பணிகளில் நேர்மையுடன் கடமையாற்றுபவர்களின் நண்பராக திகழ்ந்த பேராயர் டேவிட் செல்லப்பா
தூய பவுல் பள்ளி . இது சென்னையில் உள்ளது . இதன் தலைமை ஆசிரியராக 18 ஆண்டுகள் பொறுப்பேற்று நடத்தின் பேராயராக தென்னிந்தியத் திருச்சபையை நடத்தியவரே டேவிட் செல்லப்பா.
தலைமையாசிரியராக பணியாற்றியக் காலம் . ஒருமுறை பள்ளித் தமிழ் இலக்கிய மன்ற சிறப்பு நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது.
கல்வித்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
விழா தொடங்க வேண்டிய நேரத்தில் அமைச்சர் வருகை தரவில்லை.
எனவே பொறுமையுடன் காத்திருந்த மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் .
காலம் கடந்து வந்த அமைச்சருக்கு செய்தி அறிவிக்கப்பட்டது .
அமைச்சர் திரும்பிச் சென்று விட்டார் .
உடனடியாக அரசு உதவித்தொகை நிறுத்தப்பட்ட செய்தி ஆணையாக வந்தது .
டேவிட் செல்லப்பா இதனைக் கண்டு மனம் தளரவில்லை . உடனே விளக்கம் ஒன்றை அனுப்பி வைத்தார் . காலம் தவறாமையைப் போதிக்கின்ற நாங்கள் , பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினார் . - அமைச்சர் தன் தவறை உணர்ந்தவராக நிறுத்தப்பட்ட உதவித் தொகையை வழங்கியதோடு , அடுத்த ஆண்டு நடைபெற்ற இலக்கியமன்ற நிகழ்ச்சியில் சரியான நேரத்தில் கலந்துகொண்டார்.
பேராயர் செல்லப்பா அவர்கள் பேணிக் காத்தவை ஒழுக்கம் , காலந்தவறாமை எனும் இரு பண்புகளாகும்.
திருச்சபைகளில் இவைகளைத் திறம்பட வலியுறுத்தினார் . பணிகளில் நேர்மையுடன் கடமையாற்றுபவர்களின் நண்பராக அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரித்தார்.
சென்னைப் பேராயத்தின் சிறந்த பேராயராக விளங்கிய இவர் , சிறந்த செயல் வீரர் .
அவருடைய எழுத்தாற்றலும் , பேச்சாற்றலும் சிறப்பு பெற்றவையாகும் .
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment