புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பகுதி -6

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பகுதி -6*
(In the Beginning we are Luthrans)
கடந்த பதிவின் தொடர்ச்சி ....
சத்தியநாதன் திருநெல்வேலி சபைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பின்பு, *இராயப்பன்* என்ற நிர்வாக பணியாளர் தரங்கம் பாடியில் இருந்து வந்து தெற்குப்பகுதி கிறிஸ்தவரை பார்வையிட்டு சத்தியநாதனுக்கு வேண்டிய உறுதுணை புரிந்தார். சில நாட்கலுக்குள் தரங்கம்பாடிக்குதிரும்ப அழைக்கப்பட்டு இறையியல் பயிற்சி பெற்றார்.
அதன் பின் *லுத்தரன்* திருச்சபை ஒழுங்கிற்கேற்ப *29-12-1790* ஆம் நாள் அபிசேகம் செய்யப்பட்டார். 1790 ஆம் ஆண்டின் SPCK இன் ஆண்டறிக்கையிலும், கோலாப்[ என்பவரின் ஆங்கில மொழியாக்கத்திலும் சத்தியநாதன் ஆற்றிய சிறப்பான அருளுரையை காண முடியும்.
அபிசேகம் பெற்றப்பின்னர் சத்தியநாதன் அவர்கள் *பாளையங்கோட்டை* சபையின் ஆட்சி பொறுப்பை ஏற்றார். சுவாட்ஸ் ஐயர் சத்தியனாதனுடன் பணிபுரிய ஒரு கிறிஸ்தவ ஊழியரை அனுப்பிவைத்துள்ளார். *16-10-1791* ஆம் ஆண்டு சத்தியநாதனுடன் ஜெனிக் என்பவர் சேர்ந்து கொண்டார்.
மறைதிரு *ஜெனிக்* என்பவர் *27-8-1791* ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் சுவாட்ஸ் அவர்களால் இறைபயிற்சிக்கு தன்னை உட்படுத்தி கொண்ட *SPCK* ஊழியர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
இந்த கால கட்டத்தில் திருநெல்வேலி திருச்சபையில் *400* உறுப்பினர்கள் சேர்ந்திருந்தனர்.
*SPCK என்பது என்ன* ?
இதன் தமிழ் அர்த்தம் *கிறிஸ்தவ அறிவு அபிவிருத்திச் சங்கம்* .இது 1698 ல் இருந்து *டெனிஸ்* அவர்களால் அனுப்பட்ட பல *லுத்தரன்* மிசனரிகளின் சங்கம். கனம் *சுவாட்ஸ்* ஐயர் இதை சார்ந்தவரே என்று சொல்லலாம்.
இந்த தகவல் மிக முக்கியமானது ஏன் என்றால் பின் நாட்களில் ஏற்படபோகும் பல முக்கிய மாற்றங்களுக்கு இந்த *லுத்தரன்* அமைப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் முக்கியமானது *ரேனியஸ் ஐயரின் பிளவு.*
சரி இதை பற்றி நாம் தொடந்து காணலாம்.
*தொடரும்*
By Sujith Rex (@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory