புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சமாதானபுரம் திருச்சபை

சமாதானத்தைத் தேடி தந்த திருநெல்வேலி சமாதானபுரம் திருச்சபை வரலாற்று சம்பவம்.

பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள செட்டிகுளம் பாஸ்ற்றரேற்றிலுள்ளது. கோனார்குளம் என்னுமூர்.

சார்ஜென்ட் ஐயர் ( பின்னாளில் அத்தியட்சர் ) அடிக்கடி அவ்வூருக்குச்சென்று சுவிசேஷம் கூறிவந்தார்.

அதின் பலனாக 1874 - ம் ஆண்டில் அவ்வூர் ஆதிதிராவிட மக்களில் ஆறு குடும்பத்தார் இரட்சகரின் பிள்ளைகளானார்கள்.

அவர்கள் தாங்கள் ஆராதித்துவந்த *சாமிகளைப் புறக்கணித்து வேதக்கார* ரானது அம்மக்களின் ' ஆண்டவன்மாரான அந்தணர் ' பலருக்கு வெறுப்பாயிருந்தது.

தொடக்கத்தில் அப்பிராமணப் பண்ணையார்கள் அப் புதுக்கிறிஸ்தவர்களிடம் நயமாய்ப்பேசி , அவர்கள் தங்கள் ஆண்டவரை மறுதலித்து , மறுபடியும் பழைய மதத்திற்கே திரும்பிவிடும்படி வற்புறுத்தினார்கள்.

அதில் பயனெதுவுமில்லாதுபோகவே , அவர்களைத் துன்புறுத்தவாரம்பித்தார்கள்.

நாளாக நாளாகத்துன்பத் தீ கொளுந்துவிட்டெரிந்தது.

ஏழைக்கிறிஸ்தவர்களுக்கு பணக்காரராகிய அப்பிராமணர்களும் பிறசாதியினரும் தங்கள் வயல்களிலும் மற்ற நிலங்களிலும் எவ்வித வேலையும் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

வேலையில்லாததால் கூலியுமில்லை . பசியும் பட்டினியுமே அவர்களது பங்காயிற்று.

அவர்களுக்கிரங்கி அன்ன ஆகாரம் கொடுக்காமல் , உற்றாரும் ஊராரும் அவர் களைக்கைவிட்டுவிட்டனர்.

ஆயினும் அம்மக்கள் ஆண்டவரை மறுதலிக்கவுமில்லை ; மிஷன் அதிகாரிகளிடம் போய் உதவி கேட்கவுமில்லை.

அவ்வாறு கேட்க அவர்களது தன்மானம் இடங்கொடுக்கவில்லை.

*உள்ளதை விற்று உண்ணவாரம் பித்தனரேயன்றி , ஊராருக் கிணங்கிப்போவதில்லையென்ற உறுதியில் தளர்ச்சியடையவுமில்லை*.

ஒரு நாள் பண்ணையார்களி லொருவரான பிராமணத் தலைவரின் தலைமையில் ஊர்க்கூட்டம் கூடியது.

கிறிஸ்தவர்களனைவரும் ஊர்க்கூட்டத்திற்குச் செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

பயத்துடனும் நடுக்கத்துடனும் அங்கு சென்ற அம்மக்களைப் பார்த்துத் , தலைவர், *அனைவரும் திருநீறு பூசிக்கொள்ளுங்கள்* என்று கட்டளையிட்டார்.

ஆனால் அக்கிறிஸ்தவர்கள் ஏகவாக்காய் , *“ மாட்டோம் ' '* என்று கூறி , நின்றவிடத்திலிருந்து அசையாதிருந்தனர்.

தலைவர் உடனே கிராமக் காவற்காரராகிய தேவமார் சிலருக்குச் சைகைகாட்ட , அவர்கள் அம்மக்களைப் பிடித்து இறுகக்கட்டி , பலவந்தமாக அவர்களுடைய நெற்றிகளில் விபூதி யைப் பூசின துமன்றி , அவர்களைப் பலவிதமாக இம்சித்தும் துன்புறுத்தினர்.
இவைகளெல்லாவற்றையும் அக்கிறிஸ்தவ மக்கள் பொறுமையுடன் தாங்கிக்கொண்டார்களே யன்றி , எதிர்பேசவில்லை . ஆனாலும் அவர்களில் வாலிபனான ஒருவர் தங்களுக் கேற்பட்ட நிர்தைகளையும் நிஷ்டூரங்களையும் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்துப்பிராது கொடுக்கவே , அப்பிராமணரும் , அவர்களது ஆட்களிற் சிலரும் விசாரிக்கப்பட்டு அப்ராதம் விதிக்கப்பட்டனர்.

தண்டிக்கப்பட்டுவிட்டதலைவர்கள் , *இனி இக்கிறிஸ்தவர்கள் இவ்வூரிலிருக்கப்படாது* என்று தீர்மானித்து , அம் மக்களிடமிருந்த அற்பசொற்ப நிலங்களையும் பிடுங்கிக் கொண்டு , வீடுகளைக் கொள்ளையடித்துக் , கிராமத்தைவிட்டுக்குடியோடும்படி செய்துவிட்டனர்.

உடைமைகளை இழந்து , ஊரைத்துறந்து வெளியேறிய அம்மக்கள் தங்களையேற்றுக்கொள்வாருண்டோவென்று தேடியலைந்து , ஏற்றுக் கொண்ட கிராமங்களில் இங்கொருவரும் அங்கொருவருமாகக் குடியேறிக் , கூலிவேலை செய்து பிழைத்தார்கள் . அவர்கள் பட்டகஷ்டங்களையும் விசுவாச உறுதியையும் கண்டவேறு இருகுடும்பத்தினர் , அவர்களுடன் சேர்ந்து கிறிஸ்துநாதரின் பிள்ளைகளாகித் , தாங்களும் கோனார் தளத்தில் குடியிருக்க மனமற்று , வெளியேறி வேற்றுர்கரில் தங்கினர்.

இவ்வாறு வெளியேறிச்சென்ற அந்த எட்டுக் குடும்பத் தாருக்கினத்தவரான ஒருவர் பக்கத்துக் கிராமமொன்றிலிருந்தார் . அவர் கிறிஸ்தவர் . துன்புற்ற அம்மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டுமென்று திட்டமிட்டார் .

அவரது மனதில் தோன்றியது அம்மக்கள் சமாதானத்துடன் , துன்புறுத்துவாரின்றித் தங்கள் இரட்சகரைச் சேவித்து வாழுவதற்கு வசதிசெய்துகொடுக்க வேண்டுமென்ற வாஞ்சையே.

அப்படி அவர்கள் வாழவேண்டுமானால் , அவர்களுக்கே சொந்தமான ஒரு கிராமம் தோற்றுவிக்கப்பட வேண்டும் ' அதற்கு நிலம் வெண்டும் . நிலம் வாங்கப் பணம் தேவை . தன்னிடம் பணமில்லை . செய்வதென்னவென்று அவ்வுத்தமர் பல நாட்களாக யோசித்தார் ; ஜெபித்தார் ; கடைசியில் விடைகிடைத்தது .

அந்நாட்களில் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆட்கள்அமர்த்தப்பட்டார்கள் .

நமது தியாகி அக்கூலிகளில் ஒருவராகவமர்ந்து , இலங்கை சென்று , கூலியாக வுழைத்துச் , சிக்கனமாக வாழ்ந்து , சம்பாதித்துச் சேமித்த பணத்துடன் ஒரே ஆண்டில் ஊர் திரும்பினார்.

திரும்பினவர் புதிய குடியேற்றத்தை எங்கு அமைக்கலாம் என்ற யோசனையிலீடுபட்டுப் , பற்பல ஊர்களுக்குச் சென்று ஏற்ற இடத்தைத் தேடினார் .

இறுதியில் அவர் , மாவட்டத்தின் தலைமையதிகாரிகளிற் பலரும் திருச்சபையின் தலைவர்களான மிஷனெரிமாரிலநேகரும் வாழ்ந்துவந்த பாளையங்கோட்டைக்கு அண்மையில் அப்புதுக் கிராமத்தை நாட்டத் திட்டமிட்டு , அந்நகருக்குக் கிழக்கில் , திருச்செந்தூர் செல்லும் பெரும் பாதையினோரமாய் ஒரு நிலத்தை வாங்கி , அதில் ஒரு கிணறு தோண்டி முடித்தார் , பின் அவர் , பற்பல கிராமங்களில் வசித்துச் கொண்டிருந்த அவ் எட்டுக் குடும்பத்தினரையும் போய்ப் பார்த்து , அவர்கள் இனிப் பயமில்லாமல் சமாதானத்தோடு வாழ்ந்து , தங்களை இரட்சித்த ஆண்டவரைத் தொழுதுகொள்வதற்காகத் , தான் செய்துள்ள ஏற்பாடுகளை விவரித்துக் கூறினார் .

அம்மக்களும் மகிழ்ச்சியுடன் அவ்வேற்பாடுகளை ஏற்றுக்கொண்டு , கர்த்தர் அம்மகாஉன்னதரின் உள்ளத்தை ஏவித் , தங்களுக்காகச் செய்துவைத்த மகத்துவமான செயலுக்காக அவருக்குத் துதிசெலுத்தி , அவ்வுத்தம நண்பரை வாழ்த்தி , 1875 - ம் ஆண்டினிறுதியில் அதில் குடியேறினர்.

தாங்கொணாத்துன்பத்தைக் கண்ட அம்மக்கள் இனிச் சமாதானமாய் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையுடன் அப் பெருமகனும் , *சார்ஜென்ட் ஐயரும்* அக் குடியேற்றத்திற்குச்  *" சமாதானபுரம் "* என்று பெயர் சூட்டிக் , கர் த் த ரு க் கு ' ஸ்தோத்திரம் செலுத்தி மகிழ்ந்தனர் .

அன்று குடியேறினவர்கள் எட்டு ஆண்கள் , எட்டுப் பெண்கள் , பதினான்கு சிறுவர்களாவர்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*

📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...

🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory