முதல் இந்திய ஆங்கிலிக்கன் பேராயர் V S அசரியா (1912-1945)* - பகுதி 02
*Every Christian is missionary*
வெளிநாட்டிலிருந்தே மிஷனெரிகள் வரவேண்டுமோ ? நாமெல்லாருமே மிஷனெரிகள் தானே ! - இது பேராயர் அசரீரியாவி உள்ளத்துடிப்பு ! தம் சபைகளுக்குச் செல்லும் போதெல்லாம் , திருமுழுக்கு , பெற்ற கிறிஸ்தவர்கள் - குறிப்பாக திடப்படுத்தல் கற்றுக் கொள்ளுவோர் தங்கள் தலையின் மீது , கரங்களை வைத்து , *நான் கிறிஸ்தவன் நற்செய்தியை அறிவியாமல் போனால் , எனக்கு ஜயோ* . என்னும் வசனத்தை அறிக்கையிடச் செய்வார் ( 1 கொரி 9 16 ) நற்செய்தி அறிவிக்கப்பட்ட இடங்களின் மாற்றங்களைக் குறித்து , ஒருவர் கூறியது வெறிப்பதும் கெட்ட வார்த்தைகள் பேசுவதும் களவு செய்வதும் , கலகம் செய்வதுமான வாழ்க்கை நடத்திய இடங்கள் - *சுவிசேஷம் சென்றபின்.* இன்று சமாதானம் , சந்தோஷம் , ஒழுங்கு , தூய்மை , அமைதி , கிறிஸ்துவப் பாடல்களின் ஒலி கேட்கும் இடமாக மாற்றப்பட்டது . ( அப் 8 : 18 ) எங்கள் இல்லங்கள் , இதயங்கள் மாற்றம் அடைந்தன.
*வனாந்தரத்தின் பேராயர்* The Bishop of Wilderness 1937
1937 ல் உலகதிருச்சபையின் ஒரு தலைவராக பேராயர் அசரியா அமெரிக்கா சென்றுள்ள சமயம் , வாஷிங்டன்பேராயத்தில் கீழ்க்கண்ட வாசகங்களுடன் , சிறந்ததொரு வரவேற்பு அளிக்கப்பட்டது .
அந்த நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தேசிய தினத்தின் 150 ஆம் ஆண்டு விழா.
நமது . . பேராயருக்கு வெள்ளிவிழா ! ( 1912 - 1937 ) _
" A Bishop of Indian Wilderness And a
Spiritual leader of 1 , 75 , 000 souls with 128Clergy ! "
Spiritual leader of 1 , 75 , 000 souls with 128Clergy ! "
இந்திய வனாந்தரத்தின் பேராயர் ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரத்து ஆத்துமாக்களுக்குத் தலைவர் !
அந்த நாளில் பேராலயத்தில் அவர் ரோமர் 1 : 16 ஆம் வசனத்தின் கருத்தில் உரையாற்றியபோது கூறியவற்றில் ஒன்று *" My presence in this | Cathedral 1s a Direct Proof of the Power of Gospel ! "* இந்தப் பேராலயத்திற்கு என்னுடையவருகையானது சுவிசேஷத்தின் வல்லமைக்கு நேரடி எடுத்துக்காட்டு ஆகும் . என் தகப்பனார் மூலம் , என்னை இச்சிறப்புக்குக் கொண்டு வந்தது . சுவிசேஷமே என்கிறார்.
தனது தகப்பனாரின் குடும்பநிலை நிலையை எண்ணிப் பார்க்கிறார்.
தனது ஊரான வெள்ளாளன்வினையில் , அக்கால மெய்ஞானபுரம் *மிஷனெரி - தென் நெல்லை அப்போஸ்தலன் - ஜாண தாமஸ்* அவர்கள் சுவிசேஷம் அறிவிக்கும் போது , இந்து வாலிபர்களாக , ( தனது தகப்பனாரும் ) அவர் மீது கல்லெறிவது.
சுவிசேஷத்தை அசட்டை செய்வது இவற்றை எல்லாம் நினைவு கூறுகிறார்.
தனது தகப்பன் , கனம் ஜான் தாமஸ் மூலம் எவ்விதம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார் ஒரு உபதேசியாராக . பின்னர் குருவாக - வெள்ளாளன் விளை கிராமத்தில் பணியாற்றிய சம்பவங்களை யெல்லாம் நினைவு கூர்ந்தார் . சுவிசேஷம் எவ்வளவு வல்லமையுள்ளது எவ்வித மாற்றங்களை மக்களில் உண்டாக்குகிறது வனாந்தரம் போன்ற இடங்களை ( தேரிப்பகுதி ) ( தோர்ணக்கல் பகுதி ) செழிப்பான இடங்களாக மாற்றியுள்ளது என்பதையெல்லாம் எண்ணி , எண்ணி இறைவனுக்குத் துதி செலுத்தினார் (ஏசா 35 : 1 )
தமிழகத்துக்கு - குறிப்பாக நெல்லைக்கு வந்த மிஷனெரிகள் , இங்குள்ள தரிசு நிலங்களை , *செழிப்பான கணிதரும் தோட்டங்களாக மாற்றி* கனிகளை உருவாக்கினார்களே ! அந்த கனிகளில் சிறந்த கனியாக - மட்டுமல்ல தோர்ணக்கல் பகுதியைக் கனிகொடுக்கும் செழிப்பான இடங்களாக மாற்றி , கிறிஸ்துவுக்கென்று நற்கனிகளாக ஆத்துமாக்களாக உருவாக்கினாரே - இந்த திரு அசரியா போன்ற பணியாளர் களை எதிர்நோக்கும் திராட்சத்தோட்ட எஜமானுக்கு நாம் என்ன செய்துள்ளோம்.
*இந்திய திருச்சபையின் பேராலயம் 1939*
இந்தியாவிலுள்ள திருச்சபைகள் இந்திய திருச்சபையாகவே செயல்பட வேண்டும். ஆராதனை முறைகள் , பாடல்கள் , இந்திய மயமாக்கப்பட வேண்டும் என விரும்பியவர் நமது பேராயர்.
இவரது திட்டப்படி - முயற்சியால் இந்து முஸ்லீம் கிறிஸ்துவக் கட்டடக்கலை அமைப்புகள் இணைந்ததோர்ணக்கல் பேராலயம் , 1939 இல் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளில் , இந்திய பல சமய ஜாதி மக்களும் , உலகின் ஐந்து கண்டங்களிலுமிருந்து வந்த தலைவர்களும் , இப்பகுதி திருச்சபை வளர்ச்சியைக் கண்டு தேவனை மகிமைப் படுத்தினார்.
*அற்பமான ஆரம்பத்தை யார் அசட்டை பண்ணலாம்* ( சக 4 : 10 )
அந்த மாபெரும் திருநாளில் , திருவிருந்து ஆராதனையில் 15 ஆயிரம் பேர் பங்குகொண்டனர் எனின் , என்னே *சுவிசேஷத்தின் வல்லமை !* மேல்நாட்டவர் மட்டுமின்றி , இந்து முஸ்லிம் பெருமக்களும் இந்த பேராலய கட்டுமான பணிக்கு உதவி தங்களின் அன்பை ஐக்கியத்தை வெளிப்படுத்தினர் . *ஒரு ஐக்கிய சின்னமே இத்தேவாலயம்*.
இன்று இந்த பேராலய வளாகத்தில் துயிலும் பேராயர் அசரியாவின் பணி சின்னமாக இதை நன்றியுடன் நினைவு கூறுவோம் ! அவர் பணி தொடர்வோம் !
*ஆன்மீக வளர்ச்சியின் அறிகுறி ஈகை*
சிறுக கொடுப்பது ஆன்மிக வளர்ச்சியின்மைக்கு அறிகுறி என்பது பேராயா அசரியா அவர்களின் கருத்து கிறிஸ்துவ ஈகை என்ன இது சம்பந்தமான பல கருத்துக்களை எழுதியுள்ளார்.
*பணத்திற்கு கடவுளே சொந்தகாரர் என்று உணராத கிறிஸ்தவன் தன் வாழ்வுக்கு கடன் சொந்தம் ( தேவை ) என உரிமை கொண்டாட இயலாது . "*
கிறிஸ்தவ ஈகை - சிறந்த வழிபாடு கிறிஸ்து நமக்காகத் தம்மையே படைக்க அன்புக்கு ஈடாக நமது ஈகை உள்ளது . காணிக்கைக் சேகரிக்கப்படாமல் படைக்கப்பட வேண்டும் . பயபக்தியுடமையடி வணக்கத்துடனும் காணிக்கை பிரதிடை செய்யப்பட வேண்டும்.
மக்கள் சுவிசேஷத்தின் மூலம் ஆன்மீக ஆசீர்வாதங்களோடு , சரீர நன்மைகளை அதிகம் எதிர்பார்ப்பது குறித்து பேராயர் அசரியா - இவ்வாறு கூறினார்
ஏழை எளியோர்க்கு கிறிஸ்துவின் அன்பைக்கூறி அதைச் செயல்படுத்த வேண்டும் . ஆனால் , அன்பார் இயேசுவை முதலில் கொடுக்க வேண்டும் இரயில் பெட்டியில் மட்டுமல்ல . அந்த இரயிலை இழுத்துச் செல்லும் இயந்திரத்தை ( கிறிஸ்துவை ) முதலில் கொடுக்க வேண்டும் ! அநேகர் இரயில் பெட்டிகளை சரக்கு இரயில் பெட்டிகளையே நோககுகிறார்கள் . மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்பி - கொடுப்பதற்கு வளர்ச்சியடையாத சபைகள் குறித்து , பேராயர் அசரியா மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
*ஐக்கிய திருச்சபை*
இதோ சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுவது ' எத்தனை நன்மை ! எத்தனை இன்பம் சங் , 133 : 1 '
கலலூரியில் படிக்கும் போதே ( பாளையங்கோட்டையில் ) ஜாதி , சமய வேறுபாடுகளைக் களைந்து எல்லோரும் ஐக்கியமாக வாழ வேண்டும் என்ற உணர்வுடன் *கிறிஸ்துவ சகோதரர் கூட்டம்* என்ற அமைப்பை ஏற்டுத்திய வாலிபர் VS அசரியா - தென் இந்திய திருச்சபை ( C . S . I ) - ஜக்கிய சிற்பி என சிறப்பிக்கப்படுவது பொருந்தமானதே
இந்திய திருச்சபை இந்தியமயமாதல் மட்டுமல்ல - ஏராளமான ஜாதி , மதபிரிவுகள் உள்ள இந்தியாவை ஒரே திருச்சபையாக செயல்படுவதின் மூலமே சுவிசேஷத்தின் _ பலனைக் காணமுடியும் என்பது பேராயர் அசரியா அவர்களின் கருத்து.
1919 ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் நடந்த கிறிஸ்துவ உலக மகாநாட்டில் , இந்திய மக்களுக்கு விடுத்த வேண்டுகோள் நாம் பிரிவுடன் நப்பதால் நமக்குள் வலிமை இல்லை
உலகில் 1 / 3 ஜனத்தொகையுள்ள இந்தியாவை . சிலுவைக் கொடிக்குள் கொண்டுவர ஒருமைபாடு அவசியம் இக்கூட்டத்தில் ஐக்கிய திருச்சபை குறித்து கொடுத்த வேண்டுகோள்.
தென் இந்திய திருச்சபை ஐக்கியத்திற்கு மூலைக்கல்
நாட்டியதுடன் - சிந்திக்கவும் ஜெபிக்கவும் தூண்டிற்று.
நாட்டியதுடன் - சிந்திக்கவும் ஜெபிக்கவும் தூண்டிற்று.
பேராயர் அசரியா , தம் வாழ்க்கையின் இறுதிவரை , விசுவாசத்துடன் ஜெபித்து உழைத்தார் . மிக உணர்ச்சியுடன் - இவர் பேசிய சில வரிகள் - அமெரிக்கா , ஐரோப்பா நாடுகளில் , சபை ஐக்கியம் பற்றி பேசலாம் - சிந்திக்கலாம் - அந்த அளவில் நின்று விடலாம் . ஆனால் புறமதஸ்தர்கள் மிகுதியாய் வாழும் இந்தியா போன்ற நாடுகளில் , கிறிஸ்துவ சபைகள் கண்டிப்பாக இதைச் செயல்படுத்தவே வேண்டும்.
Divisions may be a source of wealiness in christian countries.
In non Christian countries , they are a sin and a Scandal
In non Christian countries , they are a sin and a Scandal
கிறிஸ்துவ நாடுகளில் ( இங்கிலாந்து ) சபைப் பிரிவினை ஒரு பெருங்குறை . கிறிஸ்துவ நாடுகள் அல்லாத ( இந்தியா ) நாடுகளில் , இது ஒரு பாவம் , கிறிஸ்துவின் நாமம் தூற்றப்படும் . அவர்கள் யாவரும் ஒன்றாயிருக்க வேண்டும் ( யோ 17 : 21 , 22 ) என ஜெபித்த இயேசுவின் வசனங்கள் பேராயர் அசரியா முன் காட்சியளித்துக் கொண்டே இருந்தது.
*வெட்கத்துடன் திரும்பிய அசரியா*
1935 ஆம் ஆண்டில் இந்துசமயக் கட்டுப்பாடுகள் ஹரிஜனங்கள் , Dr . அம்பேத்கார் மூலம் ஒன்று சேர்ந்தனர் . இவர்கள் யாவரும் ஒருக்கால் , கிறிஸ்துவ மதத்தில் இணையலாம் என பலர் எதிர்பார்த்தனர்.
பேராயர் அசரியா இத்தருணத்தைப் பயன்படுத்தி , Dr . அம்பேத்காரிடம் அணுகிய போது , அவர் கூறிய பதில் அசரியா வெட்கத்துடன் , தலை குனிந்து திரும்ப வேண்டியதாயிற்று . - இந்திய நாட்டில் , இன்று நாங்கள் தாழ்குலத்தவர்கள் - ஒன்று சேர்ந்து நிற்கிறோம்.
எங்கள் வலிமை எங்கள் ஐக்கியத்தில் ' அடங்கியிருக்கிறது.
*உங்கள் கிறிஸ்துவ சபையில் இவ்வித ஐக்கியம் இருக்கிறதா ?*
நாங்கள் ஒற்றுமை குலையாத வகையில் , உங்கள் திருச்சபையில் சேரத்தக்க பிரிவுபடாத சபை ஒன்று உண்டோ ? _ தலை குனிந்த பேராயர் , தலை நிமிர ஜெபத்துடன் விசுவாசத்துடன் ஐக்கிய திருச்சபைப் பணியை இறுதி மூச்சு வரை தொடர்ந்தார். மகாநாடுகள் தொடர்ந்தன.
பிரிவுபடாத சபையாக திருச்சபை செயல்பட வாஞ்சித்து - ஏக்கத்துடன் செயல்பட்ட பேராயர் அசரியா , இந்த ஐக்கியத்தின் ஒரு பகுதியான *தென் இந்திய திருச்சபை* ( C . S . I 1947 ) அமைப்பைக் கண்டு அனுபவிக்கவில்லை.
மோசே இஸ்ரவேல் ஜனங்களை , வனாந்தரத்தில் வழிநடத்தி , கானான் எல்லை மட்டும் வந்தும் வாக்குக் தத்தம் பண்ணப்பட்ட இடத்தைக் காணும் முன் மரித்த வண்ணம் பேராயரும் தமது உழைப்பின் பயனை காணும் முன் 1945 இல் மரித்துப் போனார் , இந்திய திருச்சபை ஐக்கியம் உலகில் நடைபெறாத ஒன்று - உலகமே வியந்து மகிழ்ந்தது என ஒரு தலைவர் கூறுகிறார்.
பேராயர் விட்டுச்சென்ற பணிகள் இரண்டு.
1 . திருச்சபை ஐக்கியம்
2 . சுவிசேஷம் அறிவிக்கப்படல் .
1 . திருச்சபை ஐக்கியம்
2 . சுவிசேஷம் அறிவிக்கப்படல் .
இந்திய மிஷனெரி சங்கம் என்றால் பேராயர் அசரியா
அசரியா என்றால் I . M . S . தோர்ணக்கல் இன்று ஒரு பேராயம் )
ஒரு புண்ணிய பூமி - இது கர்த்தரால் ஆயிற்று - அது
அசரியாவால் ஆயிற்று அவர் கட்டிய ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அவரது கல்லறை நமக்கு கூறும் அருளுரை
*ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு மிஷனெரி*
Every Christian is a Missionary
*ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு மிஷனெரி*
Every Christian is a Missionary
சுவிசேஷத்தை நாள் பிரசாங்கிக்காவிடில் எனக்கு ஐயோ!
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment