புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி பாலியர் சங்கம் பிறந்த வரலாறு

திருநெல்வேலி பாலியர் சங்கம் பிறந்த வரலாறு

சிறு குழந்தைகளும் கூடக் கிறிஸ்தவ ஒழுங்கிலும் , பக்தியிலும் வளர்க்கப்பட வேண்டும் என்பதில் நெல்லை C M S மிஷனரிகளும் , பெரியவர்களும் தனிக்கவனம் செலுத்தியுள்ளனர். என்பதனை வரலாற்றால் நாம் அறிந்து கொள்ள முடிகிறது .

முதல் C . M . S மிஷனரியான திரு . ரேனியஸ் ஐயர் கிராமங்கள் தோறும் ஞாயிறு ஆராதனை முடிவடைந்ததும் , சிறுவர்களுக்கு வேதாகம் வகுப்புகள் நடத்தும்படி ஒழுங்குகள் செய்தனர் .

பெற்றிட் ஐயரவர்கள் காலத்திலும் இம்முறை தொடர்ந்து வந்தது .

அதன் பின்பு மிஷனரியாக வந்த நியூமன் ஐயர் அவர்கள் , இறைப்பற்றை வளர்க்கும் பத்திரிகை களை வெளியிடும் புதிய முறையை ஊழியத்தில் கொண்டு வந்தார் .

இதன்படி சபை ஊழியர்களும் , படிக்கத் தெரிந்த சபைமக்களும் ஆவிக்குரிய வளர்ச்சியில் முன்னேறும்படி , *" நற்போதகம் "* என்னும் மாத இதழ் வெளியிடப்பட்டது .

அதனைத் தொடர்ந்து சிறுவர்க்குப் பயனளிக்கும் வண்ணம் *" பாலியர் நேசன் ”* என்னும் - இதழ் மூன்று மாதங்களுக்குக் கொரு முறை வெளியிடப்பட்டது .

இதற்குச் சிறுவர்களிடையே சிறந்த வரவேற்பிருந்தது என்பதலன அப்போது மிஷனரியாக இருந்த திரு . ஜாண் தேவசகாயம் தனது நாட்குறிப்பில் குறித்து வைத்துள்ளார் . ( C . M . Report J . D . 1851 )

நியூமன் ஐயரவர்கள் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிய ( 1850 - இன் பிற்பகுதி இரண்டொரு ஆண்டுகளில் பாலியர் நேசன் பத்திரிகை வெளிவருவது நின்றுவிட்டது .

நியூமன் ஐயருக்குப் பின்வந்த சார்ஜென்ட் ஐயரவர்கள் *" நற்போதகம் "* பத்திரிக்கையை மட்டும் தொடர்ந்து வெளியிட்டனர் .

*" பாலியர் நேசன் "* வெளிவராவிடினும் வட்டார மிஷனரிகளாயிருந்த மெய்ஞ்ஞானபுரம் ஜாண் தாமஸ் , பண்ணைவிளை ஜாண் தாமஸ் டக்கர் , நல்லூர் ஷாவற்றர் போன்றோர் சிறவர்களுக்கெனச் சிறப்பான முறையில் ஊழியம் செய்தனர் .

கிராமங்களில் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்படக் கட்டாயப்படுத்தப்பட்டனர் .

பள்ளிகளில் சி று வ ர் க ளு க் கு  ேவ த ப  ா ட ம் கற்றுக்கொடுக்கப்பட்டதோடு , வேதவசனங்களை மனப்பாடம் செய்யவும் பயிற்சி கொடுக்கப்பட்டது.

1869 - ம் ஆண்டில் திருச்சபையின் ஆட்சிப் பொறுப்பில் ஒரு பகுதி C . M . S வட்டார , சுதேசத் திருச்சபை மன்றங்களிடம் ( C . M . S Districts Native Church Council ) ஒப்படைக்கப்பட்டது .

S . PG . வட்டங்களும் இம்முறையைப் பின்பற்றின . அதுமுதல் ஆண்டிற்கொருமுறை நடத்தப்படும் கூட்டங்களைத் தவிர சிறுவர் ஊ ழியத்தில் வேறு எது வும் நடைபெற்றதாகத் தெரியவில்லை .

ஆழ்வானேரி சர்க்கிளைச் சேர்ந்த சாமுவேல் பாக்கியநாதன் எனும் இளைஞர் மதுரை அமெரிக்க மிஷன் , *“ மண்டப சாலை ”* என்னும் ஊரில் நிறுவி நடத்தி வந்த பள்ளியில் தலைமை ஆசிரியராய்ப் பணியாற்றினார் .

தன் பள்ளியில் படித்த கிறிஸ்தவ , இந்து மாணவர்கள் பேசிய கெட்ட வார்த்தைகளையும் பொய்களையும் கேட்டு வேதனைப்பட்டுத் தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணித்து சிறுவர்களிடையே ஊழியம் செய்தார் .

அவர் ஆ சி ரி ய ப் பயிற்சி பெறாதவராகையால் அவ்வேளையில் இருந்து நீக்கப்படவே , சார்ஜென்ட் அத்தியட்சருடைய எழுத்தாளராகப் பாளையங்கோட்டையில் 1890 - ல் பொறுப்பேற்றார் . - மாலை வேளைகளில் பாளையங்கோட்டை C . M . S உயர்நிலைப் பள்ளியின் சிறுவர் விளையாடும் மைதானத்துக்குச் செல்லும் அவர் , அங்கு கிறிஸ்தவ மாணவர்களிடையே காணப்பட்ட கெட்ட பழக்க வழக்கங்களைக் கண்டு வருந்தி , சிறுவர்களிடையே இறைப்பற்றை வளர்க்க ஏதாகிலும் செய்தல் வேண்டும் என எண்ணி , பக்தியில் சிறந்தவரும் , ஆலோசனைகள் கொடுப்பதில் நிகரற்றவரும் , சாராள் தக்கர் பள்ளியின் ஆசிரியருமான திரு . G . S . மதுரம் ஆசிரியரைச் சந்தித்தார் .

" எதைச் செய்தாலும் , குறைந்தது ஆறுமாத காலமாவது தெய்வ கிருபைக்காகவும் , இறைவழி நடத்துதலுக்காகவும் ஜெபித்துக் காத்திருத்தல் வேண்டும் " என அவர் ஆலோசனை கூறியதோடு .

இருவரும் இணைந்து மாலை வேளைகளில் நகருக்கு வெளியே டக்கரம்மாள்புரம் வரையிலும் சென்று இந்தக் காரியத்துக்காக ஜெபித்தனர் .

1891 - ம் ஆண்டு ஜூன் மாதம் சிறுவரிடையே சிறப்பு ஊழியம் தொடங்க என்னென்ன திட்டங்கள் அமைப்பது , அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைக் குறித்து சிறுவர் ஊழியத்தில் அக்கறை கொண்ட மக்கள் பலர்கூடி ஜெபித்து முடிவெடுப்பது நன்று எனத் தீர்மானித்தனர் .

அவ்வாறே பாயைங்கோட்டை சபையில் சிறந்தவரெனக் கருதப்பட்ட சாலமோன் ஞானியார் தலைமையில் பாளையங்கோட்டை அஸ்போர்ன் ஞாபகார்த்தப் பள்ளியில் *1891 ஆண்டு ஜூன் மாதம் 20ம் நாளில்* நடந்த கூட்டத்தில் பலவிவாதங்களுக்குப் பின் , *“ பாலியர் பக்தி விருத்திச் சங்கம் ”* என்ற ஒன்றைத் துவக்க வேண்டும் .

சிறுவர்களுக்கென ஊழியம் செய்ய மிஷனரிகளை நியமித்து அவர்களைத் தாங்க வேண்டும் எனத் தீர்மானித்தனர் .

பாலியர் சங்கத் தலைவராக திரு . சாலமோன் ஞானியாரும் , காரியதரிசியாக திரு . சாமுவேல் பாக்கியநாதனும் நியமிக்கப்பட்டனர் .

இவ்வாறு ஆறுமாதங்களாகப் பலர் முழங்கால் முடக்கியதன் விளைவாகத் திருநெல்வேலி C . M . S . பாலியர் பக்தி விருத்தி சங்கம் 1891 - ம் ஆண்டு ஜூன் மாதம் 20 - ம் நாள் மாலை நிறுவப்பட்டது .

சங்க அங்கத்தினர்களான திரு . சாமுவேல் பாக்கிய நாதன் . , திரு . R . V . ஆசீர்வாம் , திரு . S . G . மதுரம் , திரு . ஞான சிகாமணி , திரு . G . தேவதாசன் , திரு . G . மாணிக்கம் , திரு . J . S . தேவசகாயம் , திரு . அப்பாவு போன்றோர்  சங்கத்தின் சார்பில் ஓய்வு நேரங்களில் சிறுவர்களுக்குக் கூட்டங்கள் நடத்தினர் .

பாலியர் நேசன் பத்திரிகையும் மீன்டும் வெளிவரத் தொடங்கியது .

ஆங்கிலேயர் ஆண்ட காலமாயிருந்த போதிலும் , இந்தியரின் தனி முயற்சியால் தொடங்கப்பட்ட இச்சங்கம் வெற்றிகரமாகத் தன் முதலாண்டை முடித்தது .

சங்கத்தின் வெற்றி நடையைக் கண்ட ஆங்கிலேய மிஷனரிகளன , A . N C . ஸ்ற்றோஸ் ( A . N . C . Stors ) ஐயரவர்களும் , ப்ரைஸ் ஐயரவர்களும் இச்சங்கத்திற்கு ஆதரவளித்ததோடு ,ஸ்ற்றோஸ் ஐயர் சங்கத்தலைவராகவும் , ப்ரைஸ் ஐயர் துணைத்தலைவராகவும் இருக்க ஒப்புக்கொண்டனர் .

இவ் வூழியத்தின் இரண்டாம் ஆண்டில் திருநெல்வேலி C . M . S வட்டங்கள் அனைத்துக்கும் இவ் வூ ழி ய ம் ப ய ன் த ர  ேவ ண் டு  ெம ன த் தீர்மானிக்கப்பட்டு திருநெல்வேலித் திருச்சபைகள் அனைத்தையும் சந்தித்து சிறுவர்களுக்குள் பக்திவிருத்திக் கூட்டங்களை நடத்திவர லூக் ஜாண் எனும் ஆசிரியர் சங்கத்தின் முதல் மிஷனரியாக மாதம் ரூ . 18 சம்பளத்தில் ( 1892 ) நியமிக்கப்பட்டார் .

1892ம் ஆண்டு முழுவதும் வாசித்து பயனடைவதற்குரிய வேதபாகங்கள் ஒரு சிற்றட்டையில் அச்சிடப்பட்டு விரும்பிய யாவருக்கும் வாங்கப்பட்டது .

*" பாலர் மனமகிழ்ச்சி தினம் '* கொண்டாடும் வழக்கமும் ஏற்பட்டது .

பாலர் மனமகிழ்ச்சி தினச் சிறுவர் பவனியில் பாடும்படி , *" பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும் "* எனும் அருமையான கீதம் திரு . சாமுவேல் பாக்கியநாதன் அவர்களால் இயற்றப்பட்டு , பாலியர் நேசனில் வெளியிடப்பட்டது .

1893 இல் லூக் ஜாண் மிஷனரியுடன் இணைந்து ஊழியம் செய்யும்படி மருதகுளத்தைச் சார்ந்த டேவிட் தேவசகாயம் உபதேசியார் நியமிக்கப்பட்டார் .

சங்கம் தொடங்கிய நான்கு ஆ ண் டு க ளுக்குள் மூன்றாவது மி ஷ ன ரி யும் தேவைப்படும் அளவுக்குச் சங்கம் வளர்ந்தது .

மூன்றாவது நிரைனரியாக வந்தவர் திரு . ஆபிரகாம் உபதேசியார் ஆவார் . ( 1994 ) இம் மூன்று மிஷனரிகளும் C . M . S . பாஸ்ட்டரேட்டுகள் , கிராமங்கள் அனைத்தையும் சந்தித்து சிறுவர்களை ஆவிக்குரிய வழியில் வழிநடத்தினர் , பாளையங்கோட்டை கிறிஸ்தவப் பள்ளி மாணவ மாணவியர்களுக்குள் ஊழியம் செய்ய  *" நம்பிக்கை அணி ”* ( The Band of Hope ) என்றதொரு அமைப்பை ( 892 - 93 ) ப்ரைஸ் ஐயர் ஏற்படுத்தினார் .

1894ல் இங்கிலாந்திலுள்ள சிறுவர் சிறப்புப் பணி மிஷன் ( Children Special Service Mission ) எனும் அமைப்புடன் நம்பிக்கை அணி இணைக்கப்பட்டது .

1895 இல் சிறுவர்களின் வேத அறிவை வளர்க்கும் நோக்குடன் வேதாகம ஐக்கிய பீடங்களை ( Scripture Union Centres ) ட்ரைஸ் ஐயர் உருவாக்கினார் .

1896 - ல் நெல்லையில் இயங்கி வந்த *" நம்பிக்கை அணி, வேதாகம ஐக்கிய பீடங்கள் , பாலியர் பக்தி விருத்தி சங்கம் எனும் மூன்று அமைப்புகளும் ' நம்பிக்கை அணி* எனும் ஒரே அமைப்புக்குள் வந்தன 1898ல் நெல்லை சிறுவர் ஊழியம் நம்பிக்கை அணி எனும் பெயரைக் கைவிட்டு , " *திருநெல்வேலி பாலியர் மிஷன்* - ( The Tirunelveli Children ' s Missior ) எனும் பெயரைத்தெரிந்து கொண்டது .

1899 இல் நெல்லை பாலியர் சங்க நான்காவது மீ ஷ ன ரியாக சாமுவேல் உபதேசியார் நியமிக்கப்பட்டார் .

இங்கிலாந்திலிருந்தும் சிறுவர் சிறப்புப்பணி மிஷனரிகள் பலர் வந்து பாலியர் சங்கச் சார்பில் கூட்டங்கள் நடத்தினர் .

அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திரு . ஹெர்க் லாட்ஸ் ( B , Herklorts 1899 ) திரு ஆரோன்ஸ்மித் ( M . E , Arrowsinith 1904 ) என்போராவர் .

1904 ஆம் ஆண்டு நெல்லை பாலியர் சங்கத்தின் தோற்றத்துக்குக் காரணராயும் . அதன் காரியதரிசியாயும் இருந்து அயராது உழைக்க திரு . சாமுவேல் பாக்கியநாதன் . இந்திய மிஷனரி சங்கத்தின் முதல் மிஷனரியாகத் தோர்ணக்கல்லுக்குச் சென்றார் .

அவரிடத்தை நிரப்ப ஆண்டவர் தெரிந்து கொண்ட இழியர் திரு . G , தேவதாசன் ஆசிரியரே . இவருக்குப் பின் வந்த திரு . சாலமோன் பாக்கியநாதன் அவர்கள் இச்சங்கத்தின் ஊழியராகப் பணியாற்றிப் பின்பு இந்திய மிஷனரி சங்க ஊழியராகப் புறப்பட்டுச் சென்றார் , இடைக்காலத்தில் கௌரவ ஊழியர்களால் பாலி யர் நேசன் பத்திரிகை அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது .

Rev . எர்வர்ட் காரியதரிசியாக 21 ஆண்டுகள் இருந்து செயலாற்றினார் . இவர் காலத்தில் சிறுவர்களுக்கென மாணவர் முகாம் குற்றாலத்தில் தொடங்கப்பட்டது.

1943 - ம் ஆண்டிலிருந்து டீக்கன்மார்களும் இவ்வூழியத்தில் பங்குபெற அழைக்கப்பட்டனர் .

நடுநிலைப்பள் ளி கள் , உயர் நி  ைல ப் பள் ளி மாணவ - மாணவியரைச் சந்திப்பதற்கென ஒரு சிறப்பு ஊழியமும் தொடங்கப்பட்டது 1944 - லில் பொது மக்களும் ( Laymen ) சிறுவர் ஊழியத்தில் இணைக்கப்பட்டனர்.

1945 - இல் மாணவ மாணவியர்கள் தமிழில் கதை , கட்டுரை , க வி தை க ள் எழுதும் படி ஊக்குவிக்கப்பட்டனர் .

தரமானவை *" பாலியர் நேசன் ”* இதழில் பிரசரிக்கப்பட்டதுடன் , எழுதியவர்க்குப் பரிசுகளும் அளிக்கப்பட்டது .

1949ம் ஆண்டு முதல் தினசரி தியான நாட்குறிப்பு அட்டை அச்சடிக்கப்பட்டு சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது .

1951 - இல் மாணவியர்க்கெனத் தனிமுகாம் தொடங்கப்பட்டது .

ஆண்டிற்கு ஆண்டு சிறுவர் சோழியம் விரிந்து வளர்ந்தது .

1956 இல் சிறுவர் வாரம் என ஆண்டில் ஒரு வாரம் கொண்டாடப்பட்டது . அந்த ஞாயிறன்று குழந்தைகள் ஆசீர்வதிக்கப்படும்படி ஆசீர்வாத ஆராதனையும் நடத்தப்பட்டது .

1956 இல் 1290 கிராமங்கள் சிறுவர் ஊழிய மிஷனரிகள் மூலம் சந்திக்கப்பட்டதென்பது மகிழ்ச்சிக்குரியது .

இதுவரை சிறுவர் ஊழியம் ( Children ' s Mission ) , இளைஞர் ஊழியம் ( Youth Work ) எனத் தனித்தனியாக இயங்கிவந்த இரண்டும் *சிறுவர் ஊழியம் என ஒன்றாக இணைந்து* 1957 இல் செயல்படத்தொடங்கியது .

சிறுவர்களின் வேத அறிவை ஊக்குவிக்கும் வகையில் பாலியர் ( நேசன் இதழில் வெளிவரும் வேத வினாக்களுக்கு ஒழுங்காகவும் , சரியாகவும் விடை எழுதுவோருக்கு ஆண்டின் இறுதியில் சான்றிதழ் வழங்கும் முறை 1960 - இல் கொண்டுவரப்பட்டது.

சிறுவர் ஊழியப்பாதையின் வெற்றிமிகு எழுபதாம் ஆண்டாகிய 1961 , சிறுவர் தாலந்துப்போட்டிகள் வைக்கப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது .

*பாலியா சங்க சுய ஆதரவு திட்டத்திற்கென* பாலியர் சங்க ஆயுட்கால அங்கத்தினர் சேர்க்கும் முறை 1963 இல் ஏற்படுத்தப்பட்டது .

இது வரையிலும் ஆங்காங்கே வாடகை இல்லங்களிலிருந்து செயல்பட்டு வந்த பாலியர் சங்க அ லு வ ல க த் திற் கு நிரந்தர மான இடம் இன்றியமையாததாகிவிட்டதால் பேராயர் இல்ல வளாகத்திற்குள் இடம் ஒதுக்கப்பட்டு 1965 - இல் அதற்கென ஒரு தனிக் கட்டடமும் கட்டப்பட்டுப் பாலியர் சங்க அலுவலகம் அங்கு மாற்றப்பட்டது .

இதுவே இப்பொழுது நாம் காணும் பாலியர் சங்கக் கட்டடம் ஆகும் .

1966 இல் நெல்லைத் திருமண்டலப் பாலியர் சங்கம் வடக்கு , மத்திய , தென் கவுன்சில் என 3 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது .

1975 - இல் பாலியர் சங்கப் பணிக்கெனத்தங்களுக்கு அருமையானவர்கள் பெயரில் வைப்பு நிதி கொடுத்துப் பலர் ஊழியத்தை ஆதரித்தனர்.

1979 - ம் ஆண்டு சிறுவர் ஆண்டாகக் கொண்டாடப்பட்டது .

சிறுவர் திரளணி நடத்தியும் , ஓவியம் , கதை , கவிதை போன்ற பல த் துறைகளி லும் சிறு வர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர் .

வெற்றிபெற்றோருக்கு சுழற்கேடயம் பரிசுகள் , நற்சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

1980 - 81 இல் 52 சேகரங்களில் சிறுவர் ஊழியம் நடைபெற்றது . ஏறக்குறைய 4000 பாலியர் சங்க வேதவாசிப்புக் கார்டுகளும் , 18 , 800 பாலியர் நேசன் பத்திரி  ைக ளு ம் இ வ் வ  ான் டில் வழங்கப்பட்டிருந்தது. என்பது சங்கத்தின் வளர்ச்சிக்குப் போதிய சான்றாகும் .

திருச்சபைகளில் பாலர் ஆராதனை நடத்தவும் , ஆயுட்கால அங்கத் திட்டம் , பாலியர் நேசன் வாசிப்பு போன்ற பணித்திட்டங்களை ஊக்குவிக்கவும் பாலியர் சங்க நண்பர் வட்டம் ( 1980 - 81 ) தொடங்கப்பட்டது.

பாலியர் சங்கப் பொருளாதார அபிவிருத்திக்கென பல திட்டங்கள் சங்க ஊழியர்களால் செயல்படுத்தப்பட்டன.

1984 - 85 - இல் சிறுவர் ஊழியம் 8 கவுன்சில்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு கவுன்சில்களுக்கு ஒரு ஊழியராக , நான்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர் .

ஞாயிறு பாடசாலை பிள்ளைகளுக்குப் பதினைந்து ஆண்டுகளில் வேதத்தைக் கற்றுக் கொள்வது குறித்த திட்டம் 1985 - இல் அறிவிக்கப்பட்டது .

1986 - இல் 8 கவுன்சில்களுக்கும் 8 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர் .

1987 - இல் அத்தியட்சாதீன அளவில் 188 பள்ளிகளில்  ேவ த  ா க ம க் கழகங்கள் நடை பெற் ற ன .

உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் மூன்று ஊழியர்கள் பணியாற்றினர் .

சங்கத்தின் வளர்ச்சிக்கேற்ப ஊழியத்தின் தேவையும் கூடியது அசையும் படக்கருவி மூலம் ( 16 mm Projector ) தேவதாகம பக்தர்களின் வரலாறு , இயேசுவின் வாழ்க்கை போன்றவை 1987 - இல் சிறுவர்களுக்கு விளக்கப்பட்டது .

தென்னிந்தியாவில் மட்டுமன்றி பம்பாய் வரையிலும் பாலியர் சங்க சிறுவர் ஊழியர்கள் சென்று , தாராவி தமிழ் ஆலயத்தில் சிறுவர்களுக்கு வேனிற்கால விடுமுறை வகுப்புகள் நடத்தினர் .

பாலியர் சங்க ஊழியத்துக்கு உதவி செய்யவிரும்புவோருக்கு உண்டியல் வழங்கும் முறையும் 87 - இல் வந்தது . சேகரங்கள் தோறும் பள்ளிகளில் சிறுவர் ஊழியம் சிறப்பாக நடைபெற்றது . இரவில் படக்காட்சிகள் மூலமாகவும் , பகலில் போதனைகள் மூலமாகவும் ஊழி ய ர் க ள் ஊ ழி ய ம் செய் த னர் .

நடுநிலைப்பள்ளிகளிலும் மாதத்திற்கொருமுறை சிறுவர் ஊழியர்களால் மாணவர்களுக்கு வேதாகமம் கற்றுக் கொடுக்கப்பட்டது . மேலும் ஒரே கருத்தை மையமாகக் கொண்டு பாடல் , கதை , வசனங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டது . முதல் பாலியர் நேசன் ஒ ளி ந  ா ட  ா எ வ ளி யி ட ப் ப ட் ட து ம் இவ்வாண்டிலேயேதான் . பாட ல் க ள் மூ ல ம  ா க வும் , சிறு வர் சந்திக்கப்படுவதால் தொடர்ந்து ஆண்டுதோறும் ஒலி நாடாக்கள் வெளியிடப்பட்டது .

சிறுவர் முகாம் கீதங்கள் , தாவீதின் கீதங்கள் , மோசேயின் கீதங்கள் , இராஜ்யத்தை சுதந்தரி கீதங்கள் போன்ற ஒலி நா டா க் க ள் பா லி யர் சங்கத் தால் வெளியிடப்பட்டவையே . ஒலி நாடாக்கள் மட்டுமன்றி ஒளி நாடாவும் சங்கத்தால் முதன் முறையாகத் தயாரிக்கப்பட்டது .

மோட்சப் பிரயாணம் , கீழ்ப்படிந்த நாகமான் . இயேசுவின் வல்லமை முதலிய ( Slides ஒளிப்படங்கள் ) சங்கத்தால் தயாரிக்கப்பட்டவையே. உயர்நிலைப் பள்ளிகளிலுள்ள நடுநிலை வகுப்புகளிலும் வாரந்தோறும் சிறுவர் ஊழியம் தொடங்கப்பட்டது .

பள்ளிகளில் ஊழியம் செய்வதற்கென இரு பெண் ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர் .

பாலியர் சங்க ஊழியத்துக்கு உதவி செய்பவர்களுக்கு உண்டியல் தயாரித்து வழங்கப்பட்டது .

1988 - இல் கவுன்சில்கள் தோறும் சிறுவர்கள் அழைக்கப்பட்டு , அவர்களுக்கென ஒரு நாள் தியானமுகாம் நலமேய்ப்பர் சிறுவர் முகாம் என்னும் பெயரில் நடத்தப்பட்டது .

ஏறக்குறைய 2000 சிறுவர்களுக்குமேல் அதில் பங்குபெற்றனர் .

ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ஏழை மக்களுக்கு சங்கத்தின் சார்பில் புத்தாடைகள் வழங்கும் வழக்கம் இருந்து வந்தது .

1985 - ஆம் ஆண்டில் இருந்து அம்முறை வடதிருநெல்வேலி சிறுவர்களுக்குப் புத்தாடைகள் வாங்கி விரிவான முறையில் செயல்படுத்தப்பட்டது.

நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப சிறுவரின் த ர மு ம் உயர்ந்து வி ட் ட  ைமயால் , சிறுவர் ஊழியத்துக்குத் தொலைக் காட்சி பெட்டி ( TV ) ; VCR  ேபா ன் ற ன வ இ ன் றி ய  ைம ய  ா த  ெத ன க் கருதப்பட்டதோடு , அவற்றின் மூலமாகவும் ஊழியம் நடைபெற்றது.

இவை தவிர சிறுவர் ஊழியத்துக்கென் வாங்கப்பட்ட வேன் ( Van ) தொடங்கப்பட்ட ஸ்கிரீன் பிரிண்டிங் ( Screer Printing ) போன்றவையும் இன்றைய சங்க வளர்ச்சிக்குச் சான்றாக நிற்கிறது .

1990 - இல் பாலியர் சங்கம் மூலமாக செம்புலிங்கம் வீடியோ படம் முதன் முதலில் தயாரிக்கப்பட்டு சிறுவர் மத்தியில் காண்பிக்கப்பட்டது .

நவீன அச்சுக்கூடம் தொட ங் க வு ம் ச க ல ஆ ய த் த ங் க ளு ம் செய்யப்பட்டுள்ளன .

தமிழகத்தில் தொடங்கப்பட்ட பாலியர் சங்கம் சிங்கப்பூர் , மலேசியா போன்ற அயல் நாடுகளிலும் புகழ்பரப்பி நிற்கிறது என்பதற்கு 1989 - ம் ஆண்டு சிறுவர் ஊழியக் காரியதரிசி அவர்கள் அயல் நாடுகளிலும் சென்று ஊழியத்தைப் பற்றி அறிவித்து வந்ததே சிறந்த சான்றன்றோ ! அன்று ஆன்றோர் முழங்காற்படியிட்டு ஊன்றிய விதை முளைத்து , ஆல்போல தழைத்து வளர்ந்து , பாரெங்கும் பரந்து , இயேசுவின் அன்பை சிறுவர்தம் இதயத்தில்  இன்னும் பலப்பல நூறாண்டுகள் வரையிலும் மணம் வீசச் செய்யும்

------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*

📜125 வது பாலியர் சங்க ஆண்டு சிறப்பு மலர்  புத்தகத்திலிருந்து திரட்டியது ...

🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory