புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பதிவு -12

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பதிவு -12*
*_திருநெல்வேலி திருச்சபையின் நிர்வாக மறுஉருவாக்கம் – Techniques of corporate Restructuring_*
கடந்த பதிவின் தொடர்ச்சி
பல சோதனைகள் நேரிட்டாலும் அதில் வலிமையாக தன்னை காத்துகொண்ட திருநெல்வேலி திருச்சபை அடுத்ததாக *ஹக்* ஐயரின் வரவை எதிர்கொண்டது.
*சுவாட்ஸ்* ஐயருக்கு பின் சபையை கட்டிய *இரண்டாமவர்* என்றே இவரை சொல்லலாம். ஏனென்றால் பள்ளிகள், ஒருங்கிணைத்தல்,பெண்களுக்கு என்று தனி பள்ளி என்று நாம் இன்று காணும் பல நிர்வாக முறைகளுக்கு வித்திட்டவர் இவரே.
இவரின் பெருமையை நிலை படுத்தும் விதமாக அவரின் பேரை ஒரு ஊரிற்கு விட்டு அதை *ஹக்ஐயர்புரம்* என்று அழைத்ததை அறியலாம்.
SPCK மூழ்க போகிற தருவாயில் *திரும்ப* அதை *கட்டியவர்* இவரே
பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிகளுக்கு *CMS* உதவி பெறுவதற்கு ஆவணம் செய்யது அப்பள்ளியை மறுமலர்ச்சி ஆகச்செய்தார். இக்காலத்தில் இதை நாம் Joint *Venture* மற்றும் *Straegic Alliances* என்று சொல்லுவோம். மூழ்க போகின்ற நிறுவனங்களை மீட்டெடுக்க செய்கிற ஒரு உக்தி.( *one of the expansion technique).* மேலும் பொதுமக்களிடமும்சொந்த பணத்திலும் பல செயல்களை செய்தார். இவரின் இந்த அருமையான பணிக்கு அப்போதைய *மாவட்ட ஆட்சியர்* முழு ஆதரவை அளித்தார்.
இவரின் இன்னொரு முக்கியாமான பணி என்பது திருநெல்வேலியை சுற்றிபார்த்து நிர்வாகத்தின் *நிறை* மற்றும் *குறைகளை* ஆய்வு செய்து அதை அறிக்கையாக சமர்பித்தார்.
இத்தோடு நிறுத்தாமல் சபையை எவ்வாறு *முன்னேற்றலாம்* என்று அதைபற்றிய *அறிக்கைகளுக்கும்* உருவாக்கினார்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அனைத்தையும் *Review* செய்து திருநெல்வேலிக்கு என்று *Vision & Mission* களை நிர்ணயம் செய்தார்.
இவரின் இந்த நிர்வாக செயல்கள் SPCK வின் நம்பிக்கைக்கு வித்திட்டது. 1820 ஆம் ஆண்டு பள்ளி நிர்வாக செலவுக்கென்று SPCK நிர்வாகம் *ருபாய் 40* ஐ மாதம் கொடுக்க ஒத்துக்கொண்டது.
CMS உதவியை எதிர்பார்த்து கொண்டிருந்தவர் தற்போது CMS கணக்கில் இருந்த சபைகளையும் *தத்தெடுத்தார்* .
இவரின் மற்றொரு முக்கியமான பணி திருநெல்வேலி மாவட்ட கிறிஸ்தவ சொத்துக்கள் அனைத்தையும் மதிப்பிட்டு ஒரு முறையான அறிக்கையை உருவாக்கியது. இது தற்கால *கார்பரேட்* *Restructure நுட்பத்தில் Divestitures* என்று அழைக்கப்படுகிறது. இது திருச்சபை தனது *நிர்வாக தரத்தை மதிப்பேடு* செய்ய மிகவும் உதவியது.
*ஹக்* ஐயரை பற்றிய விரிவான தகவல்கள் கிடைக்குமாயின் அவரின் நிர்வாக மீட்டெடுத்தல் தகவல்களை விரிவாக பதிகிறேன்.
*நிர்வாக குழப்பத்தினால் திருச்சபை முழ்கிபோனாலும் பல கிறிஸ்தவர்கள் மனம் மாறி சென்றாலும் மணவாட்டி திருச்சபையை ஒழுங்குபடுத்த ஆண்டவர் ஒரு போதும் மறந்ததில்லை.*
தொடரும்...
*By Sujith Rex (@iamsujithrex)*

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory