புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பகுதி -7

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பகுதி -7*
*வேலையில்லா வாலிபனை எழுச்சி நாயகனாக பயன்படுத்திய ஆண்டவர்*
கடந்த பதிவின் தொடர்ச்சி
*சத்தியநாதன்* தனக்கு ஊழியத்தில் துணைக்கு ஆள் வேண்டும் என்று *சுவாட்ஸ்* ஐயரிடம் கேட்டிருந்தார். ஆகவே 1796 ஆம் ஆண்டு செப்டம்பரில் *தாவீது* என்ற பெயருடைய 21 வயது இளைஜன் ஒருவன் பாளையங்கோட்டைக்கு அனுப்பப்பட்டான்.
அவன் ஒருகாலத்தில் இந்து குடும்பத்தை சார்ந்தவன்.(பெயர் : *சுந்தரானந்தன்* ) சாத்தான் குளம் முதலூர் ஆகிய ஊர்களுக்கு இடையே உள்ள காலன் குடியை சார்ந்தவன்.
அவனது இளம் வயதில் தன் காலம் முழுவதும் வான சாஸ்திரம், மருத்துவம் , மந்திரவித்தை ஆகியவற்றில் கழித்து எந்த *வேலையும் செய்யாமல்* வாழ்ந்தான். எந்த வேலையும் செய்யாமல் இருந்ததால் அவனது சிற்றன்னை அவனை தயிர் கலக்கும் மத்தினால் *அடித்தாள்* . அவமானம் தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஒடி சியா வணிகர்களை தொடர்ந்து மதுரை திண்டுக்கல் வழியாக தஞ்சாவூரை அடைந்தான். அங்கு ஒரு சடைக்காரனுக்கு துணையாக இருந்தான்.
*இந்து வாலிபன் ஊழியானக மாறுதல்*
அதன் பின் சுவாட்ஸ் அவர்களுக்கு பயண வழிகாட்டியாக உள்ளவர்களால் *கோலாப்* ஐயரிடம் கொண்டுவரப்பட்டான். அவர் அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்து போதகம் பண்ணி நம்பிக்கையான ஊழியக்காரன் ஆக்கினார். சில நாட்களில் *தாவீது* தம் சொந்தக்காரர்பலர் வாழ்ந்து வந்த விஜயராமபுரம் என்ற ஊரில் சென்று இயேசுவை பற்றி அறிவித்தான்.
சத்திய நாதனும் அவரின் சபை ஊழியரும் 1797 ஆம் ஆண்டு அவரை சந்தித்தனர். அவர்களின் ஒற்றுமை அந்த இடத்தில் எழுச்சியாகிற்று.
தற்போது *கடாச்ச புரம்* என்ற ஊரின் மையபகுதியாக அமைந்திருந்த *சண்முகபுரம்* என்ற ஊரில் தாவிதின் உறவினர் பலர் உட்பட 20 பேர் முதல் குழுவினராக ஞானஸ்நானம் பெற்றனர். அக்டோபர் 1797ல் மேலும் 20 பேர் கொண்ட குழு ஞானஸ்நானம் பெற்றனர். அந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் பெருகினர்.
*உபத்திரவத்தின் மத்தியில் சபை*
ஆனால் அவர்களின் ஜெபவீடு பிற மதத்தினரால் இரு முறை *இடிக்கப்பட்டது* . ஆகையால் அவர்கள் ஒட்டு மொத்தமாக சில மைல் தூரமுள்ள *அடையல்* என்னும் இடத்திற்கு குடி பெயர்ந்தனர்.
தாவீது மறைதிரு *ஜெனிக்* அவரின் பெயரால் 1799 ஆகஸ்டில் அங்கு ஒரு நிலம் வாங்கி தம் உறவினர்களை அங்கு குடியேற்றினார். மேலும் அங்கு பாளையங்கோட்டை SPCK யை சார்ந்த நண்பன் *கேப்டன் எவரஸ்ட்* உதவியால் ஒரு கிணறை வெட்டினார். ஜெப வீடும் கட்டினார். திருநெல்வேலி மாவட்டத்தில் முதலில் முழுவதும் தூய கிறிஸ்தவரே அந்த இடத்தில் தங்கியதால் அது *முதலூர்* என்று அழைக்கப்பட்டது.
தொடரும்..
By Sujith Rex (@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory