இரண்டு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்வதற்கு ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர் ஷீ மேயு
*ஜுன் 14 நினைவு தினம் இன்று*
நற்செய்திப் பணியில் மருத்துவப் பணி மிகவும் முக்கியமானது .
ஏனெனில் மனிதர்கள் இரண்டு விதங்களில் குணமடைய வேண்டியது அவசியம் .
ஒன்று , சரீரத்தில் குணமடைதல் . மற்றொன்று , ஆவிக்குரிய வாழ்வில் குணமடைதலாகும் .
சீன மருத்துவ மிஷனெரி ஷிமேயு இரண்டு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்வதற்கு ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டார் .
இவர் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுடைய கரங்களையும் , சுவிசேஷகர்களுடைய இருதயத்தையும் பெற்றிருந்தார் .
சீனாவில் பிறந்த இவர் , அமெரிக்கா சென்று மருத்துவப் பட்டம் பெற்ற சீனப் பெண்மணி ஆவார் .
சீன தேசத்து மக்களுக்காக மருத்துவமனை ஒன்றைக் கட்டினார் .
ஒவ்வொரு மாதமும் 3 , 000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார் .
மேலும் சீன செவிலியர்களுக்கு ஒரு பயிற்சித் திட்டத்தை 2 உழைத்தார் .
மேற்கத்திய மருத்துவ புத்தகங்களை மொழிபெயர்ப்புச் செய்தார் .
செவிலியர்களுக்கென்று தனியே வேதாகம வகுப்புகளை நடத்தினார்.
1918ல் ஷிமேயு ஐந்து கிறிஸ்தவ தலைவர்களுடன் இணைந்து சீன உள்நாட்டு ஊழிய சங்கத்தை ஏற்படுத்தினார் .
இது ஒரு சுயநிதி சங்கமாகச் செயல்பட்டது .
1920ம் ஆண்டு தான் பணியாற்றி வந்த மெதடிஸ்ட் மிஷனெரி சங்கத்தை விட்டு விட்டு பெத்தேல் மிஷன் ' என்ற புதிய ஊழியத்தை ஆரம்பித்தார் .
17 ஆண்டு காலத்தில் இந்த ஊழியமானது வளர்ச்சி அடைந்தது , ஆரம்ப மற்றும் செகண்டரி பள்ளிகள் , மருத்துவமனை , செவிலியர் பள்ளி , வேதாகமகலாசாலை , அனாதை இல்லம் மற்றும் ஆராதனைமையம் ஏற்படுத்தப்பட்டன .
ஷிமேயு , 36 சீனக் குழந்தைகளை தன் வீட்டில் வைத்தே பராமரித்தார் .
ஒவ்வொரு வியாழக்கிழமையும் தன் வீட்டில் செவிலியர்களுக்கென வேதாகமக் கூட்டங்களை நடத்தி அநேக செவிலியர்களை கிறிஸ்துவுக்குள் நடத்தினார் .
20ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் சீன கிறிஸ்தவ பெண்மணிகளில் டாக்டர் . மேயு ஒருவராவார் .
தனது இடைவிடாத உழைப்பினால் இச்சீன மிஷனெரி இதே நாள் 1954ம் ஆண்டு நோயற்ற வீட்டிற்கு பயணமானார் .
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment