சரித்திரத்தில் இடம் பிடித்தவர்கள்
தாமஸ் மூர் நினைவு தினம்
எட்டாம் ஹென்றி இங்கிலாந்தை ஆட்சி செய்த காலம் அது.
திருச்சபையின் சட்டதிட்டங்களில் அரசு அதிகமாகத் தலையிட்டது.
குருக்கள் தங்கள் பணிகளைச் சரிவர கவனிக்க முடியவில்லை.
தாமஸ் மூர் நேர்மையானவர் .
தந்தை ஒரு நீதிபதியானதால் மூர் சகல ஒழுக்கங்களிலும் முறைப்படி வளர்க்கப்பட்டார் .
ஆழ்ந்த இறை பக்தி உள்ளவராகவே வளர்ந்தார் . கர்த்தூசியன் என்ற மடத்தில் இணைந்து நான்கு ஆண்டுகள் வேத நூல்களை தெளிவாகப் படித்தார் .
தேவ அழைத்தலை உணர்ந்து கொண்ட பின்னர் திருப்பணிக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார் . பொது வாழ்விலும் பல உயர்வுகளைப் பெற்றார் .
எட்டாம் ஹென்றி மன்னரின் நண்பராகவும் திகழ்ந்தார் . பக்தியில் நாளுக்கு நாள் சிறந்தோங்கி வளர்ந்தார் . நாள்தோறும் நான்கு முதல் ஐந்து மணி நேரமே தூங்குவார் . பிற நேரங்களை வேதம் வாசிப்பதிலும் , ஜெபிப்பதிலுமே செலவிட்டார் .
தாமஸ் மூர் தனக்கென்று பணம் சேமித்ததில்லை .
ஏழைகளுக்கும் , நோயாளிகளுக்கும் தாராளமாக உதவி செய்தார் .
எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையுடன் காணப்படுவார் .
நகைச்சுவை உணர்வு நிரம்பப் பெற்றவர் . எட்டாம் ஹென்றி அரசன் தம் முதல் மனைவியைத் தள்ளிவிட்டு வேறே திருமணம் செய்யப் போகும் அறிவிப்பு திடீரென வெளியிடப்பட்டது .
மேலும் தானே திருச்சபையின் தலைவர் என்றும் அறிவித்தார் . எனவே , திருச்சபை சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட அரசனை தாமஸ் மூர் வெளிப்படையாகவே எதிர்த்தார் .
அரசாங்கத்தில் தான் வகித்து வந்த பதவியிலிருந்தும் விலகினார் . இதனால் ஆத்திரம் அடைந்த அரசன் , இவரைச் சிறையிலடைத்தான் .
15 மாத சிறைவாசத்திற்குப் பின்னும் அரசனின் விருப்பத்திற்கு ஒத்துழைக்காததால் இதே மாதம் 7ஆம் தேதி 1535ஆம் ஆண்டு தலை வெட்டப்பட்டு உயிர் துறந்தார் .
-
No comments:
Post a Comment