புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

நல்மிட்பர் பட்சம் நில்லும்

நல்மிட்பர் பட்சம் நில்லும் பாடல் வரலாறு
{ பாமாலை 249 }
பிலடெல்பியா என்பது அமெரிக்காவிலுள்ள ஒரு பட்டனம் ஆலயத்தில் மகிமை விளங்கும் ஆலயம் ( Episcopal church ) என்றொரு ஆலயம் உண்டு.
அந்த ஆலயத்தில் உடலிடையிங் ( Rev . Dudley ' Tyngs ) என்றொரு குருவானவர் வந்தார் , சுமார் 100 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் பெருங்குழப்பம் அன்கொன்டிருந்தது.
ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் பெரிய பெரிய பண்ணைகளை பயன்படுத்தி , அப்பண்ணைகளில் உழைக்கக்கூடிய கூலியாட்கள் அடிமையாயிருந்தது. இதற்கு ஒருவழி கண்டுபிடித்தனர்.
ஆப்பரிக்காவிலுள்ள பூர்வீகக் குடிமக்களாகிய நீக்ரோக்களை , மிருகங்களை வேட்டையாடுவது போல் வேட்டையாடிப் பிடித்து , அவர்களை இந்த அமெரிக்கப் பண்ணையார்களுக்கு விற்று வந்தனர்.
இவ்வடிமைகளை வாங்கின பண்ணையார்கள் , சம்பாதிப்பதையே தங்கள் ஒரே நோக்கமாகக் கொண்டிருந்தபடியால் இவ்வடிமைகளிடத்தில் கடுமையாக வேலை வாங்கினர் . மிருகங்களை அடிப்பது போல் அடித்து வேலை வாங்கினர் .ஆனால் கூலி கொடுப்பது இல்லை .
எந்த விதமான வசதி செய்து கொடுப்பது மில்லை . இந்த அடிமை வியாபாரத்தினால் அடிமைகளை வாங்கினவர்களும் கொள்ளை இலாபம் சம்பாதித்தனர் , இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பிலடெல்பியாவிலுள்ள மகிமை விளங்கும் ஆலயத்தில் போதகர் ட்டலிடையிங் திருப்பணி விடை செய்து கொண்டிருந்தார் .
இவர் அடிமை வியாபாரத்தைக் கண்டித்தார் .
மனிதனை மனிதன் அடிமையாக்குவது கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முற்றிலும் விரோதமானது .
அமெரிக்காவிலுள்ள வெள்ளையர்களுக்காக மட்டுமல்ல , இந்த நீக்ரோ அடிமைகளுக்காகவும் கிறிஸ்து மரித்தார் அல்லவா ? அடிமைகளைப் பிடித்து அடிமை வியாபாரம் செய்த வெள்ளையர்களுக்காக மட்டுமல்ல , மிருகங்களைப் போல் வேட்டையாடப்பட்ட நீக்ரோக்களுக்காகவும் கிறிஸ்து மரித்தார் அல்லவா ? அடிமைகளைப் பிடித்து அடிமை வியாபாரம் செய்த வெள்ளையர்களுக்காக மட்டுமல்ல . மிருகங்களைப் போல் வேட்டையாடப்பட்ட நீக்ரோக்களுக்காகவும் கிறிஸ்து மரித்தார் . அல்லவா ? ஆகையால் இந்த வெள்ளையர்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்க்கை நடத்துகிறார்களோ அவ்வளவு சுதந்திரமாக நீக்ரோக்களும் வாழ்க்கை நடத்த அவர்களுக்கு உரிமை உண்டுல்லவா ? இவை போன்ற கருத்துக்களைத் தமது பிரசங்கத்தில் கூறி வந்தார் பாதிரியார் டட்லி . இப்படிப்பட்ட பிரசங்கங்களைக் கேட்ட அடிமை வியாபாரிகளும் , பண்ணையார்களும் சும்மாயிருப்பார்களா ? பாதிரியாரிடம் சென்று இப்படிப்பட்ட பிரசங்கங்கள் செய்யக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
பாதிரியார்கேட்கவில்லை . பாதிரியாரை அதட்டினர் . கண்டித்தனர் . பயமுறுத்தினர் . பாதிரியார் அசையவில்லை .
உங்கள் அடிமை வியாபாரம் கிறிஸ்துவின் அன்புப் பிரமாணத்திற்கு முற்றிலும் விரோதமானது . அதை நான் எடுத்துக் கூறாமலிருக்க முடியுமா என்று தீர்மானமாகக் கூறி விட்டார் பாதிரியார் .
பணக்காரக் கும்பல் சதி செய்து அவரை வேலையிலிருந்து நீகி விட்டனர் .
ஆலயத்திலுள்ள பிரசங்கபீடம் போய் விட்டதே என்று அவர் தமது பிரசங்கத்தை நிறுத்தி விட வில்லை .
திறந்த வெளியிலிருந்து பிரசங்கித்தார் .
ஏராளமான பேர் அவர் பிரகங்கத்தைக் கேட்பதற்காகக் கூடி வந்தனர் .
திடீரென்று இவருக்கு எதிர்பாராத ஒரு விபத்து ஏற்பட்டது .
ஒரு இயந்திரத்தில் இவருடைய கை அகப்பட்டு அது துண்டிக்கப் பட்டு போய் விட்டது . ஆபத்தான நிலைமையிலிருந்தார் . மரணம் நெருங்கி கொண்டிருந்தது . ஞாயிற்றுக் கிழமை வந்தது .
கோயில் மணிச்சத்தம் கெட்டது .
சபையார் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தனர் . பாதிரியாரோ பொன்னகர் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் .
சபையாருக்கு நீங்கள் கடைசியாகச் சொல்ல விரும்பும் செய்தியுண்டா என்று அவருடைய நண்பர்கள் அவரை கேட்டார்கள் .
கிறிஸ்துவுக்காகப் போர் புரிவதற்கு ஆயத்தமாயிருக்கும்படி அவர்களைக் கேட்டு கொள்ளுங்கள் .
Tell them to Stand up of Jesus .
இதுவே என்னுடைய இறுதிச் செய்தி என்று கூறினார் .
இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர் His friend and fellow preacher , Dr . George Duffield , was touched by the words and Wrote the hymn Stand Up , Stand Up for Jesus , Dufieldt ( concludied his Serimon the following Sunday by reading the lyrics as a tribute to his friend.
கடைசி வார்தைதைகள் தொட்டு விட்டன .
உடனே பாதிரியாரின் கருத்தைக் கொண்ட ஒரு பாட்டை Stand up for Jesus என்ற பாதிரியாரின் வார்ததைகளைக் கொண்டே ஆரம்பித்து எழுதி விட்டார் .
வாழ்க்கை முழுவதிலும் கிறிஸ்துவுக்காவும் , அவருடைய சுத்த சுவிசேஷத்திற்காகவும் போர் புரிந்த வீரனின் அற்பனிப்பாக இந்தப் பாட்டு எழுதப்பட்டது .
வீரர்களாயிருக்கப்பட்ட எல்லோரும் போருக்கு வாருங்கள் .
இயேசுவின் சேனைக்குக் கோழைகள் தெவையில்லை .
வீரர்கள் எல்லோரும் திரண்டு வாருங்கள் அருமையான பாட்டு .
Ye that are men , now Serve him
Against unrumbered foes
Let Courage rise with danger ,
And strength to strengtli oppose.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory