புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

வெங்கலப்பொட்டல்

*வெங்கலப்பொட்டல் ஊரும் பேரும்*

சங்கரன்கோயில் ரோட்டில் *' ரஸ்தா '* என்ற பேருந்து இறக்கத்திற்குக் கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள கிராமம் வெங்கலப்பொட்டல்.

ஊருக்குத் தெற்கே *' ஊருணி '* எனப்படும் குடிநீர் குளம் தோண்டி இருக்கிறார்கள் .

தோண்டும் போது வெங்கலத் தேர் ஒன்று கிளம்பி இருக்கிறது .

அது மிகவும் பிரகாசமாக இருந்ததாம் .

யாவரும் பயந்து விழுந்தடித்து ஊருக்குள் ஓடி விளம்பி இருக்கிறார் கள் .

மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் ஊரே திரண்டு வந்திருக்கிறது .

வந்து பார்த்தால் வெங்கலத் தேர் பூமிக்குள் புதைந்து விட்டது . முடிந்த வரை தோண்டிப் பார்த்திருக்கிறார்கள் . கண்டு பிடிக்க முடியவில்லை .

அந்த இடம் ஒரே பொட்டலாயிற்று .

எனவே சிதம்பரபுரம் என்றிருந்த ஊர் வெங்கலப்பொட்டல் என்றாயிற்று .

நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ் காலத்தில் உருவான சபை ( 1820 - 1838 ) அப்பொழுது ஒரு கூரைக் கோயில் இருந்தது .

1928 இல் ஓலைக்கோயில் ஓட்டுக்கோயிலானது .

1979 இல் முதல் தட்டு கோபுரமும் , 1994 இல் இரண்டாம் தட்டு கோபுரமும் கட்டப்பட்டது .

*செவிவழிச் செய்தி இது*

ஊரும் பேரும் வரலாற்று சம்பவம்

மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory