அமெரிக்காவின் எழுப்புதல் வரலாற்றுப் பதிவேடுகளில் ஆன்மீக இராட்சதராய் நிமிர்ந்து உயர்ந்து நிற்கிறார் *சார்ல்ஸ் ஃபின்னி..*
7 அடி உயரம் கொண்டவர் என்று அவரது சரீர உயரத்தைப் பற்றி சொல்லப்படுவது உண்மையானால், சரீர வளர்ச்சியிலும் அவர் ஒரு ஆஜானுபாகுவானவரே !
அறிவிலும் அவர் குறைந்தவர் அல்ல..
கல்வியிலும் அறிவாற்றலிலும் அவரது காலத்திலிருந்தவர்கள் அநேகரை விட அவர் உயர்ந்தே நின்றார்..
கல்வியிலும் அறிவாற்றலிலும் அவரது காலத்திலிருந்தவர்கள் அநேகரை விட அவர் உயர்ந்தே நின்றார்..
இந்த, ஆவியில் அனல் கொண்டு அபிஷேக அக்கினியால் தகித்துக் கொண்டிருந்த ஃபின்னியின் பிரசங்கத்தைக் கேட்டு எரிச்சலடைந்து யாரோ ஒருவனோ, அவன் பின்னாலேயே ஆலயத்தில் உட்கார்ந்திருக்கும் அனைவருமோ சில நேரங்களில் எழுந்து போய் விட்டாலும், பிரசங்கத்தை முடித்த கையோடு அடுத்த ஃபிளைட் பிடித்து அடுத்த மீட்டிங்குக்கு ஓடும் நம்ம ஊர் சுவிசேஷகர் அல்ல சார்ல்ஸ் ஃபின்னி..
ஒரு ஊரிலே எழுப்புதலும் மனந்திரும்புதலும் நடக்கும் வரை அந்த ஊரை விட்டு நகராத ஒரு இரும்பு மனிதர் அவர் !
தனது அனல் தெறிக்கும் கண்டிப்பான பிரசங்கத்தினால் கூட சில வேளை சிலரை அவர் இழக்க நேரிட்டாலும் தன் ஜெபத்தினால் அவர்களை மீட்டு தேவனிடம் திருப்பிக் கொள்ளுவார் இந்த ஆவிக்குரிய ஜாம்பவான் ! காரணம் ஜெபம் !
*ஆரோனும் ஊரும் மோசேயின் கரங்களைத் தாங்கி நின்றது போல, Finney*
*ஐயும் ஜெபத்தில் தாங்கி நின்றனர் Father Clery மற்றும் Father Nash என்ற இருவர்..*
*ஐயும் ஜெபத்தில் தாங்கி நின்றனர் Father Clery மற்றும் Father Nash என்ற இருவர்..*
இங்கிலாந்திலுள்ள போல்ட்டனில் ஸ்காட்லாந்து சபையிலே Dr.Fawcett என்ற அருமையான தேவ மனிதருக்குக் கீழே
உதவிப் போதகராக நான் (ரேவன்ஹில்) இருந்த நாட்கள் அவை..
பூர்வகால ஜெபவீரர்களின் ஜெப வாழ்க்கைகளையும் பிரசங்க வேந்தர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தி, ஆவிக்குரிய புத்தகங்களை நேசிக்கவும் படிக்கவும் எனக்குக் கற்றுத் தந்தவரும் அவரே !
உதவிப் போதகராக நான் (ரேவன்ஹில்) இருந்த நாட்கள் அவை..
பூர்வகால ஜெபவீரர்களின் ஜெப வாழ்க்கைகளையும் பிரசங்க வேந்தர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தி, ஆவிக்குரிய புத்தகங்களை நேசிக்கவும் படிக்கவும் எனக்குக் கற்றுத் தந்தவரும் அவரே !
அவரோடு ஊழியம் செய்து வந்த நாட்களில் நான் சந்தித்த வயதான பெண்மணி ஒருவர் சார்ல்ஸ் ஃபின்னி பற்றி சொன்ன சம்பவம் ஒன்று வருடக்கணக்காக சவாலாக இருந்தது !
அவர் சொன்னது இது தான்..
" ஒரு முறை போல்ட்டனுக்கு ஃபின்னி ஊழியத்துக்கு வந்தார். அவர் வருமுன், எங்கள் வீட்டு வாசலைத் தேடித் தட்டிக் கொண்டு நின்றனர் இருவர், தாங்கள் சில நாட்கள் தங்க இடம் கிடைக்குமா என்று..
ஏற்கனவே இடம் நெருக்கடியான நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் கடைசியில் ஒரு சிறிய அறையை அவர்களுக்கு வேறு ஒருவர் மூலம் ஆயத்தப்படுத்திக் கொடுத்தேன்..
அவர்களுக்குக் கிடைத்ததோ வாரம் 25 சென்ட் வாடகையில் ஒரு இருளடைந்த ஈரம் நிறைந்த அறை.அதை சந்தோஷமாக எடுத்துக் கொண்ட Father Clery மற்றும் Father Nash என்ற அந்த ஜெப வீரர்கள் இருவரும் Finney கூட்டம் நடத்திய இரண்டு வாரங்களும் அந்தகாரத்தின் வல்லமையோடு ஜெபத்தில் போராடிக் கொண்டிருந்தனர்.
கூட்டத்தின் வெற்றியும் பெயரும் Finney க்கு போனாலும், அவரைப் பின்னிருந்து தாங்கியவர்களோ இந்த இருவருமே ! அவர்களது கண்ணீரும் அங்கலாய்ப்பும் ஜெபமும் தேவனுடைய நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது !
தொடரும் அடைபட்ட அக்கினி Pr.Romilton
No comments:
Post a Comment