முதல் இந்திய ஆங்கிலிக்கன் பேராயர் V . S அசரியா* ( 1912 1945) பகுதி -01
(ஆயராக பணிஏற்ற மூன்று ( 1909 ) ஆண்டுகளுக்குள் ( 1912 ) | பேராயர் )
கர்த்தர் தாம் முன்குறித்தப்படி திட்டங்களை நிறைவேற்றுகிறவர் என்பதை ஆயர் அசரியா குறுகிய காலத்திற்குள் பேராயராக உயர்த்தப்பட்டதின் மூலம் நாம் ஏற்றுக்கொள்ளுகிறோம் , தமிழ்நாட்டில் *சென்னையும் நெல்லையும்* இக்காலத்தில் இரு பெரும்பேராயங்கள் பெரிய பேராயமாகிய சென்னை பேராயத்தின் எல்லா பாகங்களுக்கும் தோரணக்கல் பகுதிக்கும் நடந்தும் , மாட்டு வண்டிகளிலும் செல்வது சென்னைப் பேராயருக்கு மிக கடினமாயிற்று மேலும் இந்திய மிஷனரி சங்கத்தின் மூலம் மக்கள் அதிகமாக கிறிஸ்தவர்கள் ஆயினர்.
இவாகன யாவருக்கும் அந்தந்த சமயங்களில் திருமுழுக்கு அளித்து திருவிருத்துகள் மக்களை தகுதி படுத்த மற்றொரு உதவி பேராயர் தேவை என்பதையும் உணர்ந்தார்.
இதற்காக இவர் ஜெபித்தார்.
தாம் முதல் தடவை அசரியாவைப்பார்த்த போதே கர்த்தர் தமக்கு இதை வெளிப்படுத்தினார் என்பதை உணர்ந்தார்.
மேலும் இந்தியா ஒருவரையே பேராயராக அமாத்த விரும்பி அசரியாவை உதவிபேராயரால் நியமிக்க முடிவு செய்து தோர்ணக்கல்லுக்கு ( ஆயர் அசரியாவுக்கு செய்தி அனுப்பப்பட்டது. அபிசேஷத்திற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டது .
*இந்தியர்களின் முதல் அத்தியட்சர் ஒரு தமிழர்* ( 1912 )
இந்தியர் ஒருவர் அத்தியட்சராக உயர்ந்தது குறித்து கருத்து வேறுபாடுள்ள காலம் அது . 28 - 12 - 1912ல் இந்தியாவின் முதல் ஆங்கிலக்கன் பேராயராக கல்கத்தா பேராலயத்தில் ( இதுவே இந்தியாவின் முதல் தலைமைப் பேராயர் இடம் ) அபிஷேகம் செய்யப்பட்ட அச்சமயம் . இந்தியாவின் 11 பேராயர்கள் ஆராதனையில் கலந்து கொண்டது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
இந்தியர்களின் முதல் பேராயராகும் தகுதி தென்பகுதி நெல்லை நாடார் வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கா - கருப்பு நிறத்தவருக்கு இத்தனை உயர்வா ' ? என முறுமுறுத்தோர் பலர் . ஆனால் சென்னைப் பெராயர் மட்டுமல்ல - இளமையிலேயே அசரியா அவர்களின் அன்பு , அறிவு ஆற்றல் இவைகளை நேரில் கண்ட மேல்நாட்டவர் அநேகர்.
இந்தியாவில் இப்படிப்பட்ட சுவிசேஷ ஆர்வம் கொண்ட ஒருவர் இந்திய திருச்சபையில் பொறுப்பினை ( இந்திய திருச்சபையின் எதிர்கால நோக்குடன் ) ஓரு பகுதியை - உதவிப் பேராயராக ஏற்றுக்கொள்வது பொருத்தம் - ஏற்றனர்.
கல்கத்தா பேராயர் கேப்பிள்ஸ்ட ன் ( Copleston ) இந்தியர் ஒருவரை பேராயராக்குவது மட்டுமல்ல - அவரது கண்காணிப்புக் கென தனியே 29 ( 1 ) ஆஎடுகைப் பகுதியையும் கொடுக்க வேண்டும் என விரும்பினார்.
தமக்குச் சித்தமானவர்களை , தம் வேளை வரும்போது ஏற்ற காலத்தில் உயர்த்தும் ஆண்டவர் - இந்திய மிஷனெரிகள் , இந்திய பணம் . இந்திய நிர்வாகம் - என்ற இலட்சியத்துடன் இந்தியாவில் தேவ இராஜ்ஜியத்தை விரிவடையச் செய்ய விரும்பிய அசரியாவை பயன்படுத்த இவ்வாறு செயலாற்றினார் என நாம் ஏற்கிறோம்.
இது கர்த்தரால் ஆயிற்று.
1910 இல் எடின்பரோவில் உலக மிஷனெரிக் கூட்டத்தில் பேராயர் ஆற்றிய உரை அநேகரின் உள்ளங்களில் இவரது ஆற்றலை மட்டுமல்லாமல் எதிர்கால இந்திய திருச்சபை வளர்ச்சி உணர்வையும் பிரதிபலித்தது - ( 1800 தலைவர்களது 18பேர் மட்டுமே புதியவர்கள் - வெள்ளையர்கள் அல்லாதவர்கள் ) - 36 வயதுடைய *இளங்குருவாக அசரியா ஒருவர்*. தனது உரையை முடிக்கும்பொழுது கூறியவை - இந்திய திருச்சபையில் பின்வரும் சந்ததிகள் எழும்பி - தங்கள் மிஷனெரிகளின் தன்னலமற்ற அன்பின் சேவைக்காகவும் , தியாகத்துடன் அவர்கள் நடத்திய வாழ்க்கைக்காகவும் - எக்காலத்திலும் நன்றி தெரிவித்துக் கொண்டே இருப்பர்.
உங்கள் மிஷனெரிகள் உலகப் பொருட்களைக் கொண்டு ஏழைகளைப் போஷித்தார்கள்.
சரீரங்களைச் சுட்டெரிக்க ஒப்புக்கொடுத்தார்கள் . நாங்கள் ( இந்தியர்கள் ) தொடர்ந்து உங்கள் அன்பையும் நாடுகின்றோம்.
இவரது உரையின் உணர்வுகளை ( இந்திய மக்களின் எதிர்பார்ப்பை ) அக்கால திருச்சபைத் தலைவர்களில் அநேகர் ஏற்றுக் கொண்டனர்.
*தோர்ணக்கல் பேராயம்* 1913
தோர்ணக்கல் , கம்மம் சிங்கரேணி பகுதிகளை உள்ளடக்கிய பகுதி தோர்ணக்கல் பேராயமாக உதயமாயிற்று - *1913 ஆம் ஆண்டு ஜனவரி 1 எட்டாம் நாளில்* , கம்மம் தேவாலயத்தில் , பேராயர் பதவியில் அமர்த்தப்பட்ட கனம் அசரியா அவர்கள் 6 குருமாரும் 8000 கிறிஸ்தவர்களையும் கொண்ட மிகச்சிறிய பேராயத்தின் ஆளுகையை ஒப்புக் கொண்டார்.
சுவிசேஷ வாஞ்சையுடன் பணிசெய்து வந்த புது பேராயர் உண்மையான ஆன்மிக சக்தி பெற்ற உத்தமர் என மக்களாலும் , தலைவர்களாலும் புரிந்து கொள்ளப்பட்டார்.
*பேராயர் அசரியாவின் இலட்சியம்* நாளை தொடரும் .......(22/04/2019)
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது
*மன்னா செல்வகுமார்*
No comments:
Post a Comment