புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பழைய தேவாலயம் , நாசரேத்

பழைய தேவாலயம் , நாசரேத்.*
1829 - ம் வருஷம் டிசம்பர் 31 - ம் தேதி மாலை ஐந்து மணிக்கு ரோசன் ஐயர் பழைய தேவாலயத்திற்கு அஸ்திபாரம் போட்டார்.
ஜூலை 21 - ம் தேதிக்குள் கட்டுமானம் பூர்த்தியாகிவிட்டது .
பணம் சேகரித்து ஒரு ஆலய மணி வாங்கி இருந்தார்கள்.
அதை இரு தூண்கள் கட்டி அவற்றின் மத்தியில் தொங்கவிட்டார்கள் கடைசியாக 1830 - ம் வருஷம் நவம்பர் 20 - ம் தேதி கனம் அடைக்கலம் ஐயர் பிரதிஷ்டை ஆராதனை நடத்தினார்.
பிரதிஷ்டை முடிந்தவுடன் ஞானஸ்நானம் , நற்கருணை , விவாகஆராதனைகள் நடந்தன.
இது நாசரேத் வாழையடி என்ற இரு சபைகளுக்கும் தேவனை ஆராதிக்கும் ஸ்தலமானது .
1882 நவம்பர் 14ல் கனம் முல்லர் ஜான் குதிரைமேல் ஏறிவந்து , ஆலயம் வெகு நேர்த்தியாக இருந்தது என்று எழுதிவைத்தார்.
1920 - ம் வருஷம் ஜூன் மாதத்தில் பழைய ஆலயம் இடிக்கப்பட்டு முன் மைதானத்தில் தற்காலிக ஓலை மேவிய கட்டடம் கட்டப்பட்டு பிரதிஷ்டையானது.
வரலாற்று புத்தகத்திலிருந்து

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory