புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

CMS சங்க நூற்றாண்டு விழா சுவாரசியங்கள் பகுதி 4

நூறாண்டுகளுக்கு முன்பு கொண்டாடப்பட்ட CMS சங்க நூற்றாண்டு விழா சுவாரசியங்கள் பகுதி 4
*17/04/2019 11;45Am பதிவின் தொடர்ச்சி.....*
*நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திற்கு எடுத்த ஆயத்தங்களை ஈண்டு கூறுவது ஏற்றதாகும்.*
1919 ஜூன் மாதத்தில் இருந்தே நூற்றாண்டு ஆயத்தம் ஆரம்பமாயிற்று.
*ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குகள்.*
1 . எல்லாச் சபைகளிலும் இதற்கென்று ஒவ்வொரு வாரமும் ஜெபக் கூட்டங்கள் ,
2 . எல்லா தவச உற்சவங் களிலும் இதற்கென்று ஒரு கூட்டத்தைத் தனிப்படுத்தி அதில் விசேஷமான பேரைக் கொண்டு பிரசங்கம் செய்வது.
3. 1919 ஜனவரி மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை யிலும் ஜூலை மாதத்தின் முதலாம் ஞாயிறிலும் எல்லாச் சபைகளிலும் நூற்றாண்டு சம்பந்த விஷேச ஆராதனைகள் ,
4. 14 வயது முதல் 50 வயதிற்குட்பட்டோருக்கு நூற்றாண்டு கொண்டாட்டத்திற்குமுன் எழுத வாசிக்கப் பயிற்றுவித்தல் .
5 . மதுபானம் அருந்துவதும் மது விற்பனை செய்வதும் சபையில் விலக்கப்படல் வேண்டும்.
6 ஒவ்வொரு குரு ஸ்தான சபையிலும் சரியான ஒழுங்குகளுடனும் , ஆபத்தத்துடனும் சுவிசேஷபிரபல்ய வேலை நடத்தப் பட வேண்டும்.
7. நூற்றாண்டுக் கொண்டாட ஆலோசனைச் சங்கத்திற்குக் கனம் தேவதாஸ் ஐயர் காரியதரிசியாக்கப்பட்டு , அவர் நூற்றாண்டு கொண்டாட்டத்தை விளம்பரம் செய்து அதற் கென்று பணம் சேகரிக்க வேண்டும்.
8 . நூற்றாண்டு ஞாபகார்த்த நிதியாக ரூபாய் 70 , 000 சேர்க்கப் பட வேண்டும்.
9 . நெல்லையில் C M . S சங்கத்தார் நடத்தி வைத்த வேலைகளை நூறு பக்கங் கொண்ட ஒரு புஸ்தக ரூபமாக வெளியிட வேண்டும் . திரு பால் அப்பாசாமி இதன் பொறுப்பாளர் நியமிக்கப்பட்ட கனம் G . தேவதாஸ் ஐயர் ஒவ்வொரு சபைக்கும் சென்று விளம்பரம் செய்து பணம் பிரித்து வந்தார்.
C . M . S . ஜில்லா விசாரணைச் சங்கக் கூட்டத்தில் விழாக் கொண்டாட ஒழுங்குகள் தீட்டப்பட்டு 1921 ஏப்பிர லில் 22 - 25 தினங்கள் விழா நாட்களாகக் குறிக்கப்பட்டன.
விழாவிற்கு ஏறக்குறைய 20 , 000 மக்கள் பல பாகங்களிலும் மிருந்து கூடினர் பந்தல் இடம் கொள்ளவில்லை.
இந்தியா , பர்மா , இலங்கை மாகாண திருச் சபையின் மேற்றிராணியார் பெப்ருவரி 21ம் நாள் வந்து இறங்கினர்.
புகைவண்டி நிலையத்தில் அவர் பெருமரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
மகாகனம் V , S . அசரியா அத்தியட்சர் 22ம் தேதி வர அவரும் உயரிய முறையில் வரவேற்க்கப்பட்டார்.
சென்னையில் C . M . S சங்கக் காரியதரிசியாக இருந்த 50 ஆண்டுகள் நற்பணி ஆற்றி 83 வயது முடிந்த பெரியார் கனோன் செல் ஐயரவர்கள் வந்தார் . தென் இந்தியாவின் இதர கிறிஸ்தவ சபைகளின் குருக்களும் சபைப் பிரதிநிதிகளும் பங்கெடுக்க வந்தனர்.
யாவருக்கும் கண்ய முறையில் வரவேற்பளிக்கப்பட்டது.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
நாளை தொடரும்.....5ம் பகுதி

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory