர். ஊழிய பாரத்தை சிறுவயதிலேயே பெற்றதால் இந்தியாவிற்கு வர விரும்பினார்.
ஆனால் கடவுளின் திட்டம் வேறுவிதமாக அமைந்தது.
தன்னுடைய ஆசைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆண்டவரின் சித்தத்திற்கே *முதலிடம் கொடுத்தார்.*
1902ம் ஆண்டு சீன தேசத்திற்கு அழைப்பை பெற்று மிஷனெரியாக சென்றார் . அங்கு ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருந்த ஈவா பிரெஞ்ச் என்பவருடன் தன்னை இணைத்துக் கொண்டு ஊழியம் செய்ய ஆரம்பித்தார் . பின்னர் ஈவாவின் தங்கையும் இவர்களுடன் வந்து சேர குழுவாக செயல்பட ஆரம்பித்தனர்.
தாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் கூடாரங்களை அமைத்து அவ்விடங்களிலுள்ள மக்களுக்கு கிறிஸ்துவைப் பற்றி அறிவித்தனர்.
பள்ளிக் கூடங்களை அமைத்து மக்களின் கண்களை திறந்தனர்.
1923ம் ஆண்டு காஞ்சோ என்ற இடம் நோக்கி பயணம் செய்தனர்.
பின்னர் கோபி பாலைவனத்திற்கு சென்று நாமெடிக் பழங்குடிகள் மத்தியில் எட்டு வருடங்கள் அம்மக்களின் துணைவர்களாக வாழ்ந்தனர்.
36 வருடங்களுக்குப் பின் இங்கிலாந்து திரும்பிய அவர்கள் இங்கிலாந்தில் மாபெரும் எழுப்புதல் நடைபெற காரணமானார்கள்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
------------------------------------------------------------
No comments:
Post a Comment