புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

தோப்பூர் திருச்சபை

*தோப்பூர் திருச்சபை வரலாறு*
நாசரேத் - மெஞ்ஞானபுரம் சாலையிலுள்ள ஒரு சிறு கிராமம் தோப்பூர் இது பிள்ளையன்மனை குரு சேகரத்தைச் சேர்ந்த சபை , தோப்பும் துறவுமாகச் செழிப்பாயிருந்தமையால் இப்பேர் பெற்றது.
பக்கத்து சேகர ஆவிக்குரிய கூட்டங்கள் அனைத்தும் தோப்பூரில் வைத்து நடந்து வருகிறபடியால் அவ்வூர் செழிப்பின் உண்மை தெளிவாகத் தெரிகிறது ஆறு கிறிஸ்தவக் குடும்பங்களை மட்டுமே கொண்ட இவ்வூரில் ஒரு சிறு ஆலயம் உள்ளது.
அதன்பேர் *' இயேசுவின் திருநாம ஆலயம் '* என்பதாகும் .
இப்பெயரைச் சூட்டியவர் அசரியா அத்தியட்சர் ஆவார்.
இச்சபை தோன்றியது விந்தையானது .
நாசரேத் அருள்தொண்டர் டேவிட் ரோஷன் 1835 இல் ஊழியம் செய்த போது , இடையனகுடி சென்று முதலூர் , கடாட்சபுரம் ஹாப்பையர்புரம் வழியாகத் திரும்புகையில் தோப்பூரில் சிறிது நேரம் தங்கி இளைப்பாறுவது வழக்கம் .
அவ்வேளையில் ஒரு ஆங்கிலேயரை வினோதமாகப் பார்க்கக் கூடி வருகிறவர்களுக்கு நற்செய்தி அறிவித்து உரையாற்றுவார்.
சிலர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர் . அவர்களை அடிக்கடி சந்தித்து ஒரு சிறிய சபையை உருவாக்கினார் கூடி ஜெபித்து செய்தியை அறிவிப்பதே அவரது பிரதானப் பணியாயிருந்தது.
1841 இல் இப்பகுதிகளில் பணி செய்த கேமரர் ஐயரவர்கள் பல பள்ளிகளை உருவாக்கினார்.
தோப்பூரிலும் ஒரு ஆரம்பப் பள்ளியை உருவாக்கினார் .
பின்பு இப்பள்ளி ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்திடம் சென்ற விபரம் தெரியவில்லை.
1857 ஆம் ஆண்டு பிள்ளையன்மனை கிராம சபையாக இணைந்தது.
சபையார் யாவரும் கூலி வேலைக்கு செல்பவர்களும் , பனை ஏறும் தொழிலாளர்களுமே
1877 இல் தற்காலிகமாகக் கட்டப்பட்ட கோயில் 1908 இல் புதுப்பிக்கப் பட்டது.
1914 இல் சாந்துக் காரை யால் கட்டி ஒடு போட்டனர்.
அருட்பெருந்திரு வேதநாயகம் அசரியா அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு *" இயேசுவின் திருநாம ஆலயம் "* என்று பேர் சூட்டப்பட்டது .
1933 இல் தோப்பூர் சபைவாசியான மனுவேல் ஐயரவர்கள் கோயிலை சற்று விரிவாக்கி வசதியான அமைப்புடன் புதுப்பித்தார்கள் 23 10 1999 அன்று அருட்பெருந்திரு ஜேசன் எஸ் தர்மராஜ் அவர்களால் மங்கலப்படைப்பு செய்யப்பட்டது.
பேராயர் ஸ்டீபன் நீல் அவர்கள் இச்சபையின் குருவாக இருந்த பெருமையும் இச்சபைக்கு உண்டு
ஆதாரம் : அருட்திரு . டாக்டர் ஜே . பி . பாட்ரிக்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory