புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பகுதி -8

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பகுதி -8*
_*ரொட்டிக்கும், காசுக்கும் மனம் மாறிய மக்கள்*_
கடந்த பதிவின் தொடர்ச்சி
*ஜெரிக்* என்னும் ஊழியர் 1802 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருநெல்வேலி சுற்றுத் பயணத்தை மேற்கொண்டார். அந்த சுற்று பயணத்தில் சுமார் *5474* பேருக்கு மேலானவர்களை கிறிஸ்துவின் பக்கம் திருப்பினார்.
ஆனால் கிறிஸ்தவத்திற்கு மாறுவது என்பது பலர் சொல்வது போல அவ்வளவு எளிது அல்ல.
1801 ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் *புரட்சிகாரர்களாகவும்* , *பிரிட்டிஸ் அரசிற்கு காட்டி கொடுப்பவர்களாகவும்* கருதப்பட்டதால் திருநெல்வேலி சபை மிகவும் *துன்பத்திற்கு* உள்ளானது. சபைகள் *அழிக்கப்பட்டன* . ஆனாலும் திருநெல்வேலி சபையை முழுவதுமாக *பெயர்த்தெடுக்க முடியவில்லை.*
இதன் தாக்கமே கிறிஸ்தவத்தை *வளர்த்தது* எனலாம்.
இந்த துன்பங்கள் வந்த பொது சத்தியநாதனின் சுற்று பயணத்தினாலும், சுவிசேஷ வாஞ்சையாலும் எக்காலத்திலும் கண்டிராத ஒரு *ஆத்தும ஆதாயம்* அங்கு காணப்பட்டது.
ஆனாலும் இந்த *புரளிபேச்சுக்கள்* நிற்கவில்லை. அவ்வாறு கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களுக்கு *பல நோக்கங்கள் அடிப்படையில்* தான் மாறினார்கள் என்று சொல்ல தொடங்கினர்.
அவற்றில் முக்கியமானது, *நவாப்* அரசர்களின் ஆட்சி கால அடக்குமுறைக்கு *கிறிச்தவம் ஒரு புகலிடம் என்பது* . ஆனால் நவாப் அரசாங்கம் ஆட்சி காலம் முடிந்து இந்த மகா ஆத்துமா ஆதாயம் என்பது *பிரிட்டிஸ் காலத்திலேயே* நடந்தது. உண்மையில் அவர்கள் கிறிஸ்தவர் ஆகுவதற்கு முன்னைவிட. பின்பு தான் *அதிகமான* *அடக்குமுறையை* அனுபவித்தனர்.
புதிதாக மனம் மாறும் கிறிஸ்தவர்கள் எந்த ஒரு *பொருளாதார சுகத்தையும்* *அனுபவிக்கவில்லை* என்பதே உண்மை.
கிறிஸ்தவர்களுக்கு *வரி விலக்கு* என்பதும் வெறும் *கற்பனையே* . அவர்கள் கிறிஸ்தவர்களாக மாற்றமடைந்த பின் *ஹிந்து* ஆலயத்திற்கு கொடுக்கவேண்டிய *வரியைதான்* கொடுக்க *மறுத்தார்கள்* தவிர *சட்டப்படி* அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டிய வரியை எப்போதும் *கட்ட* *மறுக்கவில்லை* .
*ஜெரிக்ஸ்* என்னும் ஊழியர் சென்னைக்கு திரும்பியப்பின் திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் *ஸ்தேவான் லூசிங்க்டனுக்கு* 15-12-1802 ஆம் ஆண்டு *கடிதம்* எழுதினார்.
அதில் “ *கிறிஸ்தவர்கள் அரசாங்க கீழ்மட்ட அதிகாரிகளால் கொடுமைபடுத்தபடுவதாக குறிப்பிட்டுள்ளார்.* "
இதன் அப்பறம் தான் கோர சம்பவங்கள் தொடர்ந்தது. அதில் மோசமான ஒரு சம்பவம் *முதலூர்* *ஆலயத்திற்கு தீ வைத்ததே* ..
திருநெல்வேலி ஆதிச்சபையினர் *ரொட்டிக்கும்* , *காசுக்கும்* *மனம்மாறவில்லை* . மாறாக கிறிஸ்துவுடன் சேர்ந்து *பாடனுபவிக்கவே* தங்களை தாமே ஒப்புகொடுத்தனர்.
திருநெல்வேலி திருச்சபையை மற்றோர் ஆதி திருச்சபை என்றே சொல்லலாம்.
தொடரும் ..
By Sujith Rex (@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory