மேற்கிந்திய சுவிசேஷ தீவிர படை முயற்சி இயக்கத்தை அறிமுகம் செய்த எபன் அசரியா பிறந்ததினம் இன்று
நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு .
மிஷனெரி தாகத்துடன் அர்ப்பணிப்புள்ள அடியவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அற்புத மான ஊழியம் .
நூற்றுக் கணக்கான ஊழியர்களைத் தன்னகத்தே கொண்டது.
இந்தியாவின் சந்து பொந்து தெருக்களிலெல்லாம் இதன் மிஷனெரிகள் சென்று சுவிசேஷம் அறிவித்து வருகின்றனர்.
மகத்தான பணிகள் மாட்சிமையுடன் நடந்து வருகின்றது . மக்கள் மனந்திரும்பி மறுவாழ்வு பெற்று வருகின்றனர்.
1975ம் ஆண்டு இதன் ஊழியராக வட இந்தியாவை நோக்கித் தன் குடும்பத்துடன் புறப்பட்டார் எபன் அசரியா.
பஸ்தி , கோண்டா ஆகிய பகுதிகளில் கிராமம் கிராமமாகச் சென்று முன்னோடி மிஷனெரிப் பணி செய்தார் .
பிசாசு பிடித்தவர்களும் வியாதியாஸ்தர்களும் தங்கள் இக்கட்டுகளிலிருந்து விடுதலை பெற்றனர் .
எபன் அசரியா தினமும் 4 மணிக்கே எழுந்து ஜெபிக்கும் பழக்கம் உடையவர் . புதன் , வெள்ளி , ஞாயிறு கிழமைகளில் உபவாசித்து ஜெபிப்பார் . எல்லோரிடமும் அன்புடன் பழகுபவர் .
மிஷனெரிச் சகோதரர்களைத் தன் சொந்த சகோதரர்களாக நினைத்து அன்பு பாராட்டுவார் .
1980ம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள மாரஹண்ட பள்ளிக்கு மிஷனெரியாகச் சென்றார் .
மீண்டும் 1981ம் ஆண்டு வட இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார் .
டெல்லியில் பட்பர்கஞ்ச் பகுதியில் வாழும் சேரிவாழ் மக்கள் மத்தியில் ஆலயம் கட்டப்பட்டது .
மேற்கிந்திய சுவிசேஷ தீவிர படை முயற்சி இயக்கத்தை அறிமுகம் செய்து உற்சாகமாகப் பணிகளை மேற்கொண்டார் .
1983ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பணி செய்து கொண்டிருக்கும்போது முதுகுவலியால் பாதிக்கப்பட்டார் .
இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் 1987ம் ஆண்டு இறைவனை துதித்தவாறே இறைராஜ்யம் சென்றார் .
இவர் பிறந்தது இன்றுதான்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment