புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கரிசல் சபை

இந்த வருஷமுமிருக்கட்டும்
கரிசலில் 1827 ம் ஆண்டில் ஆறு குடும்பங்களடங்கிய ஒரு சிறு சபை தோன்றிற்று.
துவக்கத்தில் இந்துக்களாலும் முகமதியராலும் அச்சிறுசபைக்குண்டாயிரந்த துன்பம் கொஞ்சநஞ்சமல்ல.
ஆயினும், அக்கிறிஸ்தவர்கள் தாளவிழாமல் உறுதியாக நின்று , விசுவாசத்தைக் காத்துக்கொண்டார்கள் . அவர்களது விசுவாச உறுதியின் பயனாக திருச்சபையும் கொஞ்ச கொஞ்சமாகப் பெருக ஆரம்பித்தது. நெடுநாளையத் துன்பமும் ஓய்ந்தது.
துன்பங்கள் நீங்கினபின் , அக்கிறிஸ்தவ மக்கள் அனல் அற்றவர்களாகஅரம்பித்தார்கள் , உலகசிந்தை மேலிட்டது அஜாக்ரிரதை அசிரத்தை , அசட்டை முதலியன கூடவே தோன்றி வளர்ந்தன.
மிஷனெரிமாரும் , ஊழியரும் அச்சபையைக் - வித்துக் கவலை கொள்ளலானார்கள்.
1836 முதல் டோவூைர் மிஷனெரி E . டென்ற் ஐயர் E. Dent அச்சபையின் மேற்பார்வையாளரானார்.
அவர் , தன் கையின் கீழிருந்த உபதேசிமாரில் சிறந்த பக்தனும் திறமைசாலியுமான ஒரு உபதேசிகரை அவ்வூரில் நியமித்து நல்ல பலன் கிடைக்குமென்று கருதி அவ்வாறே செய்தார்.
அவ்வுபதேசியாரும் ஜெபத்துடன் தன் பணிவிடையை ஆரம்பித்து , உபதேசத்தினாலும் *முன்மாதிரியினாலும்* அம் மக்களைச் சீர்ப்படுத்த தன்னாலான மட்டும் முயன்று பார்த்தார் பயனில்லை ! மாறாக , முன்னிலும் அதிகமாக கட்சிளும் , பிரிவினைகளும் , சண்டைகளும் , இந்துக் கிரியையைகளுமே சபையில் காணப்பட்டன.
1838 ம் ஆண்டுத் தொடக்கத்தில் ஒருநாள் டென்ற் ஜயர் கரிசலுக்கு சென்று , சபைவிசாரணை செய்து , அங்குக் காணப்பட்ட நிலைமைக்காக மிகவும் வருந்தி , மனவேதனையுடன் ஒரு பயங்கர முடிவெடுத்தவராய் , உபதேசிகரை அழைத்து சகோதரனே இச்சபையில் நாம் செய்யும் பணிவிடை பயனற்றது. இனி இச்சபையைக் கையைவிட்டுக் கழுவ வேண்டியது தான். இதன் பெயரை சபைப்பட்டியலிருந்து நீக்கிவிடுகிறேன் , உம்மை வேறோரிடத்துக்கு மாற்றுகிறேன் என்றார் ,
உபதேசியாரோ மறுமொழி யொன்றும் சொல்லாமல் ஐயருடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார் , அவருடைய கண்கள் தன்ணீரால் நிறைந்தன , துக்கம் தொண்டையையடைத்தது , பேச நாவெரவில்லை எனினும் , கஷ்டத்துடன், விம்மல்களுக்கிடையில் ஐயா , கொஞ்சம் பொறுத்துப்பாருங்கள், என்றார்.
அதற்கு மேல் அவரால் பேசமுடியவில்லை.
கன்னங்களில் கண்ணீர் ஆறாய் ஓடிற்று. டென்ற் " ஐயர் ஒன்றும் பேசாமல் தன் குதிரையின் மீது தாவியேறிக் , கோபத்துடன் போய் விட்டார்.
உபதேசியார் . உடனே, ஜெபாலயத்துக்குட் சென்று முழங்காலில் நின்று அழுது ஜெபித்தார் , கர்த்தர் அதைக்கேட்டார். பலன் ? பதினாறே மாதங்கள் தான் , அதற்குள் *கரிசலில்* ஒரு எழுப்புதல்.
அதன்விளைவாக 1840 க்குள் அக்கிராமத்தார் அனைவரும் , கிறிஸ்தவர்களாகி சபையில் சேர்ந்தனர்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory