புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஹோலி டிரினிட்டி கதிட்ரல் ஆலையம்

‘ஹோலி டிரினிட்டி கதிட்ரல் ஆலையம்’’

200 ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டை ஒரு சிறிய
கிராமமாகத்தான் இருந்தது.

அதன் மைய
பகுதியில் ஒரு பெருவழிப்பாதை இருந்தது மக்கள் நடந்து செல்லும் பாதை.

நாள் வட்டத்தில் இந்தப் பாதையில் மக்கள் நடமாட்டம் வெகுவாக அதிகரித்தது.அந்த சமயத்தில் பாளையங்கோட்டையில்,
நெல்லை அப்போஸ்தலன்
என்று அழைக்கப்பட்ட ரேனியஸ்
அடிகளார் அதிக எண்ணிக்கையில்
பள்ளிகளையும் ஆலயங்களையும்
நிர்மாணித்துக்கொண்டிருந்தார்.

ஒரு பெரிய பேராலயத்துக்கான
தேவை அதிகரிப்பதை உணர்ந்தார்.
ஆனால் எந்த இடத்தில் அமைப்பது என்ற
குழப்பம் மேலோங்கியது.

எனவே இயேசுவை நோக்கி முழங்கால்
இட்டு ஜெபம் செய்தார்.

பெரும்பாதையில் கோயில் அமைந்தால் வருவோர் போவோர்
ஆண்டவரை ஆராதிக்க
ஏதுவாயிருக்கும் என்ற
எண்ணத்தை ஆண்டவர் அவர் மனதில்
விதைத்தார்.

ரேனியஸ் அடிகளார்,
எப்போதுமே எதை செய்தாலும்
அதை திறம்பட செய்ய வேண்டும்
என்பதில் கவனமாய் இருப்பார்.

அவர் 1822 செப்டம்பர் மாதம் மூன்றாம்
புதன்கிழமை நெல்லை டவுன்
குற்றாலம் சாலையில் உள்ள
கோயிலில் ஆராதனையை முடித்து விட்டு, குதிரையில் பாளையங்கோட்டை நோக்கிச் சென்றார்.

வழியில்
நெல்லையப்பர் கோயிலைக் கண்டார்.
அதன் பிரமாண்ட கோபுரத்தை வியப்புடன் பார்த்தார்.

அதேபோன்ற கோபுரம் கொண்ட
ஆலயத்தினை உருவாக்க
தீர்மானித்துக்கொண்டார். இந்த சமயத்தில் கீழப்பாட்டம், திருப்புளியங்குடி, திருவைகுண்டம் ஆகிய இடங்களில் சிறு அளவில் அவர் ஆலயங்களைக் கட்டி வந்தார். ஆனால்,
பாளையங்கோட்டையில் தான்
உருவாக்கவிருக்கும் ஆலயத்தை பெரிய
கல் கட்டடமாக அமைக்கத் திட்டமிட்டார்.

பாளையங்கோட்டையில், 1826
ஜனவரி மூன்றாம் நாள் கால்கோள்
விழா நடந்தது. ஊரே திரண்டு ஆலய
வேலைகளை மேற்கொண்டது.
அதே ஆண்டில், ஆறு மாதங்களுக்குள்,
ஜூன் மாதம் மூன்றாம் தேதி, அழகான
ஆலயம் 40 அடி நீளம், 17 அடி அகலத்தில்
அமைந்தது.

வடக்கு, தெற்கு இருபுறங்களிலும் ‘செமினார்’ எனப்படும் ஆசிரியப்பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன.

நடுவில் தேவாலயம்
நிமிர்ந்து நின்றது.

ஆனால்
பிரமாண்டமாக இந்த ஆலயத்தை உருவாக்கியவர், இதற்குப்
பெயர் எதுவும் வைக்கவில்லை.
அதனால், பெரிய கோயில்,
புதுக்கோயில், வேதக்கோயில்,
ரேனியஸ் கட்டிய கேரிவல், ரோட்டுக்
கோயில் என்று பலவாறாக மக்கள்
இக்கோயிலை அழைக்கத்
தொடங்கினார்கள்.

1835ம் ஆண்டில் ரேனியஸ்
அடிகளாரை அடுத்து சென்னை முதல்
பேராயர் காரி என்பவர் 1836ம்
ஆண்டு முதல் முறையாக
நெல்லைக்கு வந்தார்.

அப்போது
பாளை பெரிய கோயிலைக் கண்ட அவர்,
‘‘ஆலயத்திற்கு என்ன பெயர்?’’
என்று கேட்டார். ஆலயத்துக்குப் பெயர்
இல்லை என்றறிந்ததும், உடனே,
‘ஹோலி டிரினிட்டி கதிட்ரல் ஆலையம்’’
என்று பெயர் வைத்தார்.

எத்தனை பெயர்கள் இருந்தாலும் மக்கள்
செல்லமாக, ‘ஊசிக்கோபுரம்’ என்றுதான்
அழைக்கி றார்கள்.

நெல்லைப்
பேருந்துகளில் ‘ஊசிக்கோபுரம் ஸ்டாப்’
என்பது பிரசித்தம். 1841ம் ஆண்டு ஆலயம்
விரிவு படுத்தப்பட்டது.

ஆலயத்தின்
மேற்குப்பகுதி நீட்டப்பட்டு,
ஆல்ட்டராகவும் பாடகர் அமரும்
இடமாகவும் அமைக்கப்பட்டது.
1845ம் ஆண்டு ஆலயத்தின்
முன்பகுதியில் கோபுரம் கட்டினார்கள்.

உறுதியான
அடித்தளத்துக்கு கோட்டைச் சுவர்களில்
உள்ள கற்களைப் பயன்படுத்தினர்.

மேல்பகுதி செங்கற்களாலும்
சிமென்ட்டாலும் வளர்ந்தன.

கோபுரம்
மூன்று தட்டுகளுடன் உச்சிப்
பகுதி ஊசி போன்ற அமைப்பும்
கொண்டது. கோபுரத்தின் உச்சியில் 6
அடி சுற்றளவுள்ள
இரும்பு உருண்டையைப் பதித்தார்கள்.
கோபுர வேலை 11.4.1845
அன்று முடிவடைந்தது.

இக்கோபுரம்
115 அடி உயரமுடையது.

இதன்
கூர்மையான
உச்சியை வைத்தே ஊசி கோபுரம்
என்று அழைக்கின்றனர்.

கோபுரத்தில்
உள்ள ஆலயமணியும் கடிகாரமும்
மிகவும் சிறப்பானவை.

ரேனியஸ்
அடிகளாரின் முயற்சியில்
இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட
மணி இது.

கோபுரத்தின் மூன்றாவது தட்டின்
மேற்பகுதியில் கிழக்கு-
மேற்கு பகுதிகளில் கடிகாரங்கள்
பொருத்தப்பட்டன. ஒவ்வொரு மணிக்கும்
ஒருமுறை கடிகாரத்தோடு இணைக்கப்
பட்ட சுத்தியல் ஒன்று மணியில்
அடித்து, நேரத்தைத் தெரிவிக்கும்.

ஆலய மணியும் கடிகாரமும் லண்டன்,
ஜான் முரே சன்ஸ் நிறுவனத்தால்
உருவாக்கப்பட்டவை.

கோபுர கடிகாரம்
148 ஆண்டுகளாக இன்றும்
பழுதின்றி ஓடிக்கொண்டிருப்பது வியப்பளிக்கிறது.

பாளையங்கோட்டை சபை மேலும் வளர,
ஆலயத்தையும் மேலும் விரிவாக்கம்
செய்யவேண்டியதாயிற்று.

1932ம்
ஆண்டு அருள்திரு. ஜி.றி. சிமியோன்
காலத்தில் ஆல்ட்டர்
பகுதி மேற்கு திசையில்
நீட்டப்பெற்றது.

ஆலயத்தின்
மையப்பகுதி வடக்கிலும் தெற்கிலும்
விரிவடைந்தது.

தற்போது இந்த இடம் சிலுவை வடிவில்
அமைந்துள்ளது.

1926ம்
ஆண்டு குருமார்கள் அமரும்
அறை தலைவாசலுக்கு இருமருங்கிலும்
கோபுரத்தை ஒட் டிக் கட்டப்பட்டது.

மின்சார வசதி வந்ததும் 1937ம்
ஆண்டு அருள்திரு. வி.க்ஷி. ஜான்
காலத்தில் மின் விளக்குகள் ஏற்றப்பட்டன;
கோபுரத்தில் இடிதாங்கியும்
பொருத்தப்பட்டது.

தற்போது ஆலையமும் கோபுரமும்  புதுப்பிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை மக்கள்
மட்டுமல்லாமல், நெல்லை,
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், ஏன்,
இந்தியாவின் பிற
மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள்
வந்து ஊசிகோபுரத்தையும்
இறைவனையும் தரிசித்து, தம்
பிரார்த்தனைகளைச்
செலுத்துகிறார்கள்.

jeyakumar jeremia

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory