புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

CMS சங்க நூற்றாண்டு விழா சுவாரசியங்கள் பகுதி 5

நூறாண்டுகளுக்கு முன்பு கொண்டாடப்பட்ட CMS சங்க நூற்றாண்டு விழா சுவாரசியங்கள் பகுதி 5*
*22/04/2019 பதிவின் தொடர்ச்சி.....*
22 ம் தேதி மாலையில் ஆயத்த ஆராதனை நடந்தது . நெல்லை குருக்களிலே முதுமை கொண்ட கனம் D . M . பாக்கிய நாதன் ஐயர் ஆராதனை நடத்தினர்.
திருவிதாங்கூர் மகாகனம் கீல் அத்தியட்சர் பிரசங்கம் செய்தார். 23 ம் தேதி காலை 5 . 30 மணிக்குப் பரி , நற்கருணை ஆராதனை நூற்றாண்டு பந்தலில் நடைபெற்றது.
இந்திய திருட்சபை அத்தியட்சர்களும் , லூத் தரன் சபை அத்தியட்சர் ஒருவரும் , ஐரோப்பிய , இந்திய குருக்கள் பலரும் நற்கருணை பறிமாறினர்.
*பிரசிங்கித்தவர் மேற்றிராணியார்.*
5000 பேர் திருவிருந்தில் பங்கு கொண்டனர்.
மத்தியானம் 12 மணிக்கு மேற்றிராணியாருக்குச் சமஸ்த திருநெல்வேலி அத்தியட்சாதீன சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
4 - 30 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை . அ தி ல் பிரசங்கித்தவர் மகாகனம் தோர்ணக்கல் அத்தியட்சர் ஆவார்.
கடந்த ஒரு நூற்றாண்டில் நெல்லையில் நற்பணியாற்றிய ஐரோப்பிய , இந்திய ஊழியரின் ஞாபகார்த்தமாகப் *பளிங்குக்கல் சின்னம்* ஒன்று மேற்றிராணியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
*விஸ்வாசத்தோடே சாட்சி பகர்ந்தே* என்றும் கீதம் பாடப்பட்டது.
ஆராதனை முடிவில் தோத்திர காணிக்கை படைக்கப்பட்டது.
*C . M . S சங்கத்தின் நெல்லை சொத்துக்கள் அனைத்தையும் நெல்லை அத்தியட்சாதீனத்திற்கு நண்கொடையாக* அளிக்கும் பத்திரம் சென்னை C . M . S . பிரதிநிதியான கனம் பீச்சி ஐயரவர்களால் வாசித்து ஒப்படைக்கப்பட்டது.
இரவு 9 மணிக்கு அத்தியட்சாதீனத்தில் பணியாற்றிய மிஷனெரிமார்களின் படங்கள் தீ ப ஓளி யி ல் காட்டப்பட்டு வாழ்க்கைக்குறிப்பு கூறப்பட்டது.
பெப்ருவரி 24ம் நாள் காலை 5 மணிக்குத் தி ரு த் து வ ஆலயத்தில் பரி . நற்கருணை ஆராதனை நடைபெற்றது.
ஏறக்குறைய 2000 பேர் பங்கு பெற்றதாக ஒரு கணக்கு ஆராதனையில் அசரியா அத்தியட்சர் பிரசங்கித்தார்.
காலை 9 மணிக்குத் தாம்பரபரணி ஆற்றில் 400 பேருக்குப் பருவம் கடந்த ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டது.
ஆராதனையில் மகா கனம் அசரியா அத்தியட்சர் பிரசங்கித்தார்.
பிறமதத்தினர் இக்காட்சியைகண்டுமகிழ்ந்தனர்.
அன்றுபகல் 2 மணிக்கு திருநெல்வேலி C , M , கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கு மேற்றிராணியார் அடிக்கல் நாட்டினர்.
இதுவே பின் பாளையம்கோட்டைக்கு மாற்றப்பட்டது .
4 மணிக்கு வெளியில் இருந்துவந்து பிரதிநிதிகளுக்கென ஒரு கூட்டம் நடைபெற்றது இதில் நம் மாணவர்கள் , நம்மில் கிறிஸ்து மார்க்கம் ஸ்தாபித்த வரலாற்றுச் களையும் , மிஷனெரிமார்களின் பணிகளையும் அவர்களது முறைகளையும் நாடக ரூபமாக நடத்திக் காட்டினர்.
இரவு 9 மணிக்கு தஞ்சை வாழ் ராவ்சாகீப் ஆபிரகாம் பண்டிதர் கதா காலக்ஷேபம் நடத்தினர்.
பெப்ருவரி 25 வெள்ளி காலை 7 மணிக்கு C , M . S . உயர் தரக்கல்விச்சாலையின் பு து க் க ட் டி ட த் தி ற் கு மகாகனம் மேற்றிராணியார் கல் நா ட் டி ன ர்.
இது 1928 இல் பரி யோவான் க ல் லூ ரி யோடு இணைக்கப்பட்டது . இரவு 1 . 30 ம ணி க் கு இதர சபைப் பிரதி நிதி களுக் கென்று ஒரு கூட்டம் நடைபெற்றது. பலர் சொற்பொழிவு ஆற்றினர்.
பகல் 2 மணிக்கு இந்திய மிஷனெரி சங்க முதலாளி ராவ் சாகிப் ( பின் திவான் பகதூர் ) பட்டம் பெற்ற A S அப்பாசாமி இந்திய மிஷனெரி சங்கத்தின் பேரால் வருகை தந்த மேற்றிராணியாருக்கு வந்தனோ பசாரம் செய்து கண்ணியப்படுத்தித் தேனீர் விருந்து கொடுத்தனர்.
சிறுவருக்கென பந்தய் ஒட்டகங்கள் நடைபெற்றன.
மாலை 7 மணிக்குப் போது வந்தனோபசாரக்கூட்டம். இதில் விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதி நிதிகளுக்கும் , விழாக்காரிய தரிசி கனம் G தேவதாசன் ஐயருக்கும் , உதவி புரிந்த சாரணப் படைத்தலைவர் மீனம் C G . ஸ்றேப்ளி ஐயருக்கும் நன்றி உபசார் மொழி கூறப்பட்டது .
மேற்றிராணியாரின் ஆசீர்வாதத்தோடு கூட்டம் இனிது முடிவாயிற்று வந்த காணிக்கை ரூ 24 , 000.
*விழாச்செலவு விபரம் 
விழாச் செலவு ரூ 6000
வட திருநெல்வேலி குருதொகுதி ஸ்தானங்களுக்கு ஈவு ரூ 1600
தென் திருநெல்வேலி குருதொகுதி ஸ்தானங்களுக்கு ஈவு ரூ ஈவு 5000
நூற்றாண்டு மண்டபத்தளம் புதுப்பிக்க ரூ 3000
இந்திய மிஷனெரி சங்கத்திற்கு ஈவு ரூ 1000
C . M . கல்லூரி புதுக்கட்டிடத்திற்கு ரூ 1000
நூற்றாண்டு ஞாபகார்த்த கல்வி சகாய நிதி ரூ 5600
திருநெல்வேலி திருச்சபை சரித்திரம் எழுத ரூ 500
விழா தற்போதுள்ள V . O . C . மைதானத்தில் நடைபெற்றது.
விழாவுக்குக் கனம் P . S . பீற்றர் ஐயர் , கனம் D . M . ஞானசிகாமணி ஐயர் பாளையங்கோட்டை திரு . பொன்னுசாமி உபதேசியார் ஆகியோர் விழாக் கீர்த்தனைகள் இயற்றிக் கொடுத்தவர்கள் ஆவர்.
அத்தியட்சர் சேவையைச் சுருங்கக் கூறின் இவர் ஓர் நல் ஆலோசனைக்காரர் , திருநெல்வேலி திருச்சபை ஐக்கியத்தின் மூல புருஷர்.
நெல்லையை ஒரு அத்தியட்சாதீனமாக்கிய சிறந்த சிற்பியாவர்.
1925 இல் தான் சட்ட பூர்வமாக்கப்பட்ட போதிலும் இவரே காரியகர்த்தர்.
சுவிசேஷ வாஞ்சை கொண்டவருமாவர்.
1923ஜனவரி 1ம்தேதி முதல் சென்னை அத்தியட்சரானார்.
இவருக்கு அத்தியட்ச மன்னர் என்ற சிறப்புப்பெயரும் உண்டு.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory