புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

CMS சுத்தாங்க திருச்சபை CMS SPG திருச்சபை

CMS சுத்தாங்க திருச்சபைக்கும் CMS SPG சபைகளுக்கும் உள்ள ஆராதனை முறைகள்
வரலாற்று செய்தி
செவி வழி செய்தி மட்டுமே
*High Order Anglican SPG Mission*
*Low Order Anglican CMS Mission*

கனம்.சாமுவேல் அசரியா அவர்கள் 1909 ல் குருப்பட்டம் பெற்றார்கள்
1912 ல் இந்திய மிஷனரி சங்க பணித்தளமான தோர்ணக்கல்லின் முதல் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.
குறுகிய காலத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட பதவிஉயர்வு 1903 ல் இந்தியமிஷனரிசங்கம் உருவாக்கப்பட்ட காலம் முதல் அதற்கென பாடுபட்டவரும் முதல் IMS மிஷனரியாகச் சென்றவரும் பாலியர்சங்க ஊழியத்தைத் தொடங்கியவரும் பன்மொழிபண்டிதரும் பிஷப்.அசரியா அவர்களுக்கு இணையான அனைத்து தகுதிகளையும் கொண்டவரும் அவரைவிட வயதிலும் குருத்துவஊழியத்திலும் சீனியரான Rev.சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்களையும் அவரது சகோதரர்
Rev.சாலமோன் பாக்கியநாதன் அவர்களையும் பெரிதும் பாதித்தது.
தோர்ணக்கல் பேராயத்திற்கு சீனியாரிட்டி அடிப்படையில் வரவேண்டிய Rev.சாமுவேல் பாக்கியநாநன் ஐயரவர்கள் புறக்கணிக்கப்பட்டது பெரும் வருத்தத்திற்குரிய காரியம்.
மிஷனரிஊழிய கணக்குகளில் நேர்மையும் உண்மையும் கண்டிப்பும் கொண்ட CMS மிஷனரி Rev.சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் அக்காலத்தில் புறக்கணிக்கப்பட்டது
1924 ல்
High Order Anglican SPG Mission
Low Order Anglican CMS Mission
ஆகியவை பேராயர்.நார்மன் டப்ஸ் அவர்களது காலத்தில் ஐக்கிய சிறப்பு டயோசிசன் கவுன்சில் கூட்டம் மூலம் திருமண்டலத்தில் ஒன்றாக ஒருங்கிணைக்க முயற்சித்தபோது *Rev.சாமுவேல் பாக்கியநாதன்*
*Rev.சாலமோன் பாக்கியநாதன்*
*Rev.அருள் மாணிக்கம்*
ஆகிய CMS மிஷனரிமார் திருநெல்வேலியின் தெற்கு,
தென்மேற்கு,
மேற்கு,
வடமேற்கு
வடக்கு
மத்திய கவுன்சில்களில் வடதிருநெல்வேலி வாகைக்குளம் சாட்சியாபுரம் கவுன்சில்களில் உள்ள CMS சபைகளனைத்திலும்
CMS மிஷனரிகளால் போதிக்கப்பட்டு வந்த CMS சங்கத்தின் *அடிப்படைப் போதனைகளான*
*சடங்காச்சாரங்களற்ற சுத்த சுவிசேஷத்தை* பின்பற்றுவது (சுத்தாங்க சுவிசேஷம்) மற்றும் சுவிசேஷம் அறிவித்தல் ஆகியவற்றுக்கு மாறாக
SPG மிஷனரிகளின் கீழ்க்கண்ட சடங்காச்சாரங்கள்
1.சிலுவை வணக்கம்
2.ஆல்டர் வணக்கம்
3.திரியேகதுதியில் மற்றும் விசுவாசப்பிரமாணம் வேளையில் ஆல்டர் நோக்கி திரும்புதல்
4.ஆல்டர் திருமேசையின் பின்புறம் நின்று திருவிருந்து ஜெபம் நடத்துகிற CMS சங்க பாரம்பரியத்தை கைவிட்டு SPG high Anglican படி திருமேசையை சுவரோடு ஒட்டிப்போட்டு பக்கவாட்டில் நின்றபடி திருவிருந்து ஜெபம் நடத்துகிற முறை
5.தூபங்காட்டுதல்
6.சிலுவைக்கு மாலைஅணிவித்தல்
7.திருவிருந்து ஆராதனையில் அப்பம் ரசம் ஆசீர்வதிக்கப்படுகையில் ஆலயமணியை ஒலிக்கச்செய்தல்
8.மேலங்கியின் மேல் CMS குருமார் கறுப்பு Stole அணிவது மாற்றப்பட்டு பலவர்ண மேலங்கி அணிதல் முறை
9.பெரியவெள்ளியன்று சிலுவைகளை கறுப்பு துணியால் மூடுதல்
10.மரணமடைந்தோர் உடல்களை தேவாலயத்திற்குள் கொண்டுவந்து அடக்கஆராதனை நடத்துதல்
ஆகியவை ஆங்கிலிகன் என்ற போர்வையில்
வந்துவிடும் என அஞ்சியதோடு அவை வருவதை தடுக்க இருமிஷன்சபைகளும் தனித்தனி ஆளுகையோடு திருநெல்வேலி திருமண்டலத்தில் 1924 க்கு முந்தைய நிலை தொடர ஐக்கியக் கூட்டத்தில் போராடினர்
CMS மிஷனின் அடிப்படைக் கொள்கை காக்கப் போராடிய இவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
1924 ல் CMS சுத்தாங்க சுவிசேஷ திருச்
1924 ல் CMS சுத்தாங்க சுவிசேஷ சபை என்ற பெயரில் அரசாங்கத்தில் பதிவு செய்து தனிசபையை நிறுவினர்.
62 CMS சபைகள் இந்த புதியசபையில் சேர்ந்து கொண்டன.
மருதகுளம் - ஆழ்வாநேரி சர்க்கிள்
இடையன்குளம்
சர்க்கிள்
ஆகியவற்றில்
சுத்தாங்க சபை பிரிவினையால் பெரும்பாதிப்பு ஏற்பட்டது.
சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.
Rev.G.T.செல்வின்
Rev.ஸ்டீபன் நீல் (இருவரும் பிற்கால பேராயர்கள்) ஆகியோரது முயற்சியால் kiசில சபைகள் டயோசிசன் ஐக்கியத்தில் வந்தன.
டயோசிசனில் செவல் சர்க்கிள் உருவாக்கப்பட்டது.
இன்று CMS சுத்தாங்க சுவிசேஷசபை 5 சர்க்கிள்களின் கீழ் 54 சபைகள் உள்ளன.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜செவி வழி செய்தி இது
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory