புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பகுதி -9

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பகுதி -9*
_*நிர்வாக குழப்பத்தில் திருநெல்வேலி திருச்சபை*_
கடந்த பதிவின் தொடர்ச்சி
இவ்வாறு அற்பணிப்பிலும், விசுவாசத்திலும் உறுதியாக போய்கொண்டிருந்த சபைக்குள் தீடிரென்று *சலனங்கள்* கேட்க தொடங்கியது.
சத்தியநாதனின் கடைசி இரண்டு ஆண்டு ஊழியங்களில் அவருக்கும் அவர் உடன் ஊழியருக்கும் இடையே *கருத்துவேறுபாடு* ஏற்பட்டது. சத்தியநாதனை உள்ளூர் ஊழியர்கள் ஒரு *அன்னியராகவே* கருதினர்.
கிழக்கிந்திய வணிகரும் SPCK குழுவிற்கு ஊழியம் செய்தவராகிய *சாயர்* என்பவர் உள்ளூர் ஊழியகாரர்களுக்கு *ஆதரவளித்தார்.* எனவே கோலாப் என்னும் ஊழியரும் *சத்தியநாதன்* மீது வெறுப்பு கொண்டார். இதன்பின்பு சத்தியநாதன் *தஞ்சாவூர்க்கு* சென்று 1815 ஆம் ஆண்டு காலமானார்.சத்திய நாதன் ஓய்வு பெற்றபோது அவர் இடத்தை நிறைவு செய்ய அபிசேகம் பெற்ற ஊழியர்கள் இல்லாததினால் *ஞானபிரகாசம்* என்னும் சபை ஊழியர் சபையை மேற்பார்வை செய்வதற்கு அனுப்பப்பட்டார்.
ஆனால் ஞான பிரகாசம் *தஞ்சாவூர்* கட்சி காரர்களிடம் சேர்ந்து கொண்டு சாயரை *புறக்கணித்தார்* . அதனால் கோலாப் *LMS* லிருந்து *ரிங்கில்* டப்பே என்னும் என்னும் ஊழியரை ஏற்படுத்தினார்.
ரிங்கில் எப்போதும் ஒரு அசாதரணமான மனிதனாகவே இருந்தார். அவர் *SPCK குழுவினர் திருநெல்வேலி பணித்தளத்தை கைவிட்டுவிட்டனர்* என்று நினைத்து LMS இந்த பணித்தளத்தை எடுத்து கொள்ளுமாறு கடிதங்களை அனுப்பினார். LMS சில ஊழியர்களை நியமித்தது, பண உதவியும் செய்தது.ரிங்கிலின் செய்தி இதழ்கள் அப்போது வெளிவந்தது. அதில் அவர் பல சபைகளை பார்வையிட்டதை பற்றி விளக்குகிறது.
இது அனைத்தும் 4-2-1808 ஆம் ஆண்டு SPCK வின் *காதுக்கு* சென்று விட அவர்கள் கோலாப் செய்ததை மறுத்து *LMS சபையினரோடு எந்த ஒரு தொடர்பையும் வைத்துகொள்ள கூடாது* என்று அறிவுறுத்தியது.
எனவே LMS ஊழியர் ரிங்கில் தெற்கு திருவாங்கூரில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். ரின்கிள் வெளியேறிய பின்பு *ஜேம்ஸ்ஹக்* என்பவரை ஆலய குருவாக கொண்டு திருநெல்வேலி சபை இயங்கியது.
இந்த காலகட்டங்களில் பல *இன்னல்களும்* *சலனங்களும்* சபைக்குள் பெருகியது. *வேதாகமங்கள் நன்கொடைபணி நின்று போயிற்று.* தஞ்சாவூர் திருச்சபையால் ஊழியர்களை அனுப்பமுடியவில்லை. என்றாலும் அச்சபையின் நன்கு சபை *ஊழியர்கள்* அபிசேகம் செய்யப்பட்டு 17-4-1811 ஆம் நாள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
திருநெல்வேலி திருச்சபை என்னதான் பல நிர்வாக பிரச்சனைகளால் பாதிக்கபட்டிருந்தாலும் திருச்சபை மக்கள் தங்களின் *விசுவாசத்தை* *விட்டு* விலகி *செல்லவில்லை* .
ஆனாலும் அவர்களுக்கு சோதனை மேல் சோதனையாக அவர்களின் விசுவாசத்தை சோதிக்கும் படி அதன் *பின்பே* அவர்களுக்கு சோதனைகள் *காத்துகொண்டிருந்தது* .
தொடரும் .
By *Sujith Rex (@iamsujithrex)*

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory