மிஷனரி பில்லி பிரே தினம்*
ஜீன் 01
ஜீன் 01
ஒருமுறை ஹமிக்ஸ் என்ற இடத்தில் இருந்த ஒரு தேவாலயத்தில் போதகர் ஒருவர் செய்தியளித்துக் கொண்டிருந்தார் , அவர் ஜனங்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார் .
யாராவது எழுந்து நின்று , தேவன் என் சகல பாவங்களையும் மன்னித்து என்னைச் சுத்திகரித்துவிட்டார் என்று கூறமுடியுமா ?
இச்செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்த பில்லி , இதயத்தில் மிகவும் குத்தப்பட்டார் .
நான் பரிபூரணமாகச் சுத்திகரிக்கப்பட்டேன் என்று என்னால் கூறமுடியாதா ? தன்னுள்ளே கேள்விக் கணைகளைத் தொடுத்தார் .
பின்னர் மிகவும் தீர்க்கமான குரலில் போதகரைப் பார்த்து நான் பரிபூரணமாகச் சுத்திகரிக்கப்பட்டேன் என்று கூறினார் .
இப்பதிலைக் கூறியபின் சொல்லி முடியாத சந்தோஷத்தினால் அவர் நிறைந்து தேவனை துதித்துக் கொண்டே தன் வீட்டிற்குச் சென்றார் .
அன்றுமுதல் ஒவ்வொரு நொடிய டவருக்குள் பரிசுத்தமாக வாழ ஆரம்பித்தார் .
மக்களால் பிரசங்கி என்று அழைக்கப்பட்டார் .
எப்பொழுதும் சந்தோஷத்தினால் நிரம்பி நடனமாடும் வழக்கமுடையவர் .
தன்னுடைய சந்தோஷமான நடனத்திற்கான காரணங்களையும் தன் நண்பர்களிடம் கூறினார் .
நான் துக்கப்பட முடியாத அளவிற்கு தேவன் என்னை சந்தோஷப்படுத்திவிட்டார் .
“ எவ்விதச் சந்தேகமுமில்லாமல் நான் குதித்து ஆடிப்பாடுகிறேன் . என் பாதங்களை யாரும் கீழே பிடித்து வைக்க முடியாது . அப்படி யாராவது என் பாதங்களை வெட்டிவிட்டாலும் அவை மீண்டுமாக வளர்ந்து விடும் " . உண்மையிலேயே தான் பெற்ற சந்தோஷத்தை செயலில் காட்டியவர் இவர் .
ஆடம்பரமான வாழ்வு வாழாமல் மிகவும் எளிய வாழ்வையே மேற்கொண்டார் .
தன்னைக் காணவரும் அனைவரையும் சிரிக்கவைத்து அனுப்புவது இவருக்கு கை வந்த கலை .
பில்லி , வியாதிபட்டிருந்தபோது மரித்துவிடுவார் என்று மருத்துவர் கூறிவிட்டார் .
பில்லி அவரிடம் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் . நான் சீக்கிரம் பரலோகத்திலிருப்பேன் . அங்கு உங்களைப் பற்றி கூறுவேன் . நீங்களும் அங்கு வந்து சேருங்கள் என்று நகைச்சுவையுடன் கூறிய இவர் அநேகரைக்கிறிஸ்துவுக்குள் ஆதாயப்படுத்தினார்.
No comments:
Post a Comment