புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பகுதி -10

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பகுதி -10*
*_சோதனை மேல் சோதனை_*
கடந்த பதிவின் தொடர்ச்சி .....
நிர்வாகம் குழப்பத்தினால் இருந்தாலும் *விசுவாசத்தில்* நிலை பெற்றோங்கிய திருநெல்வேலி திருமண்டலம் அடுத்த அடுத்த சோதனைகளில் சிறிது பாதிப்படைந்தது என்றும் சொல்லலாம்.
என்னதான் *பாடுகளுக்கு* உட்படுத்தபட்டாலும் அதன் முடிவு *நிறைவான ஆத்தும ஆதாயமே* . எப்போதெல்லாம் கிறிஸ்தவ சபை சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் அது முன்பு இருந்தாதை காட்டிலும் *இருமடங்காய்* தேவன் ஆசிர்வதித்ததை நாம் காணலாம்.
இயற்கையின் பெரும் *கோரத்தாண்டவம்* முன்று மாவட்டங்களில் 1811-1813 வரை கொடூரமாக இருந்தது. 1811 துவக்கத்தில் தோன்றிய வழக்கத்திற்கு அதிகமான *வெள்ளமும்* , அதை தொடர்ந்து மாவட்டகளில் பரவிய பயங்கரமான கொடிய *காய்ச்சலும்* திருநெல்வேலி மட்டுமல்லாது இதர இரண்டு மாவட்டங்களையும் வாட்டிஎடுத்தது.
1813 ஆம் ஆண்டு இதற்க்கு பலியானவரில் போதகர் *வேதநாயகமும்* (போன பதிவில் நான் சொல்லிய அபிசேகம் செய்யப்பட்ட நன்கு உபதேசியார்களில் ஒருவர் ) ஒருவர்.கிறிஸ்தவர்கள் வெள்ளத்தாலும், நோயினாலும், அதை தொடர்ந்த பஞ்சத்தினாலும் பல இடங்களில் சிதரடிக்கபட்டனர்.
சில கிறிஸ்தவர்கள் அவர்களில் பூர்விக வழிபாடான *குலதெய்வ வழிபாட்டை* விட்டதால் தான் இதுபோன்ற சம்பவகள் நடைபெறுகிறது என்று நம்பினர். இது பத்தாது என்று மறைந்த போதகர் வேதநாயகத்தின் இடத்தை நிரப்ப போதகர் *ஆபிரகாம்* திருநெல்வேலிக்கு கொண்டுவரப்பட்டார் ஆனால் அவரும் *உடல்நல குறைவினால்* உடனே பொறுப்பேற்க முடியவில்லை. ஆனாலும் 1815 ஆம் ஆண்டு நோய் சரியாகி பொறுப்பு ஏற்றார்.
இயற்கையின் இத்தகைய கோரமான *செயலும்* , அதனை தொடர்ந்து *ஊழியர்களின்* *மறைவு* , *செயல்பட முடியாமை* போன்றவற்றால் சில கிறிஸ்தவர்கள் தாங்கள் *விட்டு* வந்த மதத்தை பின்பற்ற தொடங்கினர்.
ஆனால் இச்சோதனை முடிந்த பின்பு தான் சபை தாறுமாறாக ஓடும் *தண்ணீர்வெள்ளம்* போல பார்க்கும் இடமெல்லாம் பாயத்தொடங்கியது.
மிசனரிகள் வரத்தொடங்கினர்.
பல வெளிநாட்டு பயணிகள் இதன் பின்பு தான் திருநெல்வேலி சபையை மிகப்பெரிய விதமாக *புகழ்ந்து* எழுதினர். சபை மீண்டும் வளரத்தொடங்கியது.
_*திருநெல்வேலி சபையின் அஸ்திபாரம் நல் மீட்பர் கிறிஸ்துவே. எத்தனை முறை வெட்டுண்டாலும் மீண்டும் துளிர்த்து எழுந்துகொண்டே தான் இருக்கும்/ இருப்போம்.*_
தொடரும் .
*By Sujith Rex (@iamsujithrex)*

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory