புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

John Hyde

அமெரிக்காவின் ஆவிக்குரிய வரலாற்றுப் பக்கங்கள் புகழ்பெற்ற மன்றாட்டு வீரர்களின் பெயர்களை தன்னகத்தே பொன்னால் பொறித்து வைத்துள்ளது.
அமெரிக்காவின் நிழல் உலக கொலைக் குற்றவாளிகளின் பட்டியலில் அல்-கப்போன், ஜாண் டில்லிக்னர் மற்றும் ஜெசி ஜேம்ஸின் பெயர்கள் முன்னிலையில் இருக்குமானால், அதின் ஆவிக்குரிய மாண்புமிக்க வரிசையில், அதின் தேவத்துவ வானில் நட்சத்திரங்களைப் போல என்றென்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கும் - *ஜாண் ஹைடு, E.M.பவுண்ட்ஸ், எட்வர்ட் பேஸன், சார்ல்ஸ் ஃபின்னி, H.C.பெவிஸ்டன், டேவிட் ப்ரெயினார்ட்* என்ற காலத்தால் அழியாத ஆவிக்குரிய ஜாம்பவான்களின் (மா மகா மனிதர்கள்) பெயர்களும் காணப்படவே செய்கிறது..
மன்றாட்டு ஜெபம் என்ற உன்னதக் கலையிலே உயரமாய் உயர்ந்து நின்ற இந்த மா மகா புருஷர்களாலே அமெரிக்க சபை சரித்திரத்திலே புதிய பக்கங்கள் எழுதப்பட்டன.
*"ஜெப அப்போஸ்தலனான ஜாண் ஹைடு வளர்ந்த, ஜெபத்தின் சூழலையே சுவாசமாகக் கொண்டிருந்த அவரது குடும்பத்தில் இயேசு கிறிஸ்துவே நிரந்தர விருந்தாளியாய்த் தங்கி விட்டார்" என்று Francis A. McGaw சொன்னார்.*
ஜாண் ஹைடின் தகப்பனார் Dr.ஸ்மித் ஹாரிஸ் ஹைடு, தாமே ஒரு ஜெப வீரனாய் இருந்தார்..
இசை உலகின் முடிசூடா மன்னனாய் இருந்தான் ஜோஹன் ஸ்ட்ராஸ்..
ஆனால் அவனது மகனாகிய ஜோஹன் ஸ்ட்ராஸ் ஜுனியர் மிகச் சீக்கிரத்திலேயே தன் தகப்பனையும் தாண்டி முன்னுக்கு வந்தான்..
அவன் செய்த ரெக்கார்டு பிரேக்குகளுக்குக் குறைவே இல்லை.
அது போலவே ஜெபம் என்ற பயிற்சிப் பள்ளியிலே கரை கண்ட தன் தகப்பனாரையும் தாண்டி முன் ஓடி *ஜாண் ஹைடு* விட்டுச் சென்ற பதிவுகளும் சுவடுகளும் இந்திய மிஷினரி வரலாற்றுப் பதிவேட்டுப் பக்கங்களில் இன்றும் அழியாமல் நிற்கிறது !
ஜாண் ஹைடு இந்தியாவில் இருந்ததென்னவோ பத்தொன்பதே வருடங்கள் தான் ! ஆனால் என்ன மகிமையான ஆண்டுகள் அவை !
இந்த யாப்போக்குக் கரை யாக்கோபின் போராட்ட ஜெபத்தின் தூண்டுதலால் தூண்டப்பட்டவர்கள் தான் எத்தனை எத்தனை ! இந்த ஜாண் தன் தேவனோடு கழித்த மிக மிக நெருக்கமான நேரங்களை அறிந்திருந்த அவருக்கு நெருக்கமான சிலர் உண்டு..
*பரிசுத்தவானாகிய இந்த ஜாண் ஹைடு கடந்து சென்ற ஒரு கெத்சமனேயும் அவருக்கு இருக்கவே செய்தது !*
*தேவன் ஜாண் ஹைடை அறிந்திருந்தார்..ஜாண் ஹைடும் தன் தேவனை நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.நான் மறுபடியும் சொல்வேன்..*
*"இந்த உலகத்தில் தேவனுடைய வார்த்தையை அறிவதற்கும், அந்த வார்த்தையின் தேவனைத் தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருப்பதற்கும் ஒரு மிகப்பெரிய பார தூர வித்தியாசம் உண்டு..*
ஜாண் ஹைடின் ஆத்துமாவின் இன்பம் ஒன்றே அவரை அடிக்கடி ஜெபத்தின் தனிமைக்கும் மறைவுக்கும் இட்டுச் சென்றது.அவரது குடியிருப்பே அதுவாகிப் போனது.
*தன் நேசரின் சத்தத்தைக் கேட்டதும் செவிகொடுத்ததும் அவர் அங்கே தான் ! ஜெபத்தில் அவர் வளர்ந்ததும், அழுததும் புலம்பியதும் அங்கே தான் !*
*ஆவிக்குரிய உயர்ந்த உன்னத சிகரங்களுக்கு அவர் எழும்பியதும் அங்கே தான் ! தனது ஆவிக்குரிய தசை நார்களை முறுக்கேற்றி அவர் பெலன் கொண்டதும் அங்கே தான் !*
காதலன் ஒருவன் தன் காதலியிடம் மனம் திறந்து பேசும் ஒரு மறைவிடம் போல ஜாணுக்கும் ஒரு மறைவிடம் இருந்தது - தன் நேசரின் நேசத்தில் மூழ்ககிக் களிகூர !
அங்கே அவரது ஆத்தும நேசரும் அவரில் களிகூர்ந்தார் !
*இந்த ஜெபக்கலையிலே ஜாண் ஹைடு ஒரு கைதேர்ந்த கலைஞனாய் இருந்ததினாலேயே அவரைப் பற்றிய பதிவுகள் இன்றும் நம்மிடையே அழியாத பதிவேடுகளாய் உள்ளன !*
"எருசலேமைப் பார்த்து கண்ணீர் வடித்த இயேசுவைப் போலவும், அப்போஸ்தலனாகிய பவுல் தன் நாட்களிலிருந்த உர நெஞ்சுள்ள பாவிகளுக்காக உருகி அழுதது போலவும் ஜாண் ஏங்கி ஏங்கி அழுவார்" என்று அவரது ஜெப அறையின் கதவுகளுக்கு வெளியே நின்று அவரது அழுகுரல் கேட்டவர்கள் சொல்வதுண்டு..
இந்தக் கண்ணீர்க் கலையை எந்த ஒரு பைபிள் காலேஜூம் நமக்குக் கற்றுத்தர இயலாது. இவைகள் வாக்குக்கடங்கா பெருமூச்சுகள் என்று ஜாண் ஹைடு அறிவார்..
அவரை அடிக்கடி இந்தியாவில் சந்தித்த ஒரு பெண் என்னிடம் (ரேவன்ஹில்லிடம்) ஒரு முறை," அவர் ஏதோ வேறொரு உலகத்தில் சஞ்சரிப்பது போலவே சஞ்சரித்தார்.." என்று சொன்னார்.ஆனாலும் மனிதர்களின் ஆத்துமாவை நேசமாய் நேசித்தவர் ஹைடு..
"ஒரு நாளுக்கு ஒரு ஆத்துமாவைத் தாரும்" என்று ஆரம்பித்து, அது இரண்டாகி, மூன்றாகி பின்னர் "ஒரு நாளுக்கு நான்கு ஆத்துமாக்கள் வேண்டும் ஆண்டவரே !" என்று கேட்டு, ஒரு நாளில் நான்கு பேரையாவது கர்த்தருக்குள் நடத்தி விடும் *John Hyde* என்ற *Praying Hyde* ஐ பற்றி உங்களில் எத்தனை பேர் படித்திருப்பீர்களோ நான் அறியேன்..
தன் ஜெபத்திற்குப் பதில் கிடைக்கும் வரை மணிக்கணக்காக தேவ சமூகத்தில் விழுந்து கிடப்பார் ஜாண். தான் கேட்ட கேள்விக்கு ஆம் என்றோ இல்லை என்றோ பதில் வரும் வரை சில நேரங்களில் 40 மணி நேரம் கூட முகங்குப்புற விடாப்பிடியாய் "உம்மை விடுவதில்லை" என்று விழுந்து கிடப்பார் அவர் !
*இந்தியாவின் பஞ்சாபில் அவர் ஊழியம் செய்த நாட்களில் நடந்த கூட்டம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சி இது !*
*மணிக்கணக்காக தன் ஜெப அறையில் தனியே தேவனோடு இருந்து விட்டு கூட்ட மேடைக்கு வந்து நின்றார் ஜாண்..*
*அவர் பேசியதெல்லாம் உருதுவிலும் ஆங்கிலத்திலும் மூன்றே வார்த்தைகள் தான் !*
*"ஓ பரலோகப் பிதாவே !"...*Ai Asmaani Baak !.. அவ்வளவு தான் !*
*அதன் பின் நடந்ததை யார் விவரிப்பது ? ஒரு சமுத்திரமே அந்த ஜனக்கூட்டத்தின் மத்தியில் பிரவாகம் எடுத்து வந்தது போலிருந்தது..* *மகா புயல் காற்றில் மரங்கள் சாய்வது போல தேவ மகிமையின் பிரசன்னத்தில் மக்கள் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தனர் !*
*தேவ அன்பு ஒவ்வொரு இருதயத்திலும் ஊற்றாய் ஊற்றப்பட்டது ! உள்ளம் உடைந்து மக்கள் கதறினர் ! பாவ அறிக்கையின் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராய் மாறி, துதியாய் மேலெழும்பியது !*
*ஒரு மனிதனின் கீழ்ப்படிதலினாலே தேவன் என்னென்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதற்கு அன்றைய நாள் வரலாற்றில் இன்றும் ஒரு சாட்சியாய் நிற்கின்றது !
John Hyde உடன் இருந்த ஒரு மிஷினரி அவரைப் பற்றி எழுதுகிறார்..
மணிக்கணக்காய் தனிமையில் தேவனோடு..எந்த மனித முகங்களையும் பாராமல், மனித சத்தம் கேளாமல்..தேவனுடைய முகத்தை மாத்திரம் பார்த்தவராய், அவரது சத்தம் மாத்திரம் கேட்டவராய் நாட்கணக்கில் இருப்பார் அவர் - ஜாண் ஹைடைப் பொறுத்தவரை இது ஒரு மிகச்சாதாரணமான அன்றாட அனுபவமாகிப் போன ஒன்று..
தங்களை தேவன் தமது ராஜ்யத்தின் மேலும் அதின் காரியங்கள் மேலும் காவலாளிகளாய் ஏற்படுத்தியிருக்கிறார் என்று சிலர் தங்களைப் பற்றி நன்றாகவே அறிவார்கள்.

இன்னும் சிலர், தாங்கள் எப்போதெல்லாம் விழித்திருந்து ஜெபிக்க வேண்டும் என்றும் எப்போதெல்லாம் இளைப்பாற வேண்டும் என்றும் சிறு சிறு காரியங்களில் கூட தேவனிடத்திலிருந்து கட்டளைகள் பெற்றுக் கொள்ளும் அளவு யேகோவா தேவனோடு மிக மிக நெருங்கி நடந்து சஞ்சரித்து அவரது சத்தத்தைக் கேட்பவர்களாகவும், தங்கள் அன்றாட காரியங்களில் கூட அவரிடமிருந்து கட்டளைகளையும் நடத்துதல்களையும் நேரடியாகப் பெறுமளவுக்கு அவரோடு ஒன்றிப்போயிருப்பார்கள்.
சிலர் நாட்கணக்காக இரவெல்லாம் விழித்திருந்து ஜெபித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் தூங்காதபடி அவர்களது இமைகளை அவர் பிடித்து வைத்திருப்பது போலிருக்கும்.
*அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ஜாண் ஹைடு..*
ஆவி உற்சாகமாய் இருந்தாலும் ஜெபித்து ஜெபித்து சரீரம் பெலவீனப்பட்ட ஜாண் ஹைடை பரிசோதித்த மருத்துவர் சொன்னார்..
*"இவரது இருதயம் மிக மோசமான நிலையில் உள்ளது..என் மருத்துவ அனுபவத்தில் இப்படி ஒரு கேஸை நான் பார்த்ததே இல்லை..இவர் எப்படி உயிரோடிருக்கிறார் என்பதே எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது..காரணம் இவரது இருதயமே இயற்கையான தனது இடது பக்கத்திலிருந்து நகர்ந்து வலது பக்கத்துக்கு வந்து விட்டது.."*
காரணம்..
அங்கலாய்ப்பின் ஜெபம்..
கெத்சமனேயின் பிழிந்தெடுக்கப்பட்ட ஜெபம்..
இரவு பகலான ஜெபம்..
போராடி ஜெபிக்கும் ஜெபம்..
செத்தாலும் சாகிறேன் என்று ஜெபிக்கும் ஜெபம்..
இங்கிலாந்திலுள்ள *Hereford ல் Dr.J.Wilbur Chapman* ஒரு முறை பிரசங்கித்துக் கொண்டிருந்தார்.. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகிப் போய்க் கொண்டிருந்ததே தவிர, தேவனுடைய வல்லமையின் பிரசன்னமோ, பாவ உணர்வோ அவைகளின் சுவடோ கூட கூட்டங்களில் காண முடியவில்லை..
Wilbur Chapman சொல்கிறார்.."ஒரு நாள் ஜாண் ஹைடு அங்கே வந்தார்..அவர் வந்தது தான் தாமதம்..தேவனே அந்த ஊருக்கு வந்து இறங்கி விட்டது துல்லியமாகத் தெரிந்தது.."
" தேவனும் ஹைடும் ஒன்றாய் நடந்து வந்தார்கள்..அவர் வந்த நாளின் மாலைக் கூட்டத்தில் Chapman அறைகூவலிட்ட போது அன்று 50 பேர் கிறிஸ்துவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர்.
"எனக்காக ஜெபிப்பீங்களா ?" என்று
Chapman ஹைடைப் பா்த்து கெஞ்சாத குறையாகக் கேட்க, இருவரும் ஒரு அறைக்குள் ஜெபிக்க முழங்காலிட்டனர்.
தனக்குப் பின்னே கதவைத் தாழிட்ட Hyde, தன் இருதயத்தைத் தேவனோடு தாழிட்டார்..
அவரது இருதயத்தின் ஊற்றுக்கண்கள் திறக்கப்பட்டன..
Chapman தொடர்கிறார்.."என் கண்களிலிருந்து கண்ணீர் வெந்நீராய் ஊற்றிக் கொண்டிருந்தது. நான் தேவனோடு இருப்பதை உணர்ந்தேன்.
தேவனை நோக்கி தன் முகத்தை உயர்த்தியவராய், கண்ணீர் பெருக்கெடுத்தோட, இரண்டே வார்த்தைகள் ஜாண் ஹைடின் வாயிலிருந்து வெளிப்பட்டன.."ஓ ! தேவனே !"
அடுத்த ஐந்து நிமிடங்கள் நிசப்தம்..
தேவனோடு பேசிக் கொண்டிருந்தவராய், என் தோள்களில் கை போட்டு என்னை அணைத்தவராய், எந்த மனிதனும் இது வரை கேட்டிராத விண்ணப்பங்களும் அங்கலாய்ப்புகளுமான ஜெபங்கள் அவரது இருதயத்திலிருந்து புறப்பட்டு வந்ததை முதல் முறையாகக் கேட்டேன்..
முழங்காலிலிருந்து அன்று எழும்பும்போது தான் அறிந்தேன்..
உண்மையிலே ஜெபம் என்றால் என்னவென்று !
மிக நீண்ட மன்றாட்டுகளுக்கும் விண்ணப்பங்களுக்கும் ஜெபங்களுக்குமெல்லாம் அவசியமே இல்லை என்று வாதாடுபவர்கள் உண்டு. ஆனால் " மிக அதிகமாய் தங்களை ஜெபத்திலும் விண்ணப்பத்திலும் ஊற்றியவர்களே மிக அதிகமாய் சாதித்தவர்கள் " என்ற காலத்தால் அழியாமல் நிற்கும் நிரந்தரமான பதிவை மட்டும் அவர்களால் அழிக்கவே முடியாது !
*நீண்ட கால ஜெபங்களே நீண்டு நிலைத்து நிற்கும் எழுப்புதலைக் கொண்டு வருகின்றன..*
*தேவனை வனைவது அல்ல ஜெபம்..அது நம்மை வனைகிறது..*
*நாம் நினைக்கிறபடியெல்லாம் தேவனை நம் இஷ்டத்துக்கு வளைப்பது அல்ல ஜெபம்..*
*அது தேவனுடைய இருதயத்தை நாம் அறிந்து அவரது* *பரிபூரண சித்தத்துக்கு*
*நம்மை ஒப்புக்கொடுப்பது..*
*தேவனின் நன்மதிப்பைப் பெறுவதோ, அவரிடமிருந்த காரியங்களை சாதித்துக் கொள்வதோ அல்ல ஜெபம்..*
நாங்கள் ஏன் ஜெபத்தை அடிக்கடி இவ்வளவு வலியுறுத்துகிறோம் என்று நீங்கள் கேட்டால்," இயேசு அப்படியே ஜெபித்தார்.." என்றே சொல்லுவோம்.
இரட்சகர் இரவெல்லாம் ஜெபித்தார் என்று லூக்கா தனது சுவிசேஷத்தில் திரும்பத் திரும்ப எழுதி வைத்தார்.
*நாம் அவரை விட மேலானவர்களோ ?*
தொடரும்
அடைபட்ட அக்கினி Pr.Romilton

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory